1.ஈசனுக்கு முன் நாம்
எல்லோரும் ஒன்று.
2.நாம் உருவாக்கும்
நிலைகள் எல்லாம் ஒன்றி நமது உயிர் ஈசனாகின்றது.
3.அவன் அமைத்த கோட்டை
இந்த உடல்.
4.இந்த கோட்டையை நாம்
எப்போதுமே புனிதப்படுத்த வேண்டும்.
5.அவனுக்குள் ஒன்றி
அவனாகவே ஆகவேண்டும்.
“என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா” என்று நாம் சொல்லும் இந்த உணர்வுகள் ஒலி, ஒளி என்ற நிலையில்
“உயிர்” என்று ஆகின்றது.
“நீயே தான் நான்..., நானே தான் நீ…”என்று உயிரோடு ஒன்றி “ஒளியென்ற நிலை” நாம் என்றும் பெற்றிடுவோம்.
இந்த உலகில் எது எப்படி
இருந்தாலும் அந்த அகஸ்தியன் உணர்வு ஒன்றுதான் இந்த உலகை இருளில் இருந்து மீண்டும் மீட்கும்.
இது நிச்சயம்.
அதனால் தான் தெற்கே
தோன்றிய நிலைகளில் சில முக்கிய தத்துவம் உண்டு. பல அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
நமது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருக்கும் அதில் பங்கு உண்டு.
இருந்தாலும் இதனை எடுத்துப்
பெருமைப்பட வேண்டியதில்லை. உங்கள் உணர்வில் நீங்கள் அறிந்து கொள்ளக் கூடிய நிலையை வளர்த்துக்
கொள்ளுங்கள்.
இத்தகைய ஞானத்தின்
நிலைகளில் தனக்குள் பெருக்கி கூடுவிட்டுக் கூடு பாய்ந்தார் நமது குருதேவர். தெளிந்த
மனம் கொண்டு “கோடி” என்னும் கடைசி நிலையான
“ஈஸ்வரா..” என்ற உணர்வின் தன்மையைப் பெற்றவர்.
அவரின் அருள் துணை
கொண்டு அந்த பேரருளைப் பெற்றோம். அந்தப் பேரருளைக் கொண்டு நாம் அனைவரும் அந்த பேரொளியைப்
பெறவேண்டும், நிச்சயம் பெறுவோம்.