ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 30, 2017

“உருவ வழிபாடு இல்லை… அது கூடாது…,” என்று சொல்பவர் எவராக இருந்தாலும் “உருவமில்லாது வணங்குவோர் யாரும் இல்லை”

ஆண்டவனாக இருப்பது நம் உயிர். ஈசனாக இருந்து உருவாக்குவதும் உயிர். நாம் எண்ணியதை உள் நின்று செயலாக்கும் தெய்வமாக இருப்பதும் அது தான்.

நம் உள் நின்று அது இயக்கப்படும் பொழுது அதுவே நம் எண்ணத்தால் உருவான அந்த அணுவின் தன்மை கடவுளாக இருக்கின்றது.

“தனித்த கடவுள்” எவரும் இல்லை.

உணர்வுக்கொப்ப அந்தச் செயலுக்கொப்பத்தான் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்த நிலையைத் நாம் அறிந்து கொள்வதற்குத் தெய்வங்களாகக் காட்டப்படுகின்றது.

நாம் பார்க்கின்ற மாதிரி சிவன் இப்படி உருவத்தில் இல்லை. முருகன் இப்படி இல்லை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான உருவங்களைக் காட்டிக் கடவுள் இப்படித்தான் இருந்தார் என்று அதன் வழி வகுத்துக் கொண்ட நிலைகள் தான் இன்று அவர்கள் கொடுத்த காவியத்தைப் பதிவாக்கி இந்த உணர்வே அவர்கள் உடலுக்குள் நின்று கடவுளாக உருவாகின்றது.

உலக மதங்கள் அனைத்திலும் இப்படித்தான் உருவாக்கிக் கொண்டார்கள்.

கடவுள் இப்படித்தான் இருந்தார் என்று கற்பனை செய்து கொண்டு அதற்குத்தக்க உருவத்தைக் கொடுகின்றார்கள்.
1.உருவம் இல்லாத நிலைகள் எதுவும் இல்லை.
2.கடவுள் உருவமே இல்லாதவர் என்று சொல்வார்கள்.
3,அரூபி என்றும் சொல்வார்கள்.
4.ஆலயங்கள் அமைக்கப்படும் பொழுது (எந்த ஆலயமாக இருந்தாலும் சரி) இந்த உருவத்தின் நிலையையே அங்கே உருவாக்குகின்றார்கள்.

அதற்குப் பெயரில்லை என்பார்கள். ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு ஞானிகளின் பெயரை வைத்திருப்பார்கள்.

மதங்கள் உருவமில்லாத நிலைகளில் அரூபியாகத்தான் கடவுள் செயல்படுகிறார் என்று சொல்வார்கள்.

இல்லை.

கிருஸ்தவர்கள் இயேசுவை உருவமாக வைக்கவில்லையா...! அதே மாதிரி இங்கே உருவமாக மசூதியை வைத்துத் திரையைப் போட்டு மூடவில்லையா...!. அதற்குள் மறைந்துள்ளார்கள் இன்னார் மகான் நல்லவர் என்பார்கள்.

இதுவும் உருவ வழிபாடுதானே.

1.நமக்குள் மறைந்த குணத்தின் செயலாக்கங்களை உருவமாக்கி
2.இன்னென்ன குணங்கள் இன்னது செய்யும் என்று தெய்வ நிலையாக்கி
3.நம்மை அறியும்படி செய்தார்கள் ஞானிகள்
4.இதுவும் உருவ வழிபாடு தான்.

உருவ வழிபாடு இல்லை கூடாது என்று சொல்பவர் எவராக இருப்பினும் “உருவமில்லாது வணங்குவோர் யார் இருக்கின்றனர்…?”

யாருமே இல்லை.

ஒரு உருவத்தை வைத்துத் தான் உருவத்தின் தன்மை தனக்குள் எடுத்துக் காவியத்தைப் பதிவு செய்து அதன் உணர்வே இவர்களுக்குத் தோற்றமாகின்றது.

1.ஒன்று சக்தியாக இருந்த பின் ஒன்றுடன் இணைந்தால் உருவமாகின்றது.
2.உருவமான பின்தான் உணர்வின் தன்மை அதற்குள் சேர்ந்து இணைந்து செயல்படும் சக்தியே வருகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.