ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 15, 2017

என்றுமே ஒளியின் சுடராக “தூங்காமல் தூங்கும் நிலை” – அகஸ்தியன் அடைந்த நிலை

ஒரு வேதனைப்படுவோரைப் பதிவு செய்துவிட்டால் பதிவான உணர்ச்சிகள் அந்த வேதனைப்படச் செய்தோரைத் திரும்பத் திரும்ப எண்ணும்படி வைக்கின்றது.

நாம் எண்ணவே வேண்டாம். அது நம்மை எண்ணும்படியே வைக்கின்றது. ஏனென்றால் அது அணுவாக உருவாகிவிட்டால் தன் இரைக்காக அதைத் தேடுகின்றது.

அப்பொழுது நம் உயிருடைய வேலை என்ன?

காகமோ குருவியோ தன் தன் குஞ்சுகளுக்கு இரை கொடுப்பது போல்
1.உருவான அணுக்கள் உணர்ச்சிகளைத் தூண்டப்படும் பொழுது
2.அது கவர்ந்து தன் உணவாக எடுத்து
3.அதற்கு உணவு கொடுப்பது நம் உயிருடைய வேலை.
4.ஏனென்றால் தாய் (உயிர்) அதை வளர்த்துத் தான் ஆகவேண்டும்.

மனிதனான பின் ஆறாவது அறிவு கார்த்திகேயா “தெரிந்து கொண்டவன்”. அகஸ்தியன் -
1.தன் வாழ்க்கையில் தீமைகளை அகற்றத் தெரிந்து கொண்டவன்
2.விண்ணுலக ஆற்றலைத் தெரிந்து கொண்டவன்
3.பின் துருவத்தின் ஆற்றலை உணர்ந்து அதை அறிந்து கொண்டவன்
4.அதனைத் தனக்குள் சிருஷ்டித்துக் கொண்டான் துருவ மகரிஷியானான் துருவ நட்சத்திரமானான்.
5.இந்தப் பிரபஞ்சத்தில் எத்தகையை தீமை வந்தாலும் அதைத் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டுள்ளான்.

பிறவியில்லாப் பெரு நிலையும் பேரானந்தப் பெரு நிலையும் தூங்காமல் தூங்கும் நிலையாக எப்பொழுதுமே தூங்கிக் கொண்டுள்ளான்.

ஒரு வெளிச்சத்தை நேரடியாக நம் கண்களால் பார்த்தால் நம்மை இருளடையச் செய்கின்றது. (வெளிச்சத்தை நேரடியாகப் பார்த்தவுடன் ஒரு பொருளைப் பார்த்தால் நாம் காணமுடியாது)

1.தன் ஒளியின் சுடரின் தன்மை கொண்டு
2.வரும் இருளையெல்லாம் மாய்த்து ஒளியின் சக்தியாகவே
3.என்றும் அந்த ஒளிச் சுடராகவே நிலை கொண்டு
4.மகிழ்ந்திடும் நிலையாக உருவாகி வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான் துருவ மகரிஷி.

அவர்களைப் பின்பற்றிச் சென்றோர் அனைவருமே சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டு தீமைகளை அகற்றிடும் சக்தியை உமிழ்த்திக் கொண்டும் உள்ளார்கள்.

அது நம் பூமிக்குள் துருவப் பகுதியின் வழியாக வரவும் செய்கின்றது. இங்குள்ளோர் அதை ஈர்த்தால் தான் நாம் பெற முடியும். துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் சக்திகளை எளிதில் நீங்கள் பெறவே இந்த உபதேசம்.

அங்கிருந்து வரும் சக்திகளை நாம் கவரக் கற்றுக் கொள்ள வேண்டும். எடுத்துக் கொள்ளப் பழக வேண்டும். அந்த அருள் சக்திகளைப் பெற்று
1.அகஸ்தியனைப் போன்று ஒளியின் சுடராக மாறி
2.என்றுமே ஒளியாக தூங்காமல் தூங்கும் நிலையாக
3.மகிழ்ந்திடும் நிலையாக நாம் அவர்களுடன் ஐக்கியமாக வேண்டும்.