ஒரு சமயம் உண்மையில் நடந்த நிகழ்ச்சியை குருநாதர் காட்டினார்.
(என்னுடைய சிறு வயதில்) நாங்கள் குழந்தைகளாக இருந்தபொழுது ஒரு மரத்தைச் சுற்றி இருந்த
திட்டில் அமர்ந்து விளையாடிக்
கொண்டிருந்தோம். அந்த திட்டிற்குக் கீழ் சந்தும் பொந்துமாக இருந்தது.
ஒருவன் தன் காலை ஆட்டிக் கொண்டு இருந்தான். அந்தப் பொந்திற்குள் “நல்ல பாம்பு” இருந்தது. அது
அவனைத் தீண்டிவிட்டது. அது கடித்தது அவனுக்குத் தெரியவில்லை. ஏதோ பூச்சி கடித்துவிட்டது
என்று இருந்துவிட்டான்.
இரண்டு மாதம் கழித்து அதே இடத்திற்கு விளையாடச் சென்றோம். உட்கார்ந்து இருந்த இடத்திலிருந்து பாம்பு தலையை நீட்டியது.
1.அன்றைக்கு இந்தப் பாம்புதான் கடித்தது என்று எண்ணினான்.
2.அப்படியே மயங்கி விழுந்துவிட்டான்
3.அந்த உணர்வு வேகமாக இழுத்து உடலில் பரவுகின்றது.
சிறு பிள்ளையாக இருந்த பொழுது எனக்குத் தெரியாது. ஆனால், குருநாதர் நினைவுபடுத்துகின்றார்.
அன்று திட்டு மேல் அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டிருந்தான் இரண்டு மூன்று முறை கொட்டியிருக்கின்றது. “எறும்பு கடிக்கின்றது” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
ஆனால், அதே இடத்தில் இரண்டு மாதம் கழித்துப் பாம்பை பார்த்தவுடன் இதுதான் அன்றைக்கு நம்மைக் கடித்தது
என்று எண்ணியவுடன் அப்படியே கீழே விழுந்துவிட்டான். கண்கள் நீல நிறமாகிவிட்டது.
அது வரையிலும் அவனை ஒன்றுமே செய்யவில்லை. அந்த எண்ணம் வந்தவுடன் வேகமாக இழுத்து
அதைச் செய்தது.
அதிலிருந்து மேடை மேல் உட்காருவதை விட்டுவிட்டேன். நீ சிறுவனாக இருந்த பொழுது
இந்த நிகழ்ச்சி நடந்தது என்று குருநாதர் எம்மிடம் சுட்டிக் காட்டுகின்றார்.
எண்ணங்களைப்பற்றிச் சொல்லும் பொழுது இதைச் சொல்லுகின்றார்.
விபத்தான நேரங்களில் சிக்கிக் கொண்டபின் ரொம்ப பதட்டப்படுகின்றோம். ஏதாவது சந்தோஷமாக பேசிக் கொண்டு இருக்கும்பொழுது அந்த நிகழ்ச்சியைச் சொல்ல ஆரம்பித்தால் அந்த சமயம் மயக்க
நிலை வரும். உடனே அந்த அணுக்கள் பெருக ஆரம்பிக்கும்.
பஸ்ஸில் போகும்பொழுது விபத்துகளைப் பற்றி யாராவது சொன்னால், அதை நீங்கள் கேட்டால்
அதே உணர்வுகள் காற்றில் அலையப்படும் பொழுது பஸ் டிரைவரையும் தாக்கும்.
எப்பொழுதும் பஸ்ஸில் போகும் பொழுது விபத்துகளைப் பற்றி பேசக்கூடாது. பேசினால் கேட்பவருக்கும் பயமாக இருக்கும். அந்த உணர்வுகள் டிரைவரையும்
தாக்கும்.
அதே மாதிரி பஸ்ஸில் இடம் மாறி உட்கார்ந்து கொண்டாலும் அதற்குத் தக்க விபத்தாகி
இவர்களைத் தூக்கி எறியும். அந்த உணர்வுகள், ரிமோட் (remote) செய்து கொண்டேயிருக்கும்.
“இந்த உணர்வுகளின் இயக்கம் அப்படி…!” என்று குருநாதர் சொல்லுகின்றார்.
எப்படியெல்லாம் உணர்வு இருக்கின்றதோ அதற்குத்தக்க மாதிரி நமது வாழ்க்கையில் அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக நம்மை மாற்றி என்ன செய்யச் சொல்லுகின்றது? சொன்னது எப்படி நமக்குள் உணர்ச்சிகளாக மாறுகின்றது,
விபத்துகளில் சிக்குவதையெல்லாம் குருநாதர் காட்டுகின்றார். அதனால், பஸ்ஸில் போகும்
பொழுது விபத்துக்களைப் பற்றிப் பேசாது நல்ல விஷயங்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டு
போகவேண்டும்.
1.எந்தச் சந்தர்ப்பத்திலும் எத்தகையை சூழ்நிலையிலும்
2.மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு
3.அந்தத் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற நினைவினை
வலுக் கூட்டினால்
4.நமக்கு மகரிஷிகளின் அலைத் தொடர் கிடைத்து
5.காக்கும் உணர்வாக நம்மையும் காத்து மற்றவரையும் காக்க
முடியும்.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.