ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 18, 2017

உயிர் தாயாக இருந்து இந்த உடலை வளர்க்கின்றது...!

1.நம் உடலுக்குள் பல உணர்வுகள் இருப்பினும்
2.அதனதன் உணர்வுகள் பெற்ற அணுக்கள் அது அது வளர்வதற்கு
3.அதனதன் செயல்களை உருவாக்கும்.

அதற்கு உணவு கொடுப்பது உயிரான தாய் தான்.

உதாரணமாக விண்ணிலே தோன்றிய ஒரு உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் வந்து ஒரு பருத்திச் செடியின் மீது வீழ்ந்தால் ஒரு புழுவாக உருவாகின்றது.

பருத்திச் செடியில் உருவாக்கிய அந்த அணு உயிர்தான் உருவாக்கியது. ஆனாலும் அதில் உருவான அந்த அணுவின் தன்மை
1.தன் பசிக்கு ஏங்கப்படும்போது
2.இங்கே இல்லையென்றால் அது நுகர்ந்து
3.அது (பருத்திச் செடி) இருக்கும் பக்கம் நகர்ந்து செல்லும்படி வைக்கின்றது அந்த அணு. 

அது தான் மூஷிகவாகனா. கணங்களுக்கு அதிபதி கணபதி.

அப்போது அந்தப் புழுவின் உடலில் பருத்திச் செடியின் அணுக்கள் அதிகமாக இருப்பதனால் இந்த உடலை இயக்குவது “கணங்களுக்கு அதிபதியாக இருந்து” இயக்குகின்றது.

ஆகவே இதைச் சுவாசித்து
1.இங்கே இல்லை என்றாலும்
2.இன்னொரு பக்கத்திற்கு அது நகர்த்திச் சென்று
3.அதை உணவாக உட்கொள்ளும் நிலையை உருவாக்குகின்றது.

பறவை இனங்கள் மரத்தின் மேல் குஞ்சு பொரிக்கின்றது. குஞ்சுகளோ அது இரை தேடிச் செல்லும் வழியில்லை.

இருப்பினும் தான் முட்டையிட்டு கூட்டிலே இந்தக் குஞ்சுகளைப் பொரித்துவிட்டால் அதற்குப் பாதுகாப்பான கூடுகளைக் கட்டிவிட்டு தன் இனத்திற்கு அது உணவைத் தேடிச் சென்று எடுத்து வந்து குஞ்சுக்கு அது இரை கொடுக்கின்றது.

1.அதிலே விளைந்த உருவான அந்தக் குஞ்சுகளோ
2.இந்தத் தாயின் சப்தத்தைக் கேட்டால் போதும்
3.“ஆ…” என்று வாயைத் திறந்து ஒன்றோடு ஒன்று சப்தம் போட்டு வாயைத் திறந்துவிடும்.

இதைப் போலத்தான் இந்த உயிர் பருத்திச் செடியின் சத்தை அது நுகர்ந்த பின் கருவாகி அந்த அணுவின் தன்மை உருவாகியபின் தன் பசிக்காக ஏங்குகின்றது.

அது ஏங்கும்போது
1.உருவாக்கிய அந்த “உயிர் தான்” இதற்குத் தாய்.
2.அதனுடைய உணர்வின் தன்மை இந்த “உடல் தான்” தந்தை.

இந்தத் தந்தையின் வலுவின் தன்மை கொண்டுதான் தாயின் இயக்கமே உள்ளது என்பதை வேதங்களில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது, இதை நாமும் தெளிவாகத் தெரிந்து கொள்வது நலம்.

ஆகவே நம் உயிர் தாயாக நின்று இந்த உடலைக் காக்க எண்ணுகின்றது.

இதைப் போலத்தான் அந்த உயிர் முதலில் அந்தப் பருத்திச் செடியில் உருவான அந்த அணுவின் தன்மைக்கு அந்தச் செடி எங்கே இருக்கின்றதோ அதன் பக்கம் மணத்தை நுகர்ந்து இதுவே அழைத்துச் சென்று அங்கே கொண்டு அது உணவாக ஊட்டச் செய்கின்றது.

இது பரிணாம வளர்ச்சியில் இவ்வாறு நகர்ந்து சென்று அது செயல்படுத்துகின்றது. 

உயிரின் இயக்க நிலைகளையும் நாம் சுவாசிக்கும் உணர்வின் நிலைகளையும் உடலுக்குள் உருவான அணுக்களின் உண்மைகளையும் அறிந்து கொண்டால் “தன்னைத்தான் அறிதல்” என்று நம்மை நாம் அறிந்து கொள்ள ஏதுவாகும்.