இந்த வாழ்க்கையில்
யாருக்கு வேண்டுமென்றாலும் உதவி செய்யலாம். எந்த வகையிலும் நுகர்ந்தறியலாம்.
1.கஷ்டப்படுகின்றார்கள்
வேதனைப்படுகின்றார்கள் தவறுகள் செய்கின்றார்கள் என்று
2.புறநிலைகளில்
நாம் அறிந்து கொண்டாலும் அறிந்த பின்
3.மீண்டும்
அது நமக்குள் அணுத் தன்மையாக கருவாகாதபடி
4.நாம்
கேட்டறிந்த அந்தத் தீமைகள் நமக்குள் உருவாகாதபடி தடுத்தல் வேண்டும்.
ஏனென்றால்
இந்த வாழ்க்கையில் பிறருடைய தீமைகளையும் அவர்கள் கஷ்டப்படுவதையும் பார்த்து கேட்டு
நுகர்ந்து நமக்குள் வளர்த்து அதையெல்லாம் நாம் “பிடிவாதமாகப் பிடித்துக்
கொள்கின்றோம்”.
அதைத்
தடுக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
சூரியன் உலகுக்கே
ஒளியாக வழி காட்டுகின்றது.
அதைப் போல அகஸ்தியர்
தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி ரிஷி என்ற நிலையில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து
சிருஷ்டித்துக் கொண்ட நிலைகளில் இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் கணவன்
உயர வேண்டும் என்று மனைவியும் மனைவி உயர வேண்டும் என்ற உணர்வை ஒன்றாகச் சேர்த்து இணைத்து
அந்த ஒளியின் சரீரமாக ஆனவர்கள்.
இருவருமே அந்த
உயர்ந்த உணர்வுகளைச் சேர்த்து தனக்குள் எந்தத் தீமையும் புகாதபடி தீமைகளை அழித்தனர்.
அதனின் உணர்வு
கொண்டு எந்தத் துருவத்தைக் கூர்மையாக எண்ணினார்களோ கூர்மை அவதாரமாக இன்றும் துருவ நட்சத்திரமாக
இருக்கின்றார்கள்.
பூமிக்குள்
வருவதனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்.
அதைப் பின்பற்றிச்
சென்றவர்கள் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக ஒளியாக மாற்றி சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்,
நவராத்திரி
கொலு முடிந்தபின் பத்தாவது நிலையாக விஜய தசமி என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
தசமி - நாம்
எப்படிப் பத்தாவது நிலை அடைவது?
விண்ணிலிருந்து
பூமிக்குள் விஜயம் செய்யும் உயிர் பல கோடிச் சரீரங்களில் நஞ்சினை வென்று ஒளியாக மாற்றி
விண் செல்லும் நிலையைத்தான் விஜய தசமி என்று காட்டினார்கள். அதை அறிவிக்கும் நாள்
தான் விஜய தசமி.
அப்படி
ஆனது அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரம் ஆனது. ஆக கல்கி என்று
ஒளியின் நிலையாக அவர்கள் எப்படிப் பெற்றார்களோ அதன் வழி கொணடு நாமும் பெறவேண்டும்.
அந்தத் துருவ
நட்சத்திரத்திலிருந்து காலை 4 மணிக்கெல்லாம் அலைகள் வெளி வருகின்றது. சூரியனின் காந்தசக்தி
கவர்ந்து நம் பூமிக்குள் கொண்டு வருகின்றது.
அந்தத் துருவ
நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்தோம் என்றால் நம் சிந்தனையைக் குறைக்கும் நஞ்சான
உணர்வுகளை வெல்லும் ஆற்றல் பெறுகின்றோம்.
அதனின் வலிமை
கொண்டு நமக்குள் பிடிவாதமாக இயக்கும் அத்தனை உணர்வுகளையும் அடக்க முடியும்.
1.இப்படிச்
செய்தானே
2.அப்படிச்
செய்கின்றானே
3.இப்படியே
செய்து கொண்டிருந்தால் நான் என்ன செய்வது...! என்ற நிலையில்
4.”பிடிவாதம்
பிடிக்காதபடி” நமக்குள் அந்த உணர்வின் உண்மையை உணர்த்தும்.
இதைத்தான் ரிஷியின்
மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று சொல்வது.
அங்கே எடுத்தவுடன்
எங்கே செல்கின்றான் நாரதன்…?
உயிரான விஷ்ணுவிடம்
தான் செல்கின்றான். விஷ்ணுவிடம் சென்றபின் கண்ணாக கண்ணனிடம் செல்கின்றான் நாரதன்.
“கண்ணா.., எல்லா உபாயமும் உனக்குத் தெரியும்”
1.கண்களின்
செயலாக்கமும்
2.எண்ணிய உணர்வுகள்
நமக்குள் எப்படி உருவாகின்றது என்ற நிலையையும்
3.அதிலிருந்து
மீட்டிடும் உபாயங்களையும்
4.ஒரு காவியத்
தொகுப்பாக கீதாச்சாரம் என்று எழுதி அமைத்துள்ளார் வியாசகர்.
ஆகவே, அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் இரத்த நாளங்களில்
கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று
எண்ணிச் சுத்தப்படுத்துதல் வேண்டும்.
இதை ஒரு
பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.