ஒரு பிரபஞ்சத்தில் பிறந்த நிலைகள் இந்தப் பிரபஞ்சத்திலிருந்து வெளிப்பட்டாலும் இதனின் உமிழ்ந்து
வெளிப்படும் உணர்வுகளைப் பிற சூரியன்களும் கவர்ந்து கொள்கின்றது.
ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்கின்றது. எவையும் பிரிந்து வாழவில்லை,
இன்று உள்ளது நாளை இல்லை என்ற நிலைகளில்தான் அகண்ட அண்டத்தின் செயல் உருமாற்றங்கள்
ஏற்பட்டுக்கொண்டே உள்ளது. எவையும் தனித்து இயங்கவில்லை.
இதைப்போன்று மனிதனானபின் எத்தனையோ நிலைகள் உருமாற்றி உருமாற்றி
1.பிறக்கும் பொழுதும் ரூபத்தின் நிலைகள் வேறு
2.வளர்ச்சி அடையும் பொழுதும் ரூபத்தின் நிலைகள் வேறு
3.முதிர்ந்தபின் உயிருடன் ஒன்றி விளைந்தது எதுவோ
அதைக் கொண்டு உருக்களை மாற்றிக்கொண்டே உள்ளது உயிர்.
ஆனால் மனிதன் அதைத் தடைப்படுத்தி உயிர் ஒளியானது போன்று உணர்வினை ஒளியாக மாற்றி என்றும் நிலையான
நிலைகள் செய்தவன் துருவனாகின்றான்.
அதைப் பெறச் செய்வதற்குத்தான் மீண்டும் மீண்டும் நினைவாக்கி துருவத்தினின்று
வெளிப்படும் உணர்வை
1.முதல் நிலைகளில் இந்தப் புவிக்குள் புகும் நிலைகளை
2.அந்த நினைவை ஊட்ட
3.உங்கள் நினைவை அதனுடன் கலக்க
4.அதனின் உணர்வை நீங்கள் எளிதில் பெறவே இந்தத் துருவ தியானம்.
நமக்கு ஒரு முறை வலித்தால், “ஆ…”வென்று இழுக்கின்றோம். அப்பொழுது வலி தெரியவில்லை.
அந்த “ஆ…”வென்று இழுக்கும் பொழுது உணர்வின் தன்மை அதிக நேரமானால் அந்த வலியின் உணர்வாக
அதன் வழி வருகின்றது.
மீண்டும் எதனால் வலி வந்தது என்று, திரும்பிப் பார்க்கின்றோம். அதன் வழி உணர்வினை
நுகர்ந்து வலிக்குண்டான உணர்வினை அணுவாக மாற்றுகின்றது நமது உயிர்.
1.அதைப் போன்று அரும் பெரும் பேரருளை
2.பேரொளியாக மாற்றிய உணர்வினை நினைவு கொள்ளும் பொழுது
3.உங்களுடைய நினைவின் ஆற்றல் வான மண்டலத்திற்கே செல்லுகின்றது.
எம்மை இப்படித் தான் குருநாதர் ஒன்றை உணர்ச்சி வசப்படும்படி செய்து அகண்ட அண்டத்தையும் உற்று நோக்கும் சந்தர்ப்பத்தைத் தன்னிச்சையாகவே ஏங்கிப் பெறும்படி செய்தார்.
மணிக்கணக்கில் சொல்லிக் கொண்டே இருப்பார். திடீரென்று, ஒரு உணர்ச்சியை தூண்டச்
செய்து தன் நினைவைத் தானே மேலே உற்று நோக்கும்படி செய்தார்.
அதைத் தான் என் குரு செய்ததை அவர் வழியில் நீங்கள் பெறவேண்டும்.
அகஸ்தியர் தன் தாய் கருவிலேயே பெற்று அகண்ட அண்டத்தையும் தன்னுள் நுகர்ந்து ஒளியாக மாற்றி துருவ நட்சத்திரமாக இருக்கின்றார், அதன் அறிவைத்தான்
செவி வழி ஓதி உங்கள் நினைவினை அங்கே அழைத்துச் செல்வது.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வரிசைப்படுத்தி
2.அதனுடன் சுழன்று உணர்வுகளைத் தனக்குள் சேர்க்கப்படும் பொழுது
3.அகண்ட அண்டத்தில் வருவதையும் உங்கள் உணர்வுக்குள்
4.அது பெறும் உணர்ச்சியின் நிலையை அணுவாக மாற்றும் நிலை கொண்டு
5.அது உருப்பெற்று விட்டால் தன்னிச்சையாக அது நுகரும் சக்தி பெறுகின்றது.
6.உங்களால் நினைத்த நேரத்தில் அகண்ட அண்டத்தினையும் அதன் செயலாக்கங்களையும் காணமுடியும்.
அதில் வெளிப்படும் உணர்வில் அருள்ஞானியின் உணர்வை உங்களுக்குள் சேர்த்துப் பகைமை உணர்வு உங்களுக்குள் வராது “பேரின்ப உணர்வினை” உங்களுக்குள் உருவாக்க முடிகின்றது,