ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 4, 2017

சித்திரை – சிறு திரை

அன்றாட வாழ்க்கையில் எல்லாவற்றையும் நாம் நல்ல குணத்தோடு தான் பார்க்கின்றோம். ஆனால், பிறரின் தீமையான உணர்வுகள் நமக்குள் சிறு திரையாகிவிடுகின்றது.

அப்பொழுது உங்கள் நல்ல குணத்தை அது மறைத்துவிடுகின்றது அல்லவா? அந்தச் சித்திரையை நீக்க வேண்டுமா… இல்லையா?

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் உடலிலுள்ள இரத்தங்கள் முழுவதும் படரவேண்டும்.
4.எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
5.நாம் இதை எண்ணும் பொழுது அந்தத் திரையை நீக்கிவிடலாம்.

வேதனைப்படும் உணர்வை நாம் எடுத்தால் நல்ல எண்ணங்களுக்குள் வரப்படும்போது அந்த நல்லதை மூடிவிடுகின்றது.

அந்த வேதனைப்படும் உணர்விற்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் படும் பொழுது அதைத் திறந்துவிடுகின்றது.

“சித்திரை…,” அதாவது நல்லதை மறைக்கும் சிறு திரைகளை நீக்கிவிடுகின்றது. அதற்குள் பொருள் தெரிகின்றது.

இப்படி நம்மைத் தெரியச் செய்வதற்கு எத்தனையோ உபாயங்களைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள். ஒவ்வொரு மாதங்களிலும் நாம் அந்த அருள் சக்தியை எடுக்கும் முறைப்படுத்தியுள்ளார்கள்,

ஆக, நாம் சுவாசித்து எடுக்கும் நிலைகள் நம் உடலுக்குள் எப்படி உருவாகின்றது? தீமைகள் வந்தால் அதை நாம் எப்படி மாற்ற வேண்டும்? என்பதைத் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

ஞானிகள் காட்டிய சாஸ்திரங்களின் படி நாம் சென்றால் அவர்கள் எல்லையை அடைவது மிகவும் எளிதானது.