ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 18, 2017

நாம் பெறும் மெய் வழியே பெரிது - நம் செயல்களால் பிறர் மகிழ அதைப் பார்ப்பதே பெரிது என்ற இந்த மகிழ்ச்சியின் ஓட்டத்தைப் பெறவேண்டும்

“மனிதனின் கடைசி நிலை ஒளி சரீரமே” 

எனவே அதை விட்டுப் பரிணாம வளர்ச்சியில் நாம் மனிதனாக வளர்ந்தாலும் நமக்குள் ஆசாபாசமும் அரச மோகத்தின் நிலைகள் கொண்டு நம்மையறியாமல் விஷம் சூழ்ந்து கொண்டால் அதைத் துடைக்காத வண்ணம் விஷத்திற்குள் சிக்கிவிட்டால் விஷத்தின் சரீரமாக ஆரம்ப நிலையாக மிருக நிலைகளை நாம் பெற்றுவிடுவோம்.

அதிலிருந்து மீள்வதற்கு இதைத் தவிர வேறு சிறந்த வழி இல்லை. நீங்கள் அனைவரும் அந்த ஒளிச் சரீரம் பெறவேண்டுமென்று உங்கள் எண்ணத்தைக் கொண்டு தியானியுங்கள்.

1.யாரிடத்திலும் பிரதிபலனை எதிர்பார்க்க வேண்டாம்.
2.நம்மைப் புகழ வேண்டாம்.
3.புகழுக்காகச் செய்கிறோமென்று எண்ண வேண்டாம்.
4.மனதார நம் உள்ளத்திற்குள் எடுக்கின்ற உணர்வின் சக்தி
5.இந்த மகிழ்ச்சியின் நிலைகளில் பிறர் மகிழ
6.நம்மை அறியாமலே பிறர் மகிழ
7.நாம் அந்த மகிழ்ச்சியைச் சுவாசித்து
8.அந்த ஆனந்தத்தை நமக்குள் பெற இந்த எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும்.

இதுதான் மனிதனின் கடைசி நிலைகள்.

ஆக நாம் இதையெல்லாம் பெறுவோம் என்று உறுதிப்படுத்திக் கொண்டு இனியும் பெறவேண்டும் என்று எல்லா மகரிஷிகளை வேண்டி யாம் பிரார்த்தித்துக் கொள்கின்றோம்.

நாமும் இத்தகைய வாழ்க்கையில் எத்தகைய இன்னல்கள் இருந்தாலும் அத்திரிமாமகரிஷியைப் போன்று இந்த வாழ்க்கையில் வரக்கூடிய நிலைகள்
1.நமக்குள் “அது பெரிது…, இது பெரிது… என்ற நிலையை உதறித் தள்ளிவிட்டு,
2.”நாம் பெறும் மெய் வழியே பெரிதுஎன்றும்
3.நாம் செயல்படுத்தும் நிலைகளில் பிறர் மகிழ நாம் பார்ப்பதே நமக்குப் பெரிது. 
4.அந்த மகிழ்வான உணர்வு “நமக்குள் விளைந்த அந்த ஒளியின் தன்மையே நமக்குப் பெரிதுஎன்ற இந்த மகிழ்ச்சியின் ஓட்டத்தை நீங்கள் பெறவேண்டும்.

இந்த எண்ணத்துடன் வாழ்க்கையை நடத்துங்கள்.

உணர்வைத் தனக்குள் ஒளியாக மாற்றி கடைசி நிலை பெறத் தகுதியானதுதான் மனிதனின் இந்தச் சரீரம். நாம் அனைவரும் அதை விரும்ப வேண்டும்.

ஏனென்றால் விஷத்தைத் தனக்குள் அடக்கி ஒளியாக மாற்றும் எண்ணம் வேண்டும். நாளை இந்த உடலை விட்டு இந்த உயிராத்மா சென்று தான் ஆகவேண்டும்.

இந்த முறைப்படி பழக்கிவிட்டால் நாம் உடலை விட்டுச் சென்றபின் நம் குழந்தைகள் இதைப் போன்று சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அந்த உயிராத்மாக்கள் ஒளிச் சரீரம் பெறவேண்டுமென்று உந்தி அவர்கள் தள்ளலாம்.

நாம் இதைப் போன்று மூதாதையரகளின் உயிராத்மாக்களை விண்ணிலே செலுத்தி அந்த சத்தின் நிலையை நாம் பெற்றுக் கொண்டால் நமது உணர்வின் எண்ணம் அந்த சப்தரிஷி மண்டலங்களுடன் தொடர்பு கொள்கின்றது.

நாம் இந்த உடலை விட்டுச் சென்றபின் கடைசி நிமிடம் வரையிலும் அந்த எண்ணங்கள் நமக்குள் ஓடிக் கொண்டேதான் இருக்கும்.

இந்த உணர்வின் துடிப்பலைகள் கொண்டு நாம் இதைப் போல அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று அந்த உயிராத்மாக்களை உந்தித் தள்ளினால்தான் அந்த உயிராத்மாக்கள் அங்கே செல்ல முடியும்.


இதுதான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய பேரானந்தப் பெருநிலை.