ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 14, 2017

குப்பைக்குள் மாணிக்கம் கிடந்தாலும் கிளர்ந்தெடுக்கும்போது… “ஒளியின் சுடர்” வருவது போல் மனிதனுக்குள் மறைந்திருக்கும் ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்தால்… “என்றுமே வெளிச்சம்”

உதாரணமாக ஒரு கருணைக் கிழங்கு விஷத்தின் தன்மை கொண்டிருந்தாலும் அந்த விஷத்தை நீக்கிய பின் ஆற்றல் மிக்க நிலைகள் கொண்டு நம் சரீரத்திற்குச் சத்தாக ஆகின்றது.

அதைப் போன்று அரிசி உருவாவதற்கு அந்த உமியே பிரதானமாகின்றது. இவ்வாறு கடினமான உணர்வின் ஆற்றல்களாக இருந்தாலும் அதே ஆற்றல் (தீமைகள்) நம் உடலுக்குள் சென்றுவிட்டால் தீயதை விளைவிக்கும்.

நெல்லின் உமியை நீக்கியபின் அரிசி எவ்வாறு இருக்கின்றதோ அதைப் போன்று கடுமையான அந்தச் சுவாசத்தை நாம் சுவாசித்தாலும் நாம் சுவாசித்த அந்த உணர்வின் அலைகள் நம் உடலுக்குள் கலந்துவிடுகின்றது.

நெல்லின் உமியை நீக்கிவிட்டு உள்ளே இருக்கக்கூடிய அரிசியை நாம் எவ்வாறு பெற்றோமோ அதைப் போன்று 
1.விஷத்தின் ஆற்றலுக்குள் இருக்கக்கூடிய இயக்கும் அந்த உணர்வின் ஆற்றலை
2.நாம் சுவாசிப்பதற்காக மகரிஷிகள் பெற்று
3.அவர்கள் பெற்ற அந்த உண்மையினுடைய நிலைகளை மனிதர்கள் உடலிலே செலுத்தி
4.ஒவ்வொரு மனிதரிடததிலும் உள்ள துன்புறுத்தும் உணர்வலைகளை நீக்கினார்கள்.

ஏனென்றால் உடலுக்குள் விளைந்த அந்தத் துன்புறுத்தும் அணுவின் தன்மைய நீக்குவதற்கு யார் துன்புற்றுக் கொண்டிருக்கின்றனரோ அவர் உடலிலே மெய்ஞானியின் அருள் சக்தியின் தன்மையை அந்தச் சுவாசத்தைப் பாய்ச்சி உணரச் செய்தார்கள்.

மனித உடலுக்குள் துன்புறுத்திக் கொண்டிருக்கும் நிலைகளில் உமியை நீக்கியது போன்று அந்தத் துன்பத்தை நீக்கி அந்த நல்ல வித்தான சத்தை அங்கே உருவாக்கினார்கள் மகரிஷிகள்.

ஏனென்றால் மெய் ஞானிகளின் அருள் ஒளி என்றுமே அழிந்து விடவில்லை. அந்த உணர்வின் ஆற்றல் எல்லா மனிதருடைய எண்ணத்திற்குள்ளும் மறைந்திருக்கின்றது.

குப்பைக்குள் மாணிக்கம் கிடந்தாலும் அதைக் கிளர்ந்து எடுக்கும் போது “ஒளியின் சுடர்…” நிச்சயம் வரும்.

நமக்குள் இருக்கக்கூடிய
1.மறைந்த உணர்வின் ஆற்றல் மிக்க ஒளியின் தன்மையைக் கிளர்ந்து
2.மகரிஷிகளின் அருள் சக்தியை தியானத்தாலே வெளிப்படுத்தி
3.நமக்குள் அந்த உணர்வின் தன்மையை எண்ணச் செய்து
4.அந்த மெய் ஒளியின் சுடருடன் உடலை விட்டுச் சென்றவுடன் “என்றும் வெளிச்சம்”.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே அந்த அழியா ஒளியின் சரீரம் அடைய முடியும்.