இந்தப் பிரஞ்சம் அழிந்தாலும் இதில்
ஒளியான உணர்வுகள் இந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அதீதமாகின்றது.
ஒளியின் உடலாக அது ஒரு பிரபஞ்சமாக மாறுகின்றது.
நம் சூரிய குடும்பம் எப்படியோ இதைப்போல உயிரணு தோன்றி... ஒளியின் உடலாக்கும் “அது ஒரு
பிரபஞ்சம்”.
இன்னும் எங்கேயும் உருவாக்கவில்லை.
இப்பொழுது இது உருவாகும்.
அப்படி உருவாக்கும் தன்மை வரப்படும்போது
நாளடைவில் இதனுடைய வளர்ச்சியில் ஒளியான பிரபஞ்சமாகும்.
1.எத்தனையோ கோடி சூரியன்கள் உருவானாலும்
பிரபஞ்சங்கள் உருவானாலும்
2.உயிரணு தோன்றி பிரபஞ்சத்தின் தன்மை
அடையும்
3.ஒரு ஒளியின் உணர்வின் பிரபஞ்சமாக அமையும்
தன்மை
4.நமது பிரபஞ்சத்தின் நிலைகளில் இருந்துதான்
உருவாகும்.
நமது எல்லையில் அந்தத் துருவ எல்லையில்
தான் இந்தப் பிரபஞ்சங்கள் அமைந்து இருக்கின்றது.
எது?
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்.
இது வளர்ச்சி அடையப்படும்போது அடுத்து...,
இதனுடன் சேர்ந்த 2000 சூரியக் குடும்பங்கள் அதுவும் வளர்ச்சி அடையப்படும்போது
அதுவும் இணைந்து ஒளியின் சிகரமாக மாறும்.
அந்த நிலை உருப்பெற எத்தனையோ கோடி ஆண்டுகள்
ஆகிவிடும்.
1.இருப்பினும் நம் உயிரின் தன்மை வரப்படும்
பொழுது என்றுமே ஏகாந்த நிலையாக
2.இந்த உடலுக்குள் சிக்கி உடலை வளர்க்கும் உணர்வுகளாக இல்லாதபடி
3.உயிரைப் போன்று ஒளியின் உணர்வாக நஞ்சை
ஒளியாக மாற்றும் தன்மை பெறுகின்றது.
ஏனென்றால் சிறிது காலம் தான் நாம் வாழ்கின்றோம்.
இராமேஸ்வரத்தில் அதைத்தான் காட்டுகின்றனர்.
சிறிது காலமே வாழும் இந்த மனித உடலில்
வாழும்போதே நமக்குள் மனதைக் குவித்து ஒன்றாக்கும் தன்மை வர வேண்டும்.
இந்த உடலுக்குள் பகைமை என்ற தன்மை விடாதபடி
குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் என்ற உணர்வைத் தனக்குள் சேர்த்து உயிரென்ற உணர்வின்
தன்மை நமக்குள் ஒன்றாக்குதல் வேண்டும்.
சாதாரண மனிதனும் இதைத் தெரிந்து வாழ்வதற்காகப்
புராணங்களை வைத்து ஒவ்வொரு நிலையும் கொண்டு வருகின்றனர் மெய் ஞானிகள்.