ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 10, 2017

நஞ்சு குறைந்த தேவாங்கின் இயக்கம் - நஞ்சை வென்று ஒளியாக மாற்றிடும் வேகா நிலை

நாம் நல்லவைகள் ஆயிரம் செய்தாலும் அதற்குள் நஞ்சு கலந்துவிட்டால் அந்த நல்லது அனைத்தையுமே அது அடிமையாக்கி விடுகின்றது.

ஆனால், நஞ்சினை வென்ற அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டால் அந்த நஞ்சினை ஒடுக்கி உணர்வின் தன்மை ஒளியாக்க முடியும்.

1.நாம் உயிருக்குள் இருக்கும் நஞ்சின் துடிப்பே - உயிரின் இயக்கம்.
2.நஞ்சு அதிகரித்துவிட்டால் துடிப்பின் இயக்கம் குறைவாகிவிடும்.

தேவாங்கு என்ற உயிரினத்தை நீங்கள் பார்க்கலாம். அதிலே நஞ்சின் இயக்கத் துடிப்பு குறைவு. உணர்ச்சியின் தன்மை வேகத்தைக் குறைத்த நிலைகள் வரப்படும் போது அதனுடைய “இயக்கச் சக்தி” குறைவாகின்றது.

உடலில் நல்ல தசைகளாக இருப்பினும் எவருக்கும் தீங்கு செய்யாத நிலையில் உடல் அமைப்பு கொண்டுள்ளது. உயிரின் துடிப்பு குறைவாக உள்ளதால் தன்னைத்தானே தான் காத்திடும் நிலை இழந்த நிலைகள் கொண்டுள்ளது.

1.உயிர் மற்றொன்றைத் தாக்கி அதன் உணர்வின் தன்மை கொண்டு
2.கடுமை கொண்ட உணர்வின் தன்மை எடுக்கப்படும்போதுதான்
3.இதன் உணர்வின் இயக்கமாக அது வளர்ந்து
4.அதற்குள் மற்றது அந்த உயிரின் வலுவையே பெற முடியும்.

ஒவ்வொரு உயிரனத்திற்கு அதற்கென்ற (உடல் அமைப்பு) தசைகள் கொண்டுள்ளது. பல்வேறு விதமான தசைகள் கொண்ட அத்தகைய உயிரினங்களின் உயிரில் உள்ள விஷத்தன்மை குறைந்துவிட்டால் என்ன ஆகின்றது?

1.விஷத் தன்மை குறைந்தால்
2.உயிரின் துடிப்பு வேகம் குறைந்து
3,எடுத்துக்கொண்ட உணர்வின் தன்மை சீராக இயக்காது அந்த உணர்வின் தன்மை மறைந்துவிடும்.
4.அதனின் வலுவை இழந்து விடும்.

இதைப்போன்ற இயக்கத்தின் தன்மை கொண்டு அத்தகைய உயிர்கள் வாழ்ந்தாலும் விஷத்தன்மை குறைந்ததாக இருப்பினும்... “எந்த நெருப்பிலும் இந்த உயிர் வேகாது”.

ஆனால் நஞ்சின் அறிவுடன் இருந்தால் நஞ்சினைத் தான் விளைய வைக்கும். அதாவது இன்று பூச்சிகளைக் கொல்லப் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தூவுகின்றோம்.

பூச்சிகள் இந்த விஷத் தன்மை கொண்ட அந்தப் பூச்சிக்கொல்லி மருந்தைச் சுவாசிக்கும்போது அந்த உயிரிலே பட்டபின் அந்த உடலை மடியச் செய்கின்றது.

1.ஆனால் அதே சமயம் மடிந்து கொண்ட பின் இந்த நஞ்சின் உணர்வு அதனுடன் இணைந்து கொள்ளுகின்றது.
2.மீண்டும் அதே உயிரணு மற்ற நஞ்சு கொண்ட உயிரணுவாக மாறி
3.இந்த நஞ்சிற்கே அதைக் கொல்லும் சக்தி அதிகமாகி விடுகின்றது.

இதைப்போல நஞ்சைப் பாய்ச்சிப் பயிரைக் காக்க இவர்கள் தூவும் மருந்து அந்த சமயம் பூச்சிகளின் உடல்கள் மடிந்தாலும்
1.இந்த நஞ்சின் தன்மை உணர்வாக இணைந்து
2.அந்த உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
3.நஞ்சினை வீழ்த்திவிடும் நிலைகள் வருகின்றது.
4.அதை எதிர்த்துத் தாக்கும் நிலை வருகின்றது.

இதைப்போன்ற தீமையின் நிலைகள் கொண்டால் தீமையின் உணர்வைத்தான் நமக்குள் அதிகரிக்கச் செய்யும். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து இந்த நஞ்சினை ஒடுக்கிடல் வேண்டும். அதை அடக்கிடல் வேண்டும்.

உயிர் எவ்வாறு எந்த நெருப்பிலும் வேகுவதில்லையோ எந்த நஞ்சிலும் மடிவதில்லையோ அதைப் போன்று நாமும் அழியாத நிலையாக வேகா நிலை என்ற நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்.

வேகா நிலையாக நமக்குள் உணர்வின் இயக்கம் மற்றொன்றை மடிந்திடாது உயிருடன் ஒன்றிய ஒளியின் சிகரமாக இருளைப் பிளந்து ஒளி காணும் உணர்வை இந்த உடலிலே விளைய வைக்க வேண்டும்.

1.இதை விட்டு அகன்றால் என்றும் பதினாறு என்ற நிலையும்
2.அழியா ஒளிச் சரீரம் என்ற நிலையும்
3.பிறவியில்லா நிலை என்ற நிலையும் அடைய முடியும்.

ஞானிகள் காட்டிய அத்தகைய மார்க்கத்தில் நாம் செல்லுவோம். இந்த உடல் சதமல்ல. எந்த நிமிடத்திலும் இந்த உடலை விட்டு இந்த ஆன்மா செல்லலாம்.

இந்த உடலில் எந்த உணர்வை அதிக அளவில் நாம் எடுத்து விளைய வைத்தோமோ இந்த அளவு கோல்படிதான் அடுத்த உடலை உருவாக்கும் நிலையும் அந்த உணர்வின் செயலாக்கமும் வரும்.

நாம் எந்த நிமிடம் இந்த உடலை விட்டு அகன்றாலும் மெய்ஞானிகளின் ஈர்ப்பு வட்டத்தில் செல்ல வேண்டும்.

1.அதனின் வழித்தொடரில் தொடர்ந்து அந்த வரிசையில் சென்றால்
2.நாம் அதனின் அரவணைப்பில் நாம் என்றும் ஒளிச் சரீரம் பெற முடியும்.

நீங்கள் மந்திரங்களைச் சொல்லி மீண்டும் மனித உடலுக்குள் தாவி அவனின் அடிமையாகி அவன் காட்டும் நஞ்சினை உணவை உட்கொண்டு மீண்டும் இழி நிலையான சரீரம் பெறவும் முடியும்.

உங்களுக்கு எது எது தேவையோ அதை எடுத்துக் கொள்ளலாம்.

நஞ்சு கொண்ட நிலைகளை நீக்கிய அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்து நஞ்சை அகற்றிடும் உணர்வைப் பெற்று இன்று உயிருடன் ஒன்றிய ஒளியான சரீரம் பெறவேண்டும் என்று எவர் ஒருவர் எண்ணுகின்றாரோ அதை நிச்சயம பெற முடியும்.