மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிகளில் அந்த
அருள் ஞானத்தை உணர்த்திக் கொண்டு வருகின்றோம். உங்களுக்குள் அதை வளர்த்துக் கொண்டு
வருகின்றீர்கள்.
அதையெல்லாம் நான் தெரிந்து கொண்டேன் என்ற நிலைகளாக நமக்குள் தெரிவதைக்
காட்டிலும்…
1.நாம் தெரிந்து கொண்டோம்,
2.நம் நண்பர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்ற நிலையாக வரவேண்டும்.
ஆனால் சந்தர்ப்பங்களில், இதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று அவர்கள் வரும் பொழுது அவருடைய காலத்தை அறியாதபடி நாம் சொல்லிக் கொண்டே இருப்போம்.
அப்பொழுது அவரும் தெரிய முடியாது, அவருக்குள் தெரிய வைக்கும் நிலையும்
நமக்குள் வராது.
ஆகவே நாம்.., அவர் தெரிந்து
கொள்ளவேண்டும், என்ற உணர்வை எடுத்து முடிந்தபின் நாம் பார்க்கும் நண்பரும் அது பெற
வேண்டும் அவர் வாழ்க்கையில் மகிழ்தல் வேண்டும், என்ற உணர்வினைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.
நமது வீட்டில் வெறுப்பு உணர்வுடன் யார் இருக்கின்றார்களோ அவரும் அருள் ஞானம் பெறவேண்டும் என்ற உணர்வைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
இது அவர்களுடைய உணர்வுடன் கலந்து அவர்கள் உடலில் சேர்க்கப்படும்போது அது இணையும். இணைந்த உணர்வுகள் அவர் உணர்வை மாற்றியமைக்கும் திறனாகச் செயல்படும்.
ஒரு மான் சாந்தமானாலும் “புலியின் உணர்வை அதற்குள் சேர்த்துக் கொண்டபின்” மான் இறந்தபின் - புலியின் ஈர்ப்பிற்குள் செல்கின்றது. இதைப் போன்று,
1.நமது வாழ்க்கையில் யார் நமக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்களோ
2.அவர்கள் அறியாத இருளிலிருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வை
3.நாம் நமக்குள் கலந்து வளர்த்துக் கொள்ளவேண்டும்.
நாம் தியானத்தின் முடிவில் இதை அவசியம் எடுத்துப் பழகவேண்டும்.
ஏனென்றால், அவர்களின் உணர்வுகள் நமக்குள் உண்டு. இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டு, அவர்களின் அறியாமை
நீங்கவேண்டும். அவர் பொருள் காணும் நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணினால்,
1.நமக்குள் அறியாமை நிலைகளை நீக்கி
2.உட்பொருளைப் பார்க்கும் நிலைகள் நமக்குள் வருகின்றது.
இப்படி இந்த உணர்வுகளை நமக்குள் கூட்டும் பொழுதும் அவர்கள் நம்மை எண்ணி ஏசுவார்களென்றால்,
1.நாம் எடுக்கும் இந்த உயர்ந்த உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக
2.அவர்களுக்குள் ஊடுருவும்.., இது அவர்களை மாற்றியமைக்கும்.
3.இல்லையென்றால் இந்த உணர்வின் நிலைகள் அவருக்குள் தடைப்படுத்தும் உணர்வாகி,
4.அழுத்தத்தை (அருள் உணர்வின்) அவருக்குள் உணர்த்தும் சக்தியாக மாறிவிடும்.
இன்று வேதனைப்படும் ஒருவரின் உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வுகள் நமக்குள் அதிகரித்துவிடுகின்றது.
நாம் நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்வதற்கு மாறாக, அந்த வேதனை உணர்வினை வளர்த்துக் கொண்டால் அவரின் வேதனை உணர்வுகள்தான் நமக்குள் அழுத்தமாகும், நல் உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றுகின்றது.
ஆகவே அருள் ஒளியை நமக்குள் எடுத்து நல்ல குணங்களைக் காத்திட வேண்டும்.
1.ஒவ்வொரு நொடியிலும்
2.பிறர் பேசும் உணர்ச்சிகள் நம்மைத் தூண்டினால்
3.நம் நல்ல குணத்தைக் காக்கும் திறன் நமக்குள் வரவேண்டும்.
நல்ல குணத்தை நமக்குள் காக்க வேண்டுமென்றால் அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்தல் வேண்டும். பிறர் செய்யும் தவறான உணர்வை இணைத்திடாது இது மாற்றுகின்றது.
துருவ நட்சத்திரத்தின் அருள் வட்டத்தில் நீங்கள் அனைவரும் இணைந்து மகிழ்ந்து
வாழ்ந்திட எமது அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின்
அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.