ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 10, 2017

நம் வியாபாரம் சரியாக நடக்கவில்லை என்றால் மற்றவர்களைப் பார்த்து எப்படி வேதனைப்படுகிறோம்? அதனின் விளைவுகளை மாற்றும் வழி

நம் வியாபாரம் சரியாக நடக்கவில்லை என்றால் மற்றவர்களைப் பார்த்து எப்படி வேதனைப்படுகிறோம்? அதனின் விளைவுகளை மாற்றும் வழி

நாம் ஒரு கடையை வைத்துத் தொழில் நடத்திக் கொண்டு வருகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். நடத்திக் கொண்டு வரும்போது நம் தொழிலில் கொஞ்சம் குறை ஏற்படுகின்றது.

அப்பொழுது அந்தக் குறையை நீக்க வேண்டும் அல்லவா?

“நேற்று நன்றாக நடந்தது… இன்றைக்கு இப்படியாகிவிட்டதே…, நேற்று நன்றாக நடந்தது இன்றைக்கு இப்படியாகிவிட்டதே..,” என்று சொல்லிக் கொண்டிருப்போம்.

வெறுமனே சொன்னால் போதும். ஆனால் நாம் எப்படிச் சொல்கிறோம்? வேதனையோடு சொல்கின்றோம்.

வேதனையோடு எப்படிச் சொல்லுகின்றோம்?

1.அவனைப் பார்.., அவன் எப்படி எப்படியோ மோசமாக வியாபாரம் செய்கின்றான். அவனுக்கெல்லாம் அங்கு நன்றாக நடக்கின்றது.
2.அவனுக்கு அங்கு நன்றாக நடக்கின்றது. நமக்குப் பாருங்கள் நடக்கவில்லை.
3.நான் நல்ல சரக்கைத்தான் கொடுக்கின்றேன். யாரும் வாங்கவில்லை என்கிறோம்.
4.அப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்? அவர்களை உயர்த்த்துகின்றோம். நம்மைத் தாழ்த்தி விடுகின்றோம்.

இது தான் பார்வதி பஜே அரோகரா சம்போ மகாதேவா நாம் பார்வையால் பார்த்துப் பதிவாகி நுகர்ந்த உணர்வுகள் அதில் எந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ அதை அதிகமாகக் கவருகின்றது. (அவன் மோசமாக வியாபாரம் செய்கின்றான் அவனுக்கு நடக்கின்றது எனக்கு நடக்கவில்லை என்று இதையே தான் பார்க்கின்றோம்)

அப்பொழுது அதைக் கவராமல் தடுக்க வேண்டுமா இல்லையா?

இப்பொழுது நாம் மாற்று நிலைகளாக அவன் அவ்வாறு வியாபாரம் செய்தாலும் கூட நாம் அவன் உணர்வைச் சேர்க்காதபடி அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அவனுக்குள் தெளிந்த மனம் பெற வேண்டும். அவர்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று எண்ணிவிட்டால்
1.நமக்குள் கெட்டது வராமல் தடுக்கின்றோம்.
2.அவர்களுக்குள் இந்த நல்லதை உருவாக்கக்கூடிய அந்தச் சக்தியை பெறுகின்றோம்.
3.அப்போது அவன் உடலில் விளைந்த தீமையான வித்து நமக்குள் முளைக்காமல் தடுக்கலாம்.

ஏனென்றால் அவன் உடலில் காயாக இருக்கின்றது. காயாக உள்ளததை அந்த வித்தை எடுத்துப் போட்டால் முளைக்குமோ? முளைக்காது. ஏனென்றால் அவன் உணர்வு நமக்குள் விளையாதபடி காயாக்கி வைக்க வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று நாம் எண்ணினால் அவன் செய்யும் நிலைகளில் தீமை அங்கே கனியானாலும் அந்த வித்து நமக்குள் வராதபடி மாற்றிக் கொள்ளலாம்.

நாம் எடுக்கும் அருள் உணர்வுகள் துணை கொண்டு தெளிந்திடும் சக்தி நாம் பெறுவோம். அந்த உணர்வுகள் படரப் படர நம் வியாபாரம் செழிக்கத் தொடங்கும்.

நம்மிடம் சரக்கு வாங்குபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியுட்டும் நிலையாக அது அமையும். தொழிலை நாம் சீர்படுத்திக் கொள்ள முடியும்.