ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 8, 2017

உங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் “ஒளியாக மாற்றிடும்” பரிபக்குவ நிலை

யாம் ஏட்டைப் படிக்கவில்லை. குரு அருள் உணர்வை எடுத்து நினைத்து யாம் அதன் வழியில் நடந்தோம். அனைத்துச் சக்திகளும் இந்தக் காற்றில் இருக்கிறது. அனைத்தையும் நீங்களும் அறியலாம்.

நல்லதை நீங்கள் சேமிக்கலாம். நல்லதை நீங்கள் பெறுவதற்குதான் இதை உபதேசிப்பது.
2.தீமை எப்படிச் சேர்கிறது,
3.தீமையை நீங்கள் எப்படி மாற்றுவது? என்று
4.அந்த மெய்ஞானிகளின் அருள் உணர்வைச் சேர்க்கும் போது நாம் நுகர்கின்றோம்.

இந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கிறது. கூடுமான வரையிலும்,  உங்கள் உடலிலுள்ள அணுக்களுக்குக் கொஞ்சமாவது போய்ச் சேரவேண்டும்.  இதை நீங்கள் பெறுவதற்காகத்தான் உபதேசிக்கின்றோம்.

இப்பொழுது உபதேசிக்கும் இந்த உணர்வு கொஞ்சம் சேர்ந்தவுடன் உங்கள் உடலிலுள்ள மற்ற தீய அணுக்கள் கொஞ்சம் மூச்சுத் திணறும். மூச்சுத் திணறும் போது, இதை (அருள் உணர்வுகளை) கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து இதைச் சேர்க்க வைத்துவிட வேண்டும்.

ஏனென்றால், யாம் உபதேசித்துக் கொண்டே இருக்கிறோம். நீங்கள் நுகர்ந்து கொண்டே இருக்கின்றீர்கள். உங்களுக்குள் கலந்து கொண்டே இருக்கும். யாம் கலக்கச் செய்கிறோம்.

எமக்கு குருநாதர் மணிக்கணக்கில் கொடுத்தார். இரண்டு நாட்கள் கூடப் பட்டினியாக இருக்க வைத்துவிடுவார். எமக்குச் சாப்பாடு அந்த அருள் சாப்பாட்டை கொடுப்பார். என் உடலிலுள்ள நல்ல அணுக்களுக்கு அந்தச் சாப்பாடு கிடைக்கும்.

அதனால்தான் சாமி அதிக நேரம் பேசுகிறார். மூன்று மணி நேரம் ஆறு மணி நேரம் கூட பேசுகிறார் என்று சிலர் எண்ணிவிடுவார்கள். இதை எல்லாம் உங்களிடம் அருள் சக்தியை பெறச் செய்வதற்குத் தான் இந்த நிலைகள்.

ஒரு நிமிடத்தில் சொன்னால் என்னவாகும்?

அருளுணர்வை உங்கள் இரத்தத்தில் கலக்கச் செய்து கெட்ட அணுக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கச் செய்ய வேண்டும். அருள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புகுத்தி வைக்க வேண்டும்.

எனென்றால் அந்த வழி தெரியவேண்டும்.

விஞ்ஞானி காற்றின் அழுத்தத்தைக் கண்டான். தங்கம் மிகக் கடினமானது.
1.அதை ஒன்றில் போட்டுக் காற்றழுத்தத்தை அதிகமாக்கித்
2.தங்கத்துடன் மோதியவுடன் தங்கம் தூசியாகப் போய்விடுகிறது.
3,கரைத்து விடுகிறான்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா…!

இப்பொழுது மனிதன் விஞ்ஞானத்தால் அதைக் கரைக்கும் சக்தியைக் கொண்டு வருகிறான். அதைபோல,
1.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தவுடன்
2.இதன் அழுத்தம் அதிகமாகி வேகமாகச் சுழற்சியாகிறது.
3.அப்பொழுது தீமையான உணர்வுகளுடன் ஊடுருவச் செய்கிறோம்.

விஷம் எப்படி ஊடுருவி அதன் நிலையை மாற்றுகிறதோ இதே மாதிரி இந்த விஷத்தை ஒளியாக மாற்றிய உணர்வுகளை உங்கள் இரத்தத்தில் கலக்கச் செய்கிறோம். 

உங்கள் உடலில் உள்ள உணர்வின் அணுக்களுக்குள் ஊடுருவி அதை ஒளியாக மாற்றக்கூடிய சக்தி பெறவேண்டும் என்பதற்குத் தான் திரும்பத் திரும்ப உபதேசிப்பது.