ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 10, 2017

“நம்முடைய வேலை” எதுவாக இருக்க வேண்டும்?

“எல்லா உயிரும் கடவுள்… எல்லா உடலும் கோவில்…,” அந்த கோவிலுக்குள் அசுத்தம் சேராது அருள் ஒளியென்ற உணர்வை படரச் செய்து மகிழ்ச்சி என்ற உணர்வை ஊட்டுவதே நம்முடைய வேலையாக இருக்க வேண்டும்.

1.பிறரின் உணர்வை நமக்குள் சேரவிடாமல்
2.நாம் நம் உடலான கோயிலுக்குள் அருள் ஞானத்தைப் புகுத்தி
3.இந்தக் கோயிலை எப்போதும் மகிழ்ச்சி என்ற நிலைகளில் உருவாக்க வேண்டும்.

குருநாதர் எனக்கு இப்படித்தான் உபதேசித்தார்.

அவர் என்னைப் புருவ மத்தியில் பார்க்கச் சொன்னார். அதே மாதிரி நீங்களும் பாருங்கள். குரு காட்டிய அருள் வழியில் அருளுணர்வுகளைப் பெறுவோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று உங்கள் புருவ மத்தியில் ஏங்கியிருங்கள். அது சமயம்,
1.இந்த உணர்வுக்குள்ளும்
2.நம் குரு உணர்வுக்குள்ளும்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுக்குள்ளும்
4.நம் உணர்வுகள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்க்கிறோம்.
5.அப்படி ஒன்றாகச் சேர்த்து வலிமையான நிலைகள் பெறச் செய்கிறோம்.  
     
ஆகையினால், அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் சேர்ப்போம். அதை எல்லோரையும் பெறச் செய்வோம்.

உலகம் அனைத்தும் நம் உடல். உலகம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் இந்த உடலான உலகிற்குள்ளும் அருள் உணர்வுகள் நலம் பெறும் சக்தியாக மாற வேண்டும்.

எல்லோருடைய உணர்வையும் சேர்த்துத் தான் நம் உடல் இயங்குகின்றது. நாம் தனித்து வாழவில்லை. ஆகவே
1.நீங்கள் அனைவரும் மெய்பொருள் காணும் திறன் பெற்று,
2.உங்கள் குடும்பத்தில் அதை பரவச் செய்து,
3.உங்கள் தெருவுக்குள்ளும் அதை பரவச் செய்து
4.உங்கள் ஊருக்குள்ளும் அதை பரவச் செய்யுங்கள்.


இந்த உலகமே முழுமையாக உய்யவேண்டும் என்ற நிலைக்கு நாம் வரவேண்டும்.