ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 6, 2017

கோடிக்கரையில் இருக்கின்றோம் – எல்லாவற்றையும் (நமக்குள் உள்ள கோடிக்கணக்கான உணர்வுகளையும்) ஒன்றாக்கினால் "தனுசுகோடி"

நாம் சாதாரணமாக இருந்தாலும் திடீரென்று நம் உடலில் உள்ள அணுக்களுக்குப் பசி எடுத்தது என்றால் அந்த உணர்ச்சியைத் தூண்டி திடீரென்று கோபம் வரும். 

அதே சமயத்தில் குழந்தைகளைப் பற்றி  நினைத்துக் கொண்டிருப்போம்.  அந்த உணர்வு அணுவாக இருக்கும். அதை நினைக்காதபடி சந்தோஷமாக இருந்தால் அதற்குச் சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் அந்த உணர்ச்சியை உந்தும்.

ஏனென்றால் உயிருக்கு வருகின்றது. உயிருக்கு வந்தவுடன் அந்த உணர்வை எடுத்துச் சாப்பாடு எடுக்க ஆரம்பித்து விடுகிறது.

அந்த மாதிரி நேரமானாலும் அதற்குச் சாப்பாடு கொடுக்கக் கூடாது. உடனே “ஈஸ்வரா…என்று புருவ மத்தியில் எண்ணினால் உள்ளுக்குள் போகாது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் உடலிலுள்ள ஜீவ ஆன்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

நீங்கள் சும்மா இருந்து பாருங்கள். உங்களை அறியாத கவலை சஞ்சலம் எல்லாம் எங்கிருந்தோ வரும். அப்படி யார் யார் மேலே இருந்ததோ அவர்கள் மேலே தான் வரும்.

அவர்கள் நம்மை எப்படியெல்லாம் கெட்டுப் போகவேண்டும் என்ற உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்களோ அந்த உணர்வெல்லாம் எடுத்து அந்தக் கெட்டுப் போகும் அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்கும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதா?

ஆக நாம் இந்த நிலையை மாற்றுவதற்குதான் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வந்து என்ன செய்கிறோம்?

“இராமேஸ்வரம்அங்கு வந்தவுடன்தான் “தனுசுகோடி” – “கோடிக்கரை”. நாம் கோடிக்கரையில் இருக்கிறோம்.

ஒவ்வொரு நிமிடத்திலும் அந்தத் தீமைகள் வரும் பொழுது நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை நமக்குள் சேர்த்துச் சேர்த்து அந்த விஷ்ணு தனுசைக் கொண்டு மாற்றிடல் வேண்டும்.

இந்த உயிர் தான் “விஷ்ணு தனுசு என்பது.

உயிரின் தன்மை ஒளியாக மாற்றும் விஷ்ணு தனுசு - இந்த உணர்வை எடுத்து நம் உடலிலுள்ள அத்தனை அணுக்களுக்கும் சேர்க்க வேண்டும்.

இராமேஸ்வரத்தில் இராமன் என்ன செய்கின்றான்? நேரமாகிவிட்டது என்று மணலைக் குவித்து பூஜிக்கத் தொடங்குகின்றான். இது தான் தனுஷ்கோடி.

இந்த வாழ்க்கையில் நமக்குள்
1.கோபம் வரப்படும் போது,
2.வெறுப்பு வரும் போது,
3.வேதனை வரும் போது,
4.சலிப்பு வரும் போது,
5.சோர்வு வரும் போது,
6.ஆத்திரம் வரும் போது,
இவை எல்லாவற்றையும் அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை கொண்டு மாற்றிக் கொண்டு வரும் போது எல்லாம் ஒன்றாகின்றது - “தனுசுகோடி

ஒன்றாகி ஒரு உணர்வின் தன்மை வலுவாகிறது  என்று பொருள்.

இராமாயணத்தைப் படித்துப் பாருங்கள். அதில் எவ்வளவு பெரிய உண்மை இருக்கின்றது.
1.நாம் எதற்காக வந்தோம்?
2.எதனால் வந்தோம்? என்ற உண்மைகள் அனைத்தும் அதிலே காட்டப்பட்டுள்ளது.

இப்போது நம் உடலில் என்ன செய்கின்றது? வேதனை என்ற உணர்வுகள் அணுக்களாகிறது. அந்த வேதனை மணத்தைக் கொடுத்தவுடன் உடல் அழுகுகிறது. ஆனால் அருளுணர்வைப் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது உடல் நன்றாக செழிக்கின்றது.

அப்பொழுது அதனுடைய மலம் நுகர்ந்த உணர்வின் தன்மை நல்ல அணுக்களை வளர்க்கப்படும் பொழுது நமக்கு நன்றாக இருக்கின்றது.
அப்பொழுது “நமது…என்று சொல்வது எது?
நமது என்று சொல்வது “உயிரின்தன்மை.
.
“அவன் தான்..,” நான்… நான்… என்ற நிலைகளில் இதை அந்த அளவுக்குப் பெற்றது  “துருவ நட்சத்திரம்.அதை நாம் பெறவேண்டும்..

ஏனென்றால் உங்களை அங்கே அழைத்துச் செல்கிறேன். எனக்கு குருநாதர் அதைத் தான் சொன்னார். அவர் முறைப்படி சொன்னதை நம் குருநாதர் வழிப்படி நாம் அனைவரும் ஆயுள் கால மெம்பராக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைகின்றோம்.


அவர்கள் எப்படி அந்தத் தீமைகளை நீக்கினார்களோ அதை நாம் நீக்க வேண்டும். இப்பொழுது சொல்வது அர்த்தமாகிறதல்லவா. அந்த அருள் சக்தியை உங்களுக்குள் பெருக்கச் செய்வதற்குத்தான் இந்த உபதேசம்.