ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 15, 2017

“எல்லோருக்கும் நல்லது தான் செய்கின்றேன்… ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…!” என்றால் நன்றாக இருக்கும் நம்மை மாற்றுவது எது…?

நாம் பல விதமான குணங்கள் உடையவரைச் நாம் சந்திக்கின்றோம். அடிக்கடி கோபமாகப் பேசுவோரைப் பார்க்கின்றோம். அவர் உடலில் அந்தக் கோப உணர்ச்சிகள் கனியாகி முழுமை அடையப்படும்போது வித்தாகிவிடுகின்றது. (வினை – வித்து)

ஆனாலும், நமக்குள் நன்மைகள் செய்யும் உணர்வுகள் இருப்பினும் அன்றாட வாழ்க்கையில் மற்றவர்களுடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் வேதனையையும் இவையெல்லாம் நாம் நுகர்ந்து அறிந்து கொண்டேயிருக்கின்றோம்.

1.நுகர்ந்த உணர்வோ நம் உடலில் வித்தாகி
2.அந்த உணர்வின் உணர்ச்சிகள் வளர்ச்சியாகி
3.அதன் உணர்வுகள் நம் உடலில் அணுவாகி
4அணுவான பின் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.

இதற்கு முன்னாடி நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணங்கள் இருப்பதால் நாம் நன்மையைச் செய்கின்றோம். ஆனாலும் நன்மை செய்வதற்கு முன் அவர்களுடைய கஷ்டங்களைச் கேட்டறிகின்றோம்.

அவர்கள் சொல்லும் கஷ்டத்தை நாம் கேட்டறிந்தால் நாம் நுகரப்படும்போது அந்த உணர்ச்சிகளே நமக்குள் இயக்கி நம் உயிரிலே மோதி இந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதற்கும் பரவுகின்றது.

1.பரவப்படும்போது நம் உடல் ஒரு அரங்கம்.
2.சுவாசித்த உணர்வுகள் (உயிரிலே மோதினால் நாதம்) நம் உடலிலே படரும்போது “அரங்கநாதன்”.
3.அதே சமயத்தில் அந்த உணர்ச்சிகளே நம்மை ஆளுகின்றது “ஆண்டாள்”.

இப்படிக் நாம் நுகர்ந்த உணர்வுகளை உயிர் அதை அந்த உணர்ச்சிகளை அறிந்து உடலில் மீண்டும் அந்த அணுத்தன்மை வித்தாகி நமக்குள் விளையத் தொடங்கிவிடுகின்றது.

ஏனென்றால் மற்றவர்கள் கஷ்டம் என்ற உணர்வுடன் வரப்படும்போது அது அங்கே கனியாகி வித்தாகி விடுகின்றது. கனியாகாமல் எதுவுமே வித்தாவதில்லை. விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் அது மீண்டும் முளைக்கின்றது.

இதைப்போன்று ஒவ்வொரு மனித உடலிலும் பிறர் உடலில் இருக்கக்கூடிய கஷ்டங்களை உற்றுக் கேட்டால் அவையெல்லாம் வித்தாக நமக்குள் முளைக்கின்றது.

மற்றவர்கள்படும் கஷ்டங்களைப் பற்றி நாம் அடிக்கடி எண்ணும்போது அதை நாம் வளர்த்து நம் உடலில் வளர்த்து விடுகின்றோம். அப்பொழுது அதே வித்து நம்மிடத்திலும் விளையத் தொடங்குகின்றது. 

1.ஒரு வித்தை ஊன்றியபின் அதே செடியாக வளர்ந்து
2.பல வித்துகளை உருவாக்குவது போல
3.நம் உடலில் அதீதமான வித்துக்கள் உருவாக்கிவிடுகின்றது.

ஒரு வித்து செடியாகி வளரும் வளர்ச்சியில் மலர்கள் உருவாகின்றது. மலரானபின் மணத்தைப் பரப்புகின்றது. அதே போல பிறர் உடலில் விளைந்த (உணர்வுகளை) வித்துக்களை நாம் கேட்டறிந்து நம் உடலில் நாம் பதிவாக்கிக் கொள்கின்றோம்.

பதிவான பின் மீண்டும் அதை எண்ணி அவர் உடலில் விளைந்த அதே நோயை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம். அல்லது அவர்களின் வேதனை என்ற உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

அவர்கள்படும் வேதனைகளைச் சொன்னால் நாம் அதைக் கேட்டறிகின்றோம். அதன் பின் தான் உதவி செய்கின்றோம்.

“கடைசியில்…” நம் உடலிலும் வேதனையாகிவிடும்.

நாம் அடுத்தவர்களிடம் போய்
1.இந்த மாதிரி…, எல்லாருக்கும் உதவி செய்தேன்… எல்லாம் செய்தேன்…
2.“ஆண்டவன் என்னை சோதிக்கின்றான்” என்று
3.நமக்குள்ளே அதே வித்தை நாம் உருவாக்குகின்றோம்.

உருவானதை நம் நண்பர்களிடம் சொல்வோம். “நான் இத்தனையும் செய்தேன்…” என்று சொல்லும்போது அவர்களும் காதில் கேட்கிறார்கள். அவர்கள் உடலிலும் பதிவாகிவிடுகின்றது.

1.ஒரு நல்ல வித்தை நமக்குள் உருவாக்கி
2.நல்லதை எதாவது சொல்கின்றோமோ என்றால் இல்லை.
3.அந்த நல்லது சொல்வது என்பது சிறிது காலம் இருந்தாலும்
4.அடுத்தவர்கள் கஷ்டங்களைக் கேட்டு நமக்குள் எடுத்து
5.அவருடைய அந்த வேதனையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றதே தவிர
6.நமக்குள் இருக்கும் நல்ல குணத்தை வளர்த்துக் கொள்ளக்கூடிய நிலையே அற்றுப் போய்விட்டது.

ஆக முதலில் நாம் நன்மை செய்பவர்களாக இருப்போம்.

பிறருடைய கஷ்டங்களும் குறைகளும் அவர்களின் கஷ்டத்தினால் ஏற்பட்ட வேதனைகளும் நமக்குள் வித்தாகி வளர்ந்தபின் கனியாகி நம்மையும் கஷ்டப்படும் நிலைக்கு ஆளாக்கிவிடும்.

 நாம் யாரும் தவறு செய்யவில்லை. நாம் நுகர்ந்த உணர்வுக்குள் வரும் இத்தகைய தீமைகளை நமக்குள் வளராது தடுக்க வேண்டும். அதைத்தான் விநாயகர் சதுர்த்தி என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

சதுர்த்தி என்றால் “நிறுத்தி” என்று பொருள்.

1.தீமையான வினைகள் (வித்துக்கள்) நமக்குள் விளையாமல்
2.அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து அதை வினையாக்கி
3."ஞானக்கனியாக" நமக்குள் விளைய வைக்க வேண்டும் என்பதே
4.ஞானிகள் உணர்த்திய விநாயகர் தத்துவம்.