நாம் எத்தனையோ உடல்களைக் கடந்து கொண்ட
பின் மனிதனை உருவாக்கியதனால் “இந்தப் பிள்ளை யார்...?” என்று கேள்விக்குறி வைத்துச் சிந்திக்கச் செய்கின்றார்கள்.
எதற்காக வேண்டி இப்படிச் சிந்தனை செய்யும்படி
வைத்துள்ளார்கள்?
1.எனது உடல்
2.எனது பிள்ளை
3.என்னுடையது என்று தான் நாம் நினைக்கின்றோம்.
4.அப்பொழுது இந்தப் பிள்ளை யார்?
உயிரால் உருவாக்கப்பட்ட அந்தப் பிள்ளை.
ஏனென்றால் அந்த உயிர் தான் நம்மை உருவாக்கியது.
“இந்தப் பிள்ளை யார்...!” என்றால் நாம் யாரால் அதை அறிகின்றோம்? ஆறாவது அறிவு கொண்ட கார்த்திகேயனால் அறிகின்றோம்.
இந்தப் பிள்ளை யார் என்ற வகையில் கேள்விக்குறியைப்
போட்டுச் சிந்திக்கப்படும்போது நம் வாழ்க்கையில் எப்படி சிந்தித்துச் செயல்பட
வேண்டும். எதன் வழிகளிலே நாம் வளர வேண்டும்? என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.
ஏனென்றால் இந்த உயிர்தான் எத்தனையோ கோடி
உடல்களைக் கடந்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது.
1.ஆகவே அந்த உயிரோட பிள்ளை தான்.
2.அந்த உணர்வு தான் நாம்.
இப்பொழுது கோபம் என்ற உணர்வு வந்துவிட்டால்
அது நானாகி விடும். நாம் கோபக்காரனாகி விடுவோம்.
அடிக்கடி நான் வேதனை என்ற உணர்வை எடுத்தேன்
என்றால் அந்த நான் ஆகின்றது. அப்போது நானாகப்போகும்போது வளர்ச்சியில் கனியாகிவிடுகின்றது.
கனியான பின் அந்த வேதனைப்படும் உணர்வைத்தான்
நான் சொல்வேன். அதை மீண்டும் நான் சொல்லப்படும்போது என்ன ஆகின்றது?
கனியாகிவிட்டால் அந்த வித்து நமக்குள்
முளைத்தே தான் ஆகும். முளைத்து அந்த வேதனைப்படும் நிலையை உருவாக்கிவிடும். அப்பொழுது
இதை மாற்ற வேண்டுமல்லவா?
1.ஒரு பருப்பை (தானியம்) வேக வைக்கவில்லை
என்றால்
2.அது மண்ணிலே போட்டால் முளைத்து விடுகின்றது.
3.ஆனால் வேகவைத்த பின் அதை மண்ணிலே போட்டால்
முளைக்குமோ?
4.முளைக்காது.
இதே மாதிரித் தான் வேதனைகளையோ கஷ்டங்களையோ
எதைப் பார்த்தாலும் அதையெல்லாம் வேக வைக்க வேண்டும்.
உங்களுக்குள் யாம் பதிவு செய்த அந்தத்
துருவ நட்சத்திரத்தினை நினைவுக்குக் கொண்டு வந்து ஈஸ்வரா என்று சொல்லி உங்கள் உயிரை
எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல்
வேண்டும்.
அது எங்கள் உடலில் படர வேண்டும். எங்கள்
ஜீவாத்மா பெற வேண்டும் என்று உடலில் செலுத்தும்போது
1.விஷத்தின் தன்மையான வேதனைகளையும்
கஷ்டங்களையும் வேக வைத்து
2.அதனுடைய சக்தியை இழக்கச் செய்துவிடும்.
3.அந்த உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டு
வரும்.
ஆகவே துருவ நட்சத்திரத்தின்
உணர்வுகளை நம் உடலுக்குள்ளே சேர்த்தோம் என்றால் தீமை செய்யும் எண்ணங்களை அழித்துவிடும்.
தீமையான உணர்வுகளை இப்படி எண்ணி வேக
வைக்க வேண்டும். அப்படி வேக வைத்தோம் என்றால் பிறர் தீமைகள் நமக்குள் விளையாமல் தடுக்க
முடியும்.
இந்த உணர்வுகள் வளர வளர உயிருடன்
ஒன்றி ஒளியின் சரீரமாக ஆக முடியும். அப்படிச் சென்றவர்கள் தான் துருவ
நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்.
அந்த எல்லையை நாம் அடைய முடியும்.