நமது மனித வாழ்க்கையில் எத்தகைய நிலைகள் வந்தாலும் நமக்குள்
தீமை புகாது தடுக்கும் சக்தி வரவேண்டும்.
இதுதான் கடவுளின் அவதாரத்தில் நரசிம்மா.
1.மடி மீது இரண்யனை வைத்து
2.வாசல்படி மீது அமர்ந்து
3.நர நாராயணன் இரண்யனைப் பிளந்தான்.
மடி என்றால் நம் ஆன்மா (நம் ஈர்ப்பு வட்டம்). வாசல் படி
என்பது நாம் சுவாசிக்கும் உணர்வுகள் செல்லும் மூக்கின் துவாரம். நாராயணன் என்பது சூரியன்,
நர நாராயணன் என்பது புருவ மத்தியில் உள்ள நம் உயிர்.
சூரியன் பாதரசத்தால் மோதி விஷத்தைப் பிரிக்கின்றது. சூரியனில்
இருந்து வெளிப்படும் கலர்கள் ஆறு. ஏழாவது ஒளியாகின்றது.
இதே போன்று மனிதருக்கு அறிவு ஆறு. விஷத்தை நீக்கிய “துருவ
நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து”நம் உடலுக்குள் வலுவாக்க வேண்டும்.
வலுவாக்கினால் தீமைகள் அகலுகின்றது - ஏழாவது ஒளியாகின்றது.
அதாவது நாராயணன் சூரியன் அங்கே விஷத்தைப் பிரிப்பது போன்று
இங்கே இந்த உடலுக்குள் நர நாராயணன் தீமை செய்யும் உணர்வினை நமது உடலை விட்டே அகற்ற
வேண்டும்.
நாம் உயிர் வழியாகச் சுவாசிக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின்
உணர்வுகள் நம் உடல் முழுவதும் படர்கின்றது. அப்பொழுது உடலின் வெப்பத்தால் கொதித்து
துருவ நட்சத்திர அலைகள் நம் உடலிருந்து மணங்களாக வெளிப்படத் தொடங்குகின்றது.
1.உடலிலிருந்து வெளிப்படும் துருவ நட்சத்திரத்தின் மணம்
2.ஏற்கனவே நம் உடலைச் சுற்றியிருக்கும் ஆன்மாவில் உள்ள
தீமை செய்யும் அலைகளைப் பிளந்து (வகுந்து)
3.நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து கழற்றி வெளியே தள்ளிவிடுகின்றது.
4.ஆக, விஷத்தைப் பிளந்து தள்ளினால் இருள் நீங்குகின்றது.
ஆறாவது அறிவு ஏழாவது ஒளியாகின்றது. அதைத்தான் "ஈரேழு
லோகத்தையும் வென்றவன் விண் சென்றான்" என்று காவியத்தில் தெளிவாகக் கொடுத்துள்ளனர்
நமது ஞானிகள்.
நாம் அகற்றிய தீமை செய்யும் உணர்வுகள் அனாதையாகிவிடுகின்றது.
எந்தப் பிடிப்பில்லாத அத்தகையை தீமையான உணர்வுகளை சூரியன் ஈர்த்து மேலே எடுத்துச் சென்று
கருக்கிவிடுகின்றது.
இதன் வழி கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவரும், தீமைகளை
வென்றிடும் நிலையாக துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைத் தமக்குள் பெற்று ஆறாவது
அறிவை ஏழாவது நிலையாக ஒளியின் சரீரமாக பெற்று வாழ்ந்து வளர்ந்திடுங்கள்.