இன்று உலக யுத்தம்
வரக்கூடிய நிலை உள்ளது. முந்தி நடந்த உலக யுத்தம் வேறு.
இப்பொழுது இந்த
மாதிரி வருவதற்கு முன் உங்கள் மனதை உங்கள் உணர்வை உயர்த்தி அந்த துருவ
நட்சத்திரத்தின் பவரைச் சேர்த்து ரிமோட் செய்யக்கூடிய
அளவிற்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களைத் தீமைகள் தாக்காதபடி
பார்த்துக் கொள்ள வேண்டும்.
கொசு நம்மைக்
கடிக்காது இருப்பதற்கு கொசுவர்த்திச் சுருள் இதைப் போன்ற மற்றவைகளை வைத்து இன்று
நம்மைக் காத்துக் கொள்கிறோம்.
அதே போன்று
ஒவ்வொரு நாட்டிலும் பாதுகாப்புக் கவசமாக அதாவது சில உணர்வுகள் அதாவது விஷக்
குண்டுகள் வராதபடி மேக்னட்டார் என்ற நிலைகளை வைத்து அன்று ஜெர்மன் நாட்டில்
செய்தான். 1942 உலக யுத்தத்தில் இதைச் செய்திருந்தான்.
1.மெக்னெட்டார்
என்றால் அதைத் தாண்டி விமானங்கள் போக முடியாது.
2.குண்டுகள்
பாய்ந்தால் அதைத் தாண்டிப் போக முடியாது.
3..அதன் அருகில்
வந்தால் கீழே தடுத்துவிடும் அதுதான் மேக்னட்டார் என்பது.
இன்று மேக்னட்டார்
என்றால் செட்டிலைட் (SATELLITE) போட்டு அந்தந்த நாட்டுக்கு
வேண்டிய பாதுகாப்பை வைத்துள்ளார்கள்.
அந்தப் பாதுகாப்பை
வைக்கும்போது மிக சக்தி வாய்ந்த குண்டுகளைச் சேர்த்துத் தன் நாட்டுக்குள்
வைத்திருந்தாலும் அதற்குத் தகுந்த மாதிரி இது இயங்கி தன் நாட்டுக்குள் விழுகாதபடி
திசையைத் திருப்பிவிடும்.
இதைப் போல ஒவ்வொரு
நாட்டிலும் பாதுகாப்பை வைத்திருந்தாலும்
1.இடைமறிந்து மற்றவன் போடும் குண்டும்
2.இவன் நாட்டிற்குள் வைத்திருக்கும் இரண்டும் வெடித்தே தீரும்.
3.வெடித்தபின்
இந்த உணர்வுகள் காற்று மண்டலத்துடன் கலக்கும்.
4.பூமி முழுவதும்
விஷத் தன்மை படரும்.
5.இதில் வாழும்
மனிதர்கள் இதைச் சுவாசித்தே ஆகவேண்டும். இதனால் பல நிலைகள் வருகின்றது.
இதிலிருந்து நம்மைக்
காக்க ஏதாவது வைத்திருக்கின்றோமா?
ஆகவே, இத்தகைய
விஷமான நிலைகளைச் சுவாசித்தாலும் நம்மைப் பாதுகாக்க “ஒரு அரண்.., மேக்னட்டார்” என்ற நிலையில் கட்டியே ஆக வேண்டும்.
துருவ
நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பெருக்கி அதை உங்களுக்குள் வலுவாக்கிவிட்டால்
உங்களுக்குள் தீமைகள் என்ற நிலைகள் புகாது தடுத்துக் கொள்ள முடியும்.
1.துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று
2.பெரிய அரணாக நம் உடலுக்குள் உள்ள
உணர்வின் அணுக்களை
3.மாற்றி அமைத்தே
ஆக வேண்டும்.
அதற்குத்தான் யாம்
இதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றோம். ஏதோ கதையாக விளையாட்டுத்தனமாகச்
சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம்.
கற்றவர்கள்
எத்தனையோ பேர் இருப்பார்கள். “படிக்காதவன்தான்” நான் பேசுகின்றேன்.
அந்த இயற்கையின்
நிலைகள் எப்படி இயக்குகின்றது. அதிலிருந்து நாம் எப்படி மீள வேண்டும் என்று குரு
எமக்குக் கொடுத்தார்.
1.இந்த உலகம்
எப்படி இயங்குகிறது?
2.இதிலிருந்து
மக்களை எப்படிக் காக்க வேண்டும்?
3.அவர்களையறியாது
வந்த தீமைகளை எப்படி மீட்க வேண்டும்?
4.தன்னிச்சையாக ஒளியை மக்களை எப்படிப் பெறச்
செய்யவேண்டும்? என்று
5.மாமகரிஷி ஈஸ்வராய
குருதேவர் கொடுத்த பக்குவத்தைத்தான் இங்கே கொண்டு வருகின்றேன்.
6.நீங்கள் எல்லாம்
உயர்ந்தால் இந்த நாட்டுக்கு நல்லது.
6.தீமையை
நீக்கிடும் சக்தியை நீங்கள் பெற்றால் உங்களுக்கு நல்லது உங்கள் வீட்டுக்கும்
நல்லது. உங்கள் ஊருக்கும் நல்லது.
வேதனை என்ற
உணர்வானால் சிந்தனை குறைந்து போர் முறையும் மற்ற நிலைகளும் வெறுப்பின் உணர்வுகளும்
கொலை செய்யும் நிலைகளும் தான் உண்டாகும்.
கொலை உணர்வுகளோ
வெறுத்துத் தாக்கும் உணர்வுகளோ இதைப் போல அல்லாதபடி மனிதன் மனிதனை மதிக்கும்
நிலையும் அந்த அருள் உணர்வைப் பெருக்கும் நிலையும் “உங்களிலிருந்துதான்” உருவாக்க
வேண்டும்.
நீங்கள் நுகர்வதைத்
தான் உங்கள் உயிர் உருவாக்குகின்றது. அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள்
மேக்னட்டார் என்ற அரணாக மாற்றுகின்றது.
தீமைகள் ஊடுருவி வராதபடி
அன்று ஜெர்மன் தன் நாட்டுக்குச் செய்த மேகனட்டார் திறனைப் போல
1,துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள்
மேக்னட்டாராக
2.ஒவ்வொரு
குணங்களிலும் பதியச் செய்து
3.தீமைகள்
உங்களுக்குள் வராதபடி பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இதன் வழி சீராகக்
கடைப்பிடிப்போர் அனைவருக்கும் எமது அருளாசிகள்.