ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 19, 2017

துரத்தி வரும் நாயைத் தடுத்து நிறுத்தும் வழிமுறை

குருநாதர் எம்மைக் காட்டுப் பகுதியில் அழைத்துச் சென்றார்.

நாம் சும்மா இருந்தாலும் மிருகங்கள் நம்மைத் தாக்க வரும். தாக்க வரப்படும்போது அதனின் வலிமையைக் கண்டு நீ அஞ்சிவிட்டால் அஞ்சிடும் உணர்வின் வலிமை உனக்குள் வந்துவிடுகின்றது என்றார் குருநாதர்.

ஆனால் அச்ச உணர்வுகள் வந்தபின் உன் நல்ல குணங்களும் உன்னைப் பாதுகாக்கும் குணங்களும் எங்கேங்கேயோ போய் விடுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் அச்ச உணர்வுகள் உனக்குள் வலிமையாகி விடுகின்றது. அந்த வலிமையுடன் நீ எதைச் சேர்க்க வேண்டும்?

மகரிஷிகளின் அருள் உணர்வு பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று சேர்த்துக் கொள்ள வேண்டும்.

1.அந்த மகரிஷிகளின் உணர்வு கொண்டு
2.இதே நிலைகள் கொண்டு சாந்த உணர்வாக
3.அந்த நட்பின் தன்மையாக நீ எண்ணி - அதைப் பார்.
4.அப்பொழுது அந்த உணர்வுகள் உடனே தணியும்.

அஞ்சிடும் உணர்வை நீ எடுத்துக் கொண்டால் நம்மை எதாவது செய்வான் என்று அந்த மிருகங்கள் நிச்சயம் உன்னைத் தாக்கும்.

உதாரணமாக, ஒரு நாய் துரத்துகிறது என்று வைத்துகொள்வோம்.

1.நீங்கள் அஞ்சிப் பாருங்கள்..., உடனே துரத்தி வரும்.
2.ஆனால் அந்த வலிமைமிக்க நிலைகளை எண்ணிக் கொஞ்சம் நிமிர்ந்து பாருங்கள்.
3.குரைத்துப் பக்கத்தில் வராது... அப்படியே நிற்கும். இதைப் பார்க்கலாம்.

நினைவின் ஆற்றல் நீங்கள் பயந்து போகும்போது பாருங்கள். நீங்கள் நாயைப் பார்த்தால் கண்களின் ஒரு விதமான ஒளி வரும்.

கண்களைப் பார்க்கும்போது தாக்கும் உணர்வு வரப்படும்போது நீங்கள் பயந்தால் போதும்.
1.அதன் உணர்வை வலிமையாக்கி “உர்ர்ர்...” என்று நிற்கும்.
2.அதனுடைய பார்வையே நம்மைப் பயமாக்கும்.

அதே சமயத்தில் மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்து அதற்குச் சாந்த உணர்வு வர வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள். அது கண்கள் மங்கும்.

இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஏனென்றால் நாயாகவும் மற்ற உயிரினங்களாகவும் இருந்துதான் நாம் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம். இதைத்தான் இந்த நிலையில் நீ விழித்திரு என்ற நிலைகளில் எந்த அச்சுறுத்தும் உணர்வுகள் வருகின்றதோ அந்தத் தருணங்களிலெல்லாம் இதை நீ பாய்ச்சிப் பழகு.

அதனால்தான் ஒவ்வொரு நொடிகளிலும் நீ விழித்திரு என்றும் பல கோடிச் சரீரங்களிலும் தீமையைக் கண்டுணர்ந்து தீமையிலிருந்து விடுபடும் உணர்வை வளர்த்து வளர்த்து மனிதன் ஆனோம்.

ஆகவே தீமையைக் கண்டு கொள்ளும் அந்த உணர்வின் சக்தி மனிதனுக்கு உண்டு. ஆகையினால் கார்த்திகேயா.

ஆனால் அதே சமயத்தில் தெரிந்து கொண்டபின் தீமையை அடக்கும் சக்தி மனிதனுக்கு உண்டு என்ற நிலையை உருவாக்குகின்றார் குருநாதர்.

இதையெல்லாம் அனுபவ ரீதியில் தெரிந்து கொள்வதற்காகத்தான் காட்டுப் பகுதியில் என்னை அழைத்துச் சென்று அதிலிருந்து நீ எப்படித் தப்புவது? நீ எப்படித் தப்ப வேண்டும்? அந்த உணர்வின் இயக்கங்கள் உன் உடலுக்குள் என்ன செய்கின்றது? என்று அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்.


குருநாதர் உணர்த்திய வழியில் தான் உங்களுக்குள் தீமையை நீக்கும் ஆற்றலை உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.