ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 3, 2017

மூச்சுப் பயிற்சி செய்பவர்களின் நிலைகள் - ஆயிரம் தியானம் செய்தாலும் ஆத்ம சுத்தி செய்வது மிகவும் முக்கியம்

நீங்கள் ஆயிரம் ஜெபம் இருந்து மணிக்கணக்காக உட்கார்ந்து தவம் செய்து நான் ஈஸ்வரனைப் பார்க்கப் போகின்றேன். நான் துருவ நட்சத்திரத்தைப் பெறப்போகின்றேன் என்றாலும் பலன் இல்லை.

1.தியானத்தில் நம் உணர்வு முழுமையானாலும்
2.அவ்வப்போது வரும் தீமையான உணர்வை
3.”உள்ளே விடக் கூடாது”.

தியானத்தில் முழுமை அடைந்தாலும் நீங்கள் துருவ நட்சத்திரத்தை எண்ணும்போது உங்கள் ஆன்மாவில் என்ன செய்கின்றது?

நீங்கள் “நான் சும்மாதான்.., உட்கார்ந்திருக்கின்றேன்” என்று நினைப்பீர்கள்.

ஆனாலும் பிள்ளை படிக்கவில்லை என்றாலோ சுட்டித்தனச் செய்தாலோ அல்லது கடுமையான தவறுகளைச் செய்தாலோ பிள்ளை மேல் பாசம் அந்த நினைவு அதிகம் இருந்தால் “கஷ்டமாக” இருக்கும்.

அதே மாதிரி மற்றவருக்குப் பணம் கொடுத்திருப்போம். அப்படிக் கொடுத்தவன் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் அவன் நினைவு கண்டிப்பாக வரும்.

1.சும்மா இருக்கின்றான் பார் என்று அவனுக்கு இத்தனை உதவி செய்தேன்
2.என்னைப்பற்றி எப்படியெல்லாம் கேவலமாகப் பேசுகின்றான் பார் என்ற
3.இந்த உணர்ச்சிகள் தான் வரும்.

அப்பொழுது நீங்கள் மணிக்கணக்காக உட்கார்ந்து செய்த ஜெபமோ தியானமோ என்ன ஆகின்றது? தியானத்தில் உட்கார்ந்தாலே இந்த நினைவுகள் நம்மை அலைக்கழிக்கும்.

இப்படிப்பட்ட நினைவுகள் வரும்போது உடனே நாம் என்ன செய்யவேண்டும்?

கண்களைத் திறந்து அந்த மாதிரி நினைவலைகளுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்த்து எங்கள் அது உடலில் படர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அப்பொழுது யாருடைய நினைவுகளெல்லாம் வருகின்றதோ அவர்கள் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று அதனுடன் இதைக் கலக்க வேண்டும்.

பிள்ளை நினைவு வரும்போது
1.அது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்.
2.நல்ல ஞானசக்தியும் ஞாபகசக்தியும் பெறவேண்டும்.
3.படிப்பு மேல் நல்ல நாட்டம் வேண்டும்.
4.சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் வேண்டும் என்று இதை எடுத்து இப்படித் தியானித்து விடுங்கள்.

எது?

உங்களுக்குள் பல கலக்கங்கள் வரும்போது அதை மாற்றக்கூடிய திறன் இதை இப்படித்தான் எடுத்து வர வேண்டும்

நீங்கள் சும்மா உட்கார்ந்து இருந்தால் சில நேரம் இந்த மாதிரி உணர்வுகள் “கிர்...ரென்று” இழுக்கும் அது தன் உணர்ச்சியைத் தூண்டி அவ்வாறு எடுக்கும்.

மீண்டும் நாம் ஆத்ம சுத்தி என்ற நிலையில் அருள் சக்திகளை நமக்குள் செலுத்தி எந்த உணர்வின் சக்தியோ அதைச் சேர்த்து நாம் இணைத்தல் வேண்டும். இதைக் கலந்து இப்படி மாற்ற வேண்டும்.

இல்லையென்றால் கலி என்ற உணர்வுகள் வரும். உட்கார்ந்து தியானத்தில் உட்கார்ந்து மீட்டிய உடனே கொஞ்ச நேரம் அடங்கும். மறுபடியும் கிளர்ந்தெழும்.

பிராணவாயு என்று சொல்லிக் கட்டாயப்படுத்தி சில பேர் மூச்சுப்பயிற்சி எடுத்து இதை அடக்கிவிடலாம் என்று நினைப்பார்கள்.

ஒரு நாளும் அடக்க முடியாது.

தூக்கத்திற்குத் தூக்க மருந்து கொடுப்பார்கள் அல்லவா? அந்த மாதிரித் தான் மூச்சுப்பயிற்சி கொடுத்து வட கிளை தென் கிளையைச் சேர் என்பார்கள்.

இந்த உணர்வின் தன்மை போதை மருந்து ஏற்றியதுபோல் கொஞ்ச நேரம் இருக்கும். எப்படி? ஒருவர் சொல்லியிருப்பார் அல்லது புத்தக வடிவில் கொடுத்திருப்பார்கள்.

அதைப் படித்துவிட்டு “நீ இந்த மாதிரிச் செய்தால் நன்றாக இருப்பாய்” என்று அந்த உணர்வு எடுத்தவுடனே அவன் வெளியிட்ட உணர்வு எடுத்தவுடனே கொஞ்ச நேரத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும்.

“ஆகா.., எனக்கு வேறு நினைப்பே வரவில்லை.., மிகவும் ஆனந்தமாக உள்ளது.., எதுவுமே வராது” என்று நினைப்பார்கள்.

பயிற்சியை முடித்துவிட்டு முழித்துப் பார்த்தபின் இவன் நினைவுதான் வரும். “அவன் அயோக்கியப் பயல்.., அந்த மாதிரிச் செய்தான் இந்த மாதிரிச் செய்தான்..,” என்று அவனைப் பார்த்தவுடனே வரும்.

இப்படி நம் வாழ்க்கையில் எத்தகைய கஷ்டமும் வராமல் இருக்க முடியாது. எப்படித்தான் நீங்கள் வீட்டைத் தூய்மைப்படுத்தி வைத்திருந்தாலும் தூசிகள் வரத் தான் செய்யும்.

எங்கேயோ அந்தப் பக்கம் மிளகாயை அரைக்கின்றார்கள். அது காற்றில் பறந்து வந்தவுடன் நமக்குள் போய் எரிச்சலாகின்றது. அப்பொழுது நாம் இருக்கும் வீட்டை மாற்ற முடியுமா?

இன்று மாற்றினால் நாளைக்கு இன்னொரு பக்கம் வந்தால் அப்புறம் எந்தப் பக்கம் மாற்றுவது?

1.வரும் தூசிகளை உள்ளே வராது நாம் குறைத்து 
2.பாதுகாப்பாக நாம் இருப்பதற்கு அடைப்புகளை வைக்க வேண்டும்.
3.அதனை வெளியிலேயே அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
4.இந்த மாதிரி முறைகளை நாம் கையாண்டு பழகுதல் வேண்டும்.

இதைப் போன்றுதான் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவில் வரும் அழுக்கினைப் போக்குவதற்காக குருநாதர் காட்டிய வழியில் “ஆத்மசுத்தி” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்தது.

ஒவ்வொரு நிமிடமும் எந்தெந்த வகையில் நமக்குள் தீமைகள் வருகின்றதோ அதைப் பயன்படுத்திச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம் பிள்ளையைப் படிக்க வைக்கின்றோம், அது சரியான நிலையில் படிக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம்.

“இப்படி இருந்தால் என்ன செய்வது...?” என்று எண்ணுகின்றோம்.

அப்போது அந்த வேதனை உணர்வு நமக்குள் வரும்போது அவன் மேல் இருக்கக்கூடிய பாசத்தை மாற்றுகின்றது. அப்புறம் வெறுப்பு தான் வருகின்றது.

அப்போது நாம் பாசத்தை வளர்க்க வேண்டும் என்றால் நமக்குள் என்ன செய்ய வேண்டும்?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முடுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று நமக்குள் அந்த அருள் சக்திகளைச் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு செய்து
1.அந்த வேதனைகளை நிறுத்திவிட்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குழந்தை உடலில் படர வேண்டும்.
3.அது சிந்திக்கும் ஆற்றல் பெறவேண்டும்.
4.அது படிப்பில் ஆர்வம் வர வேண்டும்.
5.மூலத்தின் தன்மை அறியும் அந்த ஆற்றல் வேண்டும் என்று
6.இப்படி நாம் மனதில் எண்ணி  இதைச் செய்ய வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து சுவாசித்து எடுத்து நீங்கள் சொல்லப்படும் பொழுது
1.கண்களாலும் பாய்கின்றது
2.சொல்லாலும் பாய்கின்றது சொல்லின் தன்மை செவியிலே படுகின்றது.
3.உணர்ச்சியின் தன்மை நீங்கள் பரப்பியது காற்றில் உள்ளது.
4.அப்பொழுது இதைக் கவரும் சக்தி வருகின்றது.

இப்போது நிலத்தில் நாம் ஒரு வித்தினை ஊன்றப்படும்போது பலவிதமான செடிகளை உருவாக்குகின்றது.

அதில் எதை எதை விஞ்ஞான அறிவோடு கலந்து கொண்டார்களோ எல்லாமே இந்தக் காற்றில் தூசிகளாக இருக்கின்றது. அதை எடுத்து அதே செடியாக வளருகின்றது.

அதைப்போல நாம் அந்த அருள் ஞானத்தை நமக்குள் வளர்க்க வேண்டும். அதே சமயத்தில் நம் குழந்தைகளுக்குள்ளும் இதை வளர்த்துப் பழக வேண்டும்.

மனித வாழ்க்கையில் இதைப் போன்று ஆத்ம சுத்தி என்பதைச் தெளிவாகச் செய்ய வேண்டும். எத்தகைய நிலை வந்தாலும் உடனுக்குடன் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

“ஆத்ம சுத்தி” என்பது மிகவும் முக்கியமானது.