ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 6, 2017

பிறரை உயர்த்திட வாழும் மகரிஷிகளின் நிலை – “ரிஷி ரிஷிபத்தினி”

“நான் எல்லோருக்கும் நல்லது செய்து ஆண்டவனை வணங்கினேன்.., எனக்கு இப்படித் துரோகம் செய்துவிட்டார்களே” என்ற உணர்வு அதிகரிக்கப்படும் பொழுது இந்த உடலை விட்டுச் சென்றபின், ஆவேச உணர்வுதான் இருக்கும்.

யாரை எண்ணி இந்த ஆவேச உணர்வை வளர்த்துக் கொள்கின்றார்களோ அந்த உடலுக்குள் பேயாகத்தான் ஆட்டும்.

இந்த உணர்வை அங்கே அதிகமாக விளையச் செய்து அந்த விளைந்த உணர்வே இந்த உடலைப் பிளந்து மீண்டும் எல்லோரையும் பழி தீர்க்க வேண்டும் என்ற நிலையாக வந்துவிடுகின்றது.

1.“தன்னை மதிக்க வேண்டும்” என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது,
2.அந்த மதிப்பு கொடுக்கவில்லை என்றால் பகைமை உணர்வுகளை ஊட்டச் செய்து,
3.அவர்களை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்ற உணர்வுகள் வருகின்றது.

மற்ற உயிரினங்களை எடுத்துக் கொண்டால் அதில் ஆண் இனங்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் தன் கௌரவத்தைக் காக்க சண்டை போட்டுக் கொள்ளும்.

பெண் இனங்கள் சண்டை போடுவதில்லை. சண்டை போடுவதை வேடிக்கை பார்க்கும்.

ஆண் இனங்கள்தான் ஒன்றுக்கொன்று தன் வலிமையின் நிலைகளைக் காட்டும். இதைப் போலத்தான் அரச காலங்களில் போர் முறைகள் வந்தது.

ஆரம்பத்திலிருந்து உயிரினங்களிலிருந்து இந்த வளர்ச்சியில்தான் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம்.

இதைப் போன்று வளர்ந்து வந்த கலாச்சாரத்தில் இன்றைக்கும் மதங்கள் உருவாக்கப்பட்ட கலாச்சாரத்தில்
1.ஆண்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து
2.ஆண்களையே உயர்த்திக் காட்டப்பட்டு
3.அதன்வழிகளில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு
4.அடிமையின் உணர்வுதான் இன்று நம்மை இயக்கிக் கொண்டு வருகின்றது.

ஆனால், மகரிஷிகளும், ஞானிகளும், ஆண்பால் பெண்பால் என்று இருந்தாலும் அவர்கள் இரண்டற இணைந்து உணர்வினை ஒளியாக மாற்றி இந்த வாழ்க்கையில் வரும் இருளைப் பிளந்தவர்கள்.

இதுதான் “ரிஷிபத்தினி” என்பது.

அதாவது மகரிஷிகள் காட்டிய நெறியை தனது மனைவி ஏற்றுக் கொண்டு உணர்வின் செயலாக இயக்குவது. இரண்டும் கலந்த உண்ர்வுகள் வரப்படும் பொழுது கணவருடன் ஒன்றிய நிலைகள்.

இதைத்தான்
1.கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ
2.உணர்வின் இயக்கங்கள் எவ்வாறோ அதன் வழியில்
3.இந்த வாழ்க்கையில் தன்னை உயர்த்த வேண்டும் என்ற நிலையை இழந்து
4.“பிறர் உயர்த்தப்பட வேண்டும்” என்ற உணர்வுகள்
5.அவர்கள் உயரக் காரணமாகின்றது.

ரிஷிப்பத்தினியாக இவர்கள் இரண்டு பேருமே
1.அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
2.அவர்கள் பார்ப்போரெல்லாம் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று
3.உயர்வின் ஒளியைக் கூட்டி மற்றவர்களை உயர்த்த நினைத்தவர்கள்.

அந்த உயர்த்த வேண்டுமென்ற உணர்வுகள் இவர்களுக்குள் விளைந்து அதுவே அவர்கள் உயரக் காரணமாகின்றது.


இதுவே மகரிஷிகளில் கணவன் மனைவியாக இணைந்த நிலையில் “ரிஷிபத்தினி” என்பவர்களின்  செயலாகும்.