இந்த மனித வாழ்க்கையில்
இதற்கு முன்னால் அறியாமல் சேர்ந்த நிலைகள் நம்மை இயக்கச் செய்தாலும் அதையெல்லாம் தடுத்துப்
பழக வேண்டும்.
1.ஏனென்றால் ஒரு பொருள்
கெட்டுப் போய்விட்டதென்றால் மறுபடியும் அதை திருப்பிச் செய்கிறோம்.
2,ஒரு கட்டத்தில் மீண்டும்
குறையானால் அதை நிறுத்தி நாம் செயல்படவேண்டும்.
ஒரு செடியின் தன்மையில்
அதன் வளர்ச்சி குன்றினால் அதற்கு என்ன பக்குவம் வேண்டும் என்று அதை வளர்க்கச் செய்கின்றோம்.
இதைப் போல ஒவ்வொன்றிலும் நம் வாழ்க்கையில்
1.இப்படிச் செய்தேனே
அப்படிச் செய்தேனே
2.இப்படியெல்லாம் இருந்தேனே
என்பதை
3.எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள்.
ஆகவே, நாம் எப்படி
இருக்க வேண்டும்?
நல்ல உணர்வுகளை வளர்க்க
வேண்டும். இருளை அகற்றும் அருள் சக்தி பெறவேண்டும். நம் குரு அருளால் அந்த மெய் பொருளைக்
காணும் நிலையும் நமக்குள் வரவேண்டும். அனைவரும் அந்த மெய்பொருள் கண்டு அவர்கள் வாழ்க்கையில்
மகிழ்ந்திடும் சக்தி பெறவேண்டும்.
எனவே இதை உங்களுக்குச்
சொந்தமாக்குங்கள்.
இன்றைய உலகில் விஞ்ஞான
நிலைகள் கொண்டு எத்தனையோ விஷத் தன்மையான நிலைகளை நாம் காண சுவாசிக்க நேருகின்றது. விஞ்ஞான
அறிவால் உலகைக் காக்கவேண்டும் என்ற நிலை இல்லாமல் தன்னைக் காக்க தன் நாட்டைக் காக்க
என்று “பிழை கொண்ட உணர்வுகளைத் தான்” இன்று செய்கின்றார்கள்.
இன்றைய நிலையில் நாம்
உலக மக்களின் உணர்வுகளை எடுத்துக் கொண்டாலும் நமக்குள் வீரிய உணர்வின் தன்மை இருந்தாலும்
நாம் நல்லதை எண்ணும் போது இதனுடைய (விஷதன்மைகளின்) அழுத்தம்
1.நல்ல குணங்களைச்
சிந்திக்கும்படி செய்வதோ
2.நல்ல குணங்களைச்
செயல்படுத்தும் நிலையோ இல்லாது போகும்
அப்போது நமக்குள் இந்த
எதிர்மறையான உணர்வுகளால் நல்ல உணர்வுகளைத் தூண்டும் அந்த அணுக்களின் தன்மையை தடைபடுத்தும்.
இதை மாற்ற வேண்டுமென்றால்
1.திசை திருப்புவது
போலச் சக்தி வாய்ந்த நிலைகளில்
2.மாமகரிஷி ஈஸ்வராய
குருதேவர் எமக்குக் கொடுத்த அரும்பெரும் அருள் சக்தியை
3.அப்படியே உங்களுக்குக்
கொடுக்கிறோம்.
4.ஒவ்வொரு நொடியிலும்
நீங்கள் இதை வளர்க்க வேண்டும்.
உங்கள் பேச்சாலும்
மூச்சாலும் ஒருவருக்கு நோய் போக வேண்டுமென்று சொல்லுங்கள். அந்த நோய் உங்களுக்கு வராது.
நீங்கள் அனைவரும் பிணிகளைப்
போக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அருள் ஞானத்தை வளர்க்கக் கூடிய நிலைகளில் இருக்க
வேண்டும். அவர்களின் உணர்வு உங்களுக்குள் வருவதாகவே
இருக்க கூடாது.
நம் உடலில் முந்தைய
நிலைகளின் உணர்வுகள் இருந்தால் அது நம்முள் பெருகாது தடைப்படுத்தவும் வேண்டும். அதைத்
தடைப்படுத்தி, தீமைகள் புகாத உணர்வின் தன்மையை நம் உடலுக்குள் வளர்க்கின்றோம்.
ஒவ்வொரு நொடியிலும்
தீமையைப் பார்க்கும் பொழுதெல்லாம் “ஈஸ்வரா” என்று உங்கள் உயிரை எண்ணுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் தொடர்பு
கொள்ளுங்கள்.
அந்த உணர்வு உங்களுக்குள்
வலுப் பெறும். அந்த வலுப் பெற்று தீமைகளை நீக்கிப் பழகுங்கள். இது உங்களுக்குள் ஒன்றி
ஒளியாக மாறும். இது தான் “விஷ்ணு தனுசு”.
உயிருடன் ஒன்றி தீமைகள்
புகாது தீமையின் உடலை நமக்குள் உருவாக்கும் நிலையைத் தடைப்படுத்தும் நிலைகளாக வளர வேண்டும்.
1.யாம் கண்ட உண்மையின்
உணர்வுகள்
2.குருநாதர் பேரண்டத்தைக்
கண்ட உணர்வுகள்
3.அகஸ்தியன் அறிந்துணர்ந்து
கண்ட உணர்வுகள்
4.அகஸ்தியன் துருவனான
அந்த உணர்வுகள்
5.இவை “அனைத்தையும்”
உங்களில் நீங்கள் காணலாம்.
அவர்கள் இருளை அகற்றி
ஒளியென்ற உணர்வு பெற்ற அந்த நிலைகளை நீங்களும் பெறுகின்றீர்கள்.
உலகுக்கே எடுத்துக்
காட்டும் நிலைகளில் நமது குருநாதர் காட்டிய அருள் நெறிகளை அனைவரையும் பெறச் செய்யுங்கள்.