ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 4, 2024

மனப்போராட்டமும்… உடலில் வரும் வலி வேதனைகளும்

மனப்போராட்டமும்… உடலில் வரும் வலி வேதனைகளும்


சில குடும்பங்களில் ஒருவருக்கொருவர் தேளும் பாம்புமாக இருப்பார்கள். எவ்வளவு தான் இருந்தாலும் உள்ளே ஒன்றுக்கொன்று வெந்து கொண்டு தான் இருக்கும்... ஒருவருக்கொருவர் போராட்டம் அதிகமாக இருக்கும்.
1.அச்சுறுத்தும் உணர்வுகளும் பயமான உணர்வுகளும் அதிகமாகும் பொழுது உடலுக்குள் போர் நடந்து கொண்டிருக்கும்
2.ஏனென்றால் அதற்குச் சாப்பாடு தேவை.
 
பையன் மீது வெறுப்படைந்து விட்டால் அத்தகைய அணு உண்டாகிவிட்டால் அந்த வெறுப்பின் உணர்வுகளே அதற்குச் சாப்பாடு. அந்த வெறுப்பு வளரப்படும் பொழுது அத்தகைய அணுக்களே பெருகும்.
 
ந்த அணுக்கள் பெருகும் பொழுது நாம் நுகர்ந்ததற்கும் உடலுக்கும் வெறுப்பாகி போர் முறையாகி உடல் நலியத் தொடங்கும். ஒன்றுக்கொன்று சண்டை போடும்.
1.இங்கே பளீர்…ர் என்று மின்னுகின்றது இங்கே குத்துகின்றது
2.தலை வலிக்கின்றது பிடரி வலிக்கின்றது இடுப்பு வலிக்கின்றது கால் வலிக்கின்றது கை வலிக்கின்றது என்று ஆரம்பித்து விடுவார்கள்.
 
இது எல்லாம் எங்கிருந்து வருகின்றது…?
 
நாம் நுகர்ந்த உணர்வுகள் அணுவாகி அதற்கு உணவு அது தேடும் பொழுது அந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டி இந்த உணர்வின் தன்மையாகும் பொழுது பளீர்…ர்.. என்று உடலில் குத்தினால் ஆ…! என்று சொல்வார்கள்.
 
இப்படி வலி எடுக்கும் பொழுது அந்த நேரத்தில் நீ சந்தோஷமாக இரு என்று யாராவது சொல்லிப் பாருங்கள்… பார்க்கலாம். ஒன்றுமில்லை நீ சந்தோஷமாக இரு…! என்று ப்படிச் சொல்லச் சொல்லக் கோபம் அதிகமாகும்.
 
இன்னும் கொஞ்சம் ஆன பிற்பாடு
1.”இவர்களுக்கு என்ன தெரியும்…” நான் படுகின்ற அவஸ்தை…!” என்று
2.அந்த அவஸ்தையைத் தான் எடுத்துக் கொள்வார்களே தவிர நல்ல சொல்களை எடுக்க முடிவதில்லை.
 
தாயாகவே இருந்தாலும் சரி குழந்தை வேதனைப்படுகிறது என்று “அட கண்ணு… நீ இதைச் சாப்பிடு…” என்று சொன்னாலும் “நீ சொல்லிக் கொண்டே இருந்தாலும் நான் கேட்க மாட்டேன் என்று தாய் மீது வெறுப்பு தான் இன்னும் அதிகமாகும்.
 
ஐயோ… தன் பையன் கெட்டுப் போகின்றானே… இந்த மாதிரி இருக்கின்றான் சும்மா இருடா ராஜா…! என்று சந்தோசமாகச் சொல்லிக் கொஞ்சிப் பாருங்கள். உங்களை எப்படிப் பதிலுக்குக் கொஞ்சுகிறான் என்று பாருங்கள்.
 
இரண்டு தடவை சாப்பாடு கொடுத்துப் பாருங்கள் சிறிய குழந்தையாக இருந்தாலும் சரி பெரியவராக இருந்தாலும் சரி எவ்வளவு கோபம் வருகிறது என்று பார்க்கலாம்…! ந்த உணர்வுக்குத் தக்க குணங்கள் வரும்.
1.அப்பொழுது எது இயக்குகின்றது…? அந்த நல்லதை எடுக்க முடியவில்லை
2.அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?
 
இதை எல்லாம் சுட்டிக்காட்டுவதற்குத் தான் ஆலயத்தில் காட்டுகின்றார்கள்.
1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்ச்சிகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் அனைவரும் பெற வேண்டும்
3.இந்த ஆலயம் வருவோரெல்லாம் தெய்வீக நிலைகள் பெற வேண்டும்.
4.அவர்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும்.
5.நான் பார்க்கும் குடும்பம் எல்லாம் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
6.காரணம் அந்த உலக மக்களுடைய உணர்வுகள் அனைத்தும் நம் உடலில் இருக்கின்றது.
 
நல்லவர்களையும் பார்த்திருக்கின்றோம். கெட்டவர்களையும் பார்த்திருக்கின்றோம். பார்த்த ஒவ்வொரு குடும்பத்திலும் அந்தத் தெய்வீக நிலைகள் பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கையில் புனிதம் பெற வேண்டும் என்று நாம் எண்ணி எடுத்தல் வேண்டும்.
 
1.இப்படி எண்ணி அந்த அருள் உணர்வுகளை எடுத்தால் தான்
2.நம் உடலுக்குள் வரக்கூடிய போர் முறைகளையும்… ஒன்றுக்கொன்று எதிர்மறையாக இயங்கக்கூடிய நிலைகளையும்
3.நாம் நல்லதாக மாற்றி அமைக்க முடியும்.

ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள்

ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள்


காட்சி:- மீனவன் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது போலவும் ஒவ்வொரு மீனாகத் தூண்டிலில் பிடித்துப் பையில் எடுத்துச் செல்வதைப் போலவும் தெரிகின்றது.
 
விளக்கம்:- மீனவனுக்கு வேண்டியது மீன் தான். அவன் தூண்டிலில் போட்டுத் தரும் ஆகாரத்தை எந்த மீன் எடுக்கின்றதோ அதைத்தான் அவன் எடுத்துச் செல்கின்றான்.
 
அதைப் போல இவ்வுலக ஞானம் பெற தன் ஒளியை இவ்வுலகத்தில் உள்ள ஆத்மாக்களிடம் செலுத்தி அவ்வொளியை எவ்ஆத்மா ஈர்க்கின்றதோ அவ்ஆத்மாக்களைத் தன் ஞானத்துடன் எடுக்கின்றனர் ஒளியின் பால் உள்ள சப்தரிஷிகள்.
 
1.குறிப்பிட்ட ஆன்மாவைத் தன் சக்தியின் பால் ஈர்க்கவில்லை
2.எல்லா ஆத்மாக்களுக்குமே அந்த ஒளி பாய்ச்சப்படுகின்றது.
3.எந்த ஆத்மா அந்த ஒளியுடன் கலக்கின்றதோ அவ்வாத்மாவின் சக்தியைத் தன் ஒளியான ஞான வட்டத்தில் சுழல விட்டு
4.அவ்வாத்மாவின் ஒளியிலிருந்து பல சக்திகளைத் தன் ஒளி வட்டத்திற்கு ஈர்த்துச் செயல்படுகின்றார்கள் சப்தரிஷிகள்.
 
அப்படிப்பட்ட நிலை கொண்டவர் தான் ஞானகுரு வேணுகோபால சுவாமி அவர்கள். அவரின் ஒளியைக் கொண்டு நம் மேல் அந்த ஒளி பாயும் பொழுது நாமும் அவர் பெற்ற ஞான ஒளியில் பங்கு ஏற்கின்றோம்.
 
இதைப் போலத்தான் பல சித்தர்கள் நம்முடன் கலந்து விளையாடுகின்றனர். ஔவைப் பிராட்டி நமக்குக் கிடைத்ததும் இந்த நிலைதான்
 
காட்சி:- ஔவையார் வரும் நிலை
 
உலக ஆத்மாக்களுடன் சில காலங்களில் கால நிலைகள் மாறு கொண்டு உருமாறும் தருணத்தில்
1.சப்தரிஷிகளின் சக்தி நிலையை உலகம் உணர்வெய்தி விழிப்புறச் செய்ய
2.மனித ஆத்மாக்கள் நிலையிலிருந்து தான் செயல் கொள்ள முடியும்.
3.அந்நிலையில் தூண்டில் போட்டு எடுத்தவர் தான் ஞானகுரு வேணுகோபால சுவாமிகள்.

தான் விதைத்ததன் பலனைப் பொறுக்கி எடுக்கின்றாள் ஆதிசக்தி

தான் விதைத்ததன் பலனைப் பொறுக்கி எடுக்கின்றாள் ஆதிசக்தி


ஞானத்தின் சக்தி பெற்று சித்து நிலை பெற்றிடவே நம்முள் ள்ள அமில சக்தியை எல்லாம் நம் நிலைக்குகந்த அமில குணத்தை இந்த ஞானத்தின் ஈர்ப்பிற்குச் செல்லும் குண அமிலமாக நாம் செயல்படுத்திட்டால் எவ்வமிலத்தை நாம் எவ்வழித் தொடருக்கு அதிகப்படுத்தி அதன் ஈர்ப்பில் வளர விடுகின்றோமோ அதன் தன்மையின் ஆணைக்குட்பட்டு மற்ற அமில குணங்களும் இதன் கட்டுப்பாட்டிற்கே அடங்கிச் செயல்படுத்திட வைத்திடலாம்.
1.அதனதன் குணம் என்றுமே மாறாது.
2.ஆனால் அதனை இதனின் கட்டுப்பாட்டிற்குள் அடக்கி வைத்திட முடியும்.
 
நல்ல அமிலத்தின் செயலைப் போன்றே தீய அமில குணத்தின் செயல் நிலையும் அதன் செயலிலேயே வழி கொண்டிடும்.
1.நமக்குள் உள்ள இப் பன்னிரண்டு வகை அமிலத்தையும் அதன் போக்கில் நாம் செல்ல விட்டிட்டால்
2.அதனதன் தொடரில் எதன் குணம் அதிகப்படுகின்றதோ அதற்குகந்த ஆவி குண அமிலங்களும்
3.இதன் ஈர்ப்பில் அந்த குணத்துக்குடைய இக்காற்றினில் சுற்றிக் கொண்டிருக்கும் உடலை விட்டுப் பிரிந்த
4.மனித ஆத்மா மிருக ஆத்மா என்ற பாகுபாடு இல்லாமல் இக்குண அமிலதத்துடன் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.
 
இப்படிச் சேரும் ஆவி அமிலங்களில் சில சக்தி வாய்ந்த ஆவி அமிலங்கள் உடலில் ஏறிவிட்டால் அதன் செயல்நிலை அவ் உடலில் உள்ள உயிர் ஆத்மாவைக் காட்டிலும் இதன் தூண்டுதலின் வெறிக்கு உட்பட்டு மென்மேலும் இதன் நிலைக்கே தான் இழுத்துச் சென்று கொண்டே இருக்கும்.
 
பக்தி ஞானம் சித்து என்ற நல்லுணர்வு அமில சக்தியின் கூட்டு நிலையும் இப்படித்தான். சலிப்பு கோபம் வெறி குரோதம் இப்படிச் செயல்படும் நிலையின் அமில குணமும் அதன் ஈர்ப்பில் தான் இழுத்துச் செல்லும்‌.
 
இப்படி இத் தீய அணுவின் அமில குணத்திற்குக் கட்டுப்பட்ட ஆத்மாக்களை அத் தீய அமில சக்தி மென்மேலும் அதனை இழுத்துச் சென்று வஞ்சனை குரோதம் கொலை கொள்ளை இப்படிச் செல்லும் அமில உயிர் ஆத்மாக்கள் அதன் வெறி உணர்வினால் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்றாலும் இவ்வெறி உணர்வு அடங்காமல் அதே நிலை கொண்ட உடல்களில் ஏறி தன் வெறிக்குகந்த செயலை மென்மேலும் தூண்டி மனித ஆத்மாவைப் பேயாக்கி விடுகின்றது.
 
இவ் வெறி கொண்ட ஆவி உலக ஆவி மனித ஜீவ உடல் கொண்ட அதே குணநிலையில் உள்ள ஆத்மாவின் உடலில் ஏறி மென்மேலும் இவ்வெறி உணர்வு அதிகப்பட்டு உடலில் உள்ள பொழுதே மாமிச உணவுகளை மிக அதிகமாக உண்டு அதன் வெறியிலேயே உடல் பிரிந்து சென்றாலும் அவ்வாவிகள் தான் தன் வெறிக்குகந்த உணவைப் பெற இரத்தக் காட்டேறிகளாய் அவ் உதிரத்தின் சுவாசத்தை எடுக்க ஆவி உலகில் இருந்து கொண்டு வெறியாட்டம் நடத்துகின்றன.
 
இன்று உலகில் எல்லா பாகங்களிலுமே அதிகமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றால் எந்த நிலையில்…?
1.இரத்தக்காட்டேறிகளாய் ஆவி உலகில் சூழ்ந்துள்ள இவ்வாத்மாக்களுக்கு அதற்குகந்த ஆகாரத்தை எடுக்கத்தான்
2.அவைகள் செய்யும் வெறிச் செயலினால் இன்றைய உலக ஆத்மாக்கள் மாளுகின்றன.
 
இம் மனிதனே தான் தெய்வமும் ஆகின்றான். இரத்தக்காட்டேறி ஆகவும் ஆகின்றான். எமனாகவும் செயல்படுகின்றான் தேவனாகவும் செயல்படுகின்றான். எண்ணும் எண்ணத்தைக் கொண்டு நல் அமிலத்தை ஈர்த்து வாழ்பவன் தெய்வமாகின்றான். தீய அமிலத்தை ஈர்த்து வாழ்பவன் பேயாகின்றான்.
 
1.ந‍மக்கு எல்லாம் மீறிய அப்பாற்பட்ட சக்தியான அவ்வாதி சக்தி
2.அவள் விதைத்த விதையில் வளரும் நிலை கொண்டு பலனைக் கண்டு அவளே நகைக்கின்றாள்.
3.எல்லா விதையும் ஒன்று போல் விதைத்து அவ்விதையின் பயனைக் கண்டு மென்மேலும் விதைத்துக் கொண்டே உள்ளாள்.
4.விதையின் நற்பயனைத் தன்னுள் எடுத்துக் கொண்டு வேண்டாத பயனை ஒரு காலகட்டத்தில் மாற்றி அமைத்து விடுகின்றாள்.
5.இக்கலியில் பொறுக்கி எடுக்கின்றாள் தான் விதைத்ததன் பயனை எல்லாம்
6.தனக்குகந்தது எது என்று அவளுக்குத் தெரியும்… மற்றவற்றைத் திரும்பவும் உழுது பயிருக்கு அனுப்புவாள்.
7.மாற்றி மாற்றிப் பலனை எடுத்துக் கொண்டேதான் இருக்கிறாள்.
 
இதனை உணர்ந்து இரத்தக்காட்டேறிகளாய் அலையும் ஈர்ப்பில் நாம் போய்ச் சிக்காமல் அன்பென்னும் பக்தி நெறியில் நம்முள் உள்ள அமில குணங்களை வழிநடத்தி அந்த ஞானத்தின் சித்தடைவோம்.

December 3, 2024

உடலுக்குள் நோய் உருவாகும் விதம்

உடலுக்குள் நோய் உருவாகும் விதம்


உதாரணமாக வேதனை என்ற உணர்வினை அதிகமாக நாம் எடுத்தால் கோழிகுஞ்சுகளைப் பொரிப்பது போன்று நம் உடலில் இரத்தத்தில் அணுக்கள் உருவாகி விடுகின்றது.
 
எந்த வேதனைப்பட்டமோ அது தான் அதற்கு உணவு…! நம் உயிரால் கருவாக்கப்பட்டு அந்த அணுத்தன்மை அடைந்தால் பசிக்காக ஏங்கும் பொழுது உயிருக்கே எட்டுகின்றது.
 
நாம் எந்தக் கண் வழி வேதனைப்படுவோரைப் பார்த்தோமோ அதன் உணர்வு உயிரின் நிலை கொண்டு அந்த உணர்வால் உணர்ச்சிகளாக நாம் அறிகின்றோம்.
 
இருந்தாலும் ரத்த நாளங்களில் அது கருவாக உருவாகி விடுகின்றது. கருவா உருவானதோ அணுவாகி விடுகின்றது அணுவான பின் உணவுக்காக அது அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் போது உயிருக்கு வருகின்றது.
1.உயிருக்கு வந்தபின் கண்களுக்கே மீண்டும் வருகின்றது.
2.கண் வழி இந்த பூமியில் படர்ந்துள்ள எந்த மனிதனின் உடலில் இருந்து அந்த வேதனையான உணர்வுகள் வெளிப்பட்டதோ
3.அதை நமது கண்ணான காந்தப்புலன் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
4.நமது ஆன்மாவாக மாற்றிய பின் நமது உயிரில் உள்ள காந்தம் ழுத்து அந்த உணர்வினை ரத்தங்களில் கலக்கச் செய்கின்றது.
 
ரத்தங்களில் கலந்த பின் எத்தகைய வேதனை உணர்வு அணுவானதோ அந்த ரத்தத்திலிருந்து வேதனையான உணர்வுகளை உணவாக உட்கொள்கின்றது.
 
காற்று மண்டலத்தில் எல்லாச் செடி கொடிகளின் சத்துகளும் கலந்துள்ளது ஆனால் அதனதன் வித்துகளை நிலத்தில் ஊன்றும் பொழுது எப்படி நிலத்தின் துணை கொண்டு அதனதன் செடியின் சத்தைக் கவர்ந்து செடிகள் விளைந்து னதன் வித்துக்களை உருவாக்குகின்றதோ இதைப் போன்று தான்
1.நம் உடலுக்குள் அந்த ரத்தங்களில் சுழன்று வருவதை எந்தெந்த குணங்கள் கொண்டோமோ அந்த அணுக்கள் அதை உணவாக உட்கொள்ளும்.
2.அதன் வழி அது தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டே இருக்கும் வேதனை என்ற உணர்வை வளர்த்துக் கொண்டே இருக்கும்.
 
நம் உடலில் நுரையீரல் இருக்கிறது என்றால் வேதனை என்ற உணர்வுகள் அங்கே அந்த முட்டை வெடித்து அணுவாக உருவானால் அந்த இடத்திலிருந்தே ரத்தத்திலிருந்து வருவதை அந்த அணு உறிஞ்சி தன் இனத்தைப் பெருக்குகின்றது.
 
தன் இனமான அணுக்களைப் பெருக்கப்படும் பொழுது நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நுரையீரல் பழுதடையத் தொடங்கி விடுகிறது.
 
நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட அந்த நுரையீரல் சசுருங்கத் தொடங்கினால் அதனால் உடலில் உபாதைகளும் சரியாக சீராக இயங்காதபடி நாளடைவில் இந்த அணுக்கள் பெருகப் பெருப் உடலும் சுருங்கத் தொடங்கிவிடும்.
1.வேதனையான உணர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க
2.உடலுக்குள் இருக்கும் அணுக்கள் அனைத்திலும் விஷங்கள் புகுந்து விடுகின்றது. கடும் நோயாகின்றது.

ஞானம் பெறும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றேன்

ஞானம் பெறும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றேன்


அன்று சில உண்மை நிலைகளைக் காவியங்களாக்கி உணர்த்திய நிலையிலிருந்துதான் (சித்தர்களின் நிலை) இன்று விஞ்ஞானம் காண்கின்றோம்.
 
இப்பூமியின் ஈர்ப்பிற்கு மூலகாரணமாய் ஆணிவேராய் உள்ள ஓம் என்ற நாதத்தினால் ஈர்க்கப்பட்ட அமில குணங்கள் தான் இவ்வுலகனைத்துமே. ஒன்றுடன் ஒன்று கலக்கச் செய்து அதன் ஒளி அமிலத்தை இப் பூமியே பல நிலைகளில் வளர்த்துக் கொண்டது.
 
1.இப்பூமியின் அமில சக்தியான ஈர்ப்பின் அலை கொண்டு தான் அனைத்து நிலைகளும் நடக்கின்றன.
2.எதுவுமே ஒதுக்கப்பட்ட சக்தியற்ற ஜீவனில்லா நிலை இப்பூமியில் இல்லை.
3.ஒவ்வொன்றிற்கும் அதன் ஈர்ப்பிற்கு ஏற்ப அதன் குணநிலையுண்டு.
4.அதன் வளர்ச்சியில் மாற்ற நிலைகளும் உண்டு.
 
இயற்கையுடன் வளர்ந்திட்ட சக்திதனிலேயே உயர்ந்த ஞானம் கொண்ட மனித ஆத்மாவின் உடலைக் கொண்ட நாம் இவ்வுலகின் உண்மை நிலையை உணர்ந்திடாமல் இருந்திடலாகாது என்பதனை அன்று உணர்ந்த சித்தர்கள் அந்தந்தக் கால நிலைகளுக்கொப்பக் கவிதைகளாக்கி காவியங்களாக்கி பல அபூர்வ நிலைகளை எல்லாம் புரியும் நிலையில் வடித்துச் சென்றார்கள். சென்றார்கள் என்ன…? வடிவாக்கி நின்றார்கள்.
 
ஆனால் இக்கலியின் கதையின் ரூபமாய்க் கண்டுணர்ந்து விரயப்படுத்தி விடுகின்றோம். ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு தத்துவக் கோளங்கள் உண்டு. நம் முன்னோர்கள் உணர்த்தி ஏற்படுத்திய அரும் பெரும் பொக்கிஷத்தை நாம் கண்டுணர வேண்டும்.
 
இவ்வுடல் என்ற மாய பிம்பத்தின் அற்ப ஆசைக்காக ஆத்மாண்டவனின் அறிவு ஞான பொக்கிஷத்தைச் சிதறவிட்டே வாழ்கின்றோம்.
 
அன்று பல சித்தர்களினால் ஆண்டவனாய்ப் பல ரூபப்படுத்தி அவரவர்கள் எண்ணத்திற்குகந்தபடி எல்லாம் ஆண்டவனின் ரூபத்தைக் கண்டுணர்ந்து அவர்களின் ஞானப்பாலை வெளிப்படுத்தினார்கள்.
 
1.எங்கும் நிறைந்துள்ள ஆண்டவனை எந்த ரூபத்தில் கண்டால் என்ன…? என்ற தத்துவ நிலையை
2.அவரவர்கள் சிவனாகவும் விஷ்ணுவாகவும் பிரம்மாவாகவும் வடிவமைத்துத் தந்தார்கள்
 
அன்பு நற்பண்பு சத்திய ஜெபம் இவற்றை நாம் மேற்கொண்டால் அன்றைய சித்தர்களினால் சிவனாகவும் விஷ்ணுவாகவும் பிரம்மாகவும் படைக்கப்பட்ட ஆத்மாண்டவனை…” இயற்கையின் எல்லாமில் எல்லாமாய் உள்ள ஒளியுடன் கலக்கச் செய்யலாம்.
 
1.அன்றைய சித்தர்களிலேயே ஒவ்வொரு சித்தனும் பல நிலைகளில் விளக்கியுள்ளான்.
2.பல பாடல்களை இயற்றி இன்றைய கால நிலைக்கும் பொருந்தும் நிலை ஏற்படுத்தியுள்ளான்.
3.ஆனால் இந்த ஞானத்தின் பொக்கிஷத்தை மனித ஆத்மாக்கள் பயன்படுத்தாமல் செயல் கொண்டு வருகின்றன.
 
கருவூராரின் கருவூலத்தைக் காண்பாரும் இன்றில்லை. கருவூலத்தின் கருவையே கரியூலமாக்கிக் களிப்படையும் காலமப்பா இது.
 
ஒவ்வோர் ஆத்மாவும் தான் பிறந்த கருவூலத்தின் மகிமையை உணர்ந்து வாழ்ந்திடுங்கள். கனவூலத்தில் களிப்பெய்திக் காணும் சுகம் என்னவோ என்பதனை உணர்ந்து வாழ்ந்திடுங்கள்.
 
பக்தியையும் ஞானத்தையும் வளரவிட்டு முக்தி என்னும் பக்தி பெறலாம். பக்தியில் வழி எடுத்து முக்தி என்னும் பக்திக்கே செல்லும் மார்க்கத்தை அடையலாம்.
 
சிற்றின்பம் பேரின்பம் என்றிட்டே ஞான இன்பத்தை நாசப்படுத்திட்ட நிலை ஏனப்பா…?
 
1.உண்டாலும் உண்ணாவிட்டாலும் இரவும் பகலும் மாறிக்கொண்டு தான் உள்ளன.
2.நாம் பெறப் போகும் ஞானத்திற்காக நாம் பெறப்படும் வரை எதுவுமே நமக்காக நிறுத்தி வைப்பதில்லை.
3.கருவூலத்தின் கருவாகிய நாம் நம் ஞானத்தை பெறும் சக்தியை அடையும் பக்குவத்தைத் திரும்பவும் திரும்பவும் செப்புகின்றேன்
4.நீங்கள் செயல்படுத்திட வேண்டும்.

December 2, 2024

துருவத்தின் வழி… புருவத்தின் வழி… துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர வேண்டும்

துருவத்தின் வழி… புருவத்தின் வழி… துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர வேண்டும்


அகஸ்தியன் துருவனாகி பின் திருமணமாகி கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாக இணைந்து இரு உணர்வும் ஒன்றென இணைந்து துருவ மகரிஷி ஆகித் தனக்குள் சிருஷ்டித்து இரு உயிரும் ஒன்றாக இணைந்து இருளை அகற்றி ஒளி என்ற உணர்வாக ஒன்றி வாழ்ந்து ஒளியின் சரீரமாகி எந்த துருவத்தை எண்ணி ஏங்கினார்களோ அதையே எல்லையாக்கி துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.
 
அகஸ்தியனும் அவன் மனைவிவும் பிறவியில்லா நிலை அடைந்து வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தினின்று வெளிப்படும் ஒளி அலைகளைச் சூரியன் கவர்ந்து வருகின்றது. பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.
1.நமது பூமி துருவத்தின் வழியாக இழுக்கின்றது. இங்கேடர்கின்றது.
2.அதிகமாகப் பாயும் இந்த அதிகாலை நேரத்தில் துருவத்தை உற்று நோக்கி
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் அதை நாம் நுகர நேர்கின்றது
4.நம் உடலுக்குள் அது பரவுகின்றது நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்களுக்கும் அது கிடைக்கின்றது.
 
அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்த்துக் கொண்டு வந்தால் இந்த உணர்வுகள் சிறுக சிறுக நல்ல அணுக்களின் பெருக்கமாகி தீமையான அணுக்களைத் ணித்து நல்ல அணுக்களாக உருவாக்குகின்றது
 
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் நினைவினைச் செலுத்தி அதனுடைய அருள் சக்தி பெற வேண்டும் என்று கண்களை மூடி ஏங்கித் தியானியுங்கள்.
 
ஈஸ்வரா என்று சொல்லும் போதெல்லாம் புருவ த்தியில் உயிரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். ஈஸ்வரன் என்றாலே உயிர் தான்…” அவனிடம் வேண்டி நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் இப்பொழுது செலுத்துங்கள்.
 
துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி திரும்பத் திரும்ப நுகரும் பொழுது
1.புருவ மத்தி வழிதான் உடலுக்குள் அந்த அலைகள் செல்கின்றது.
2.புருவ மத்தியின் வழி ரும் பொழுது குறுகுறுப்பும்… சிலருக்கு ஒளியும் நல்ல உணர்ச்சிகளும் தெரிய வரும்.
3.சிலருக்கு அந்தக் குறுகுறு…” என்று இருக்கும் பொழுது சிறிது வலியும் கூட இருக்கும்.
4.காரணம் நம் உடலில் உள்ள தீ அணுக்களைக் கொன்றிடும் அந்த அரும்பெரும் சக்தி அங்கே படரும் பொழுது
5.தீய அணுக்களுக்குச் செல்லும் உணர்வினை அது மாற்றுகின்றது.
 
ஆகவே உங்கள் நினைவனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள் திரும்பத் திரும்ப…”
 
ந்தச் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்கம் இருக்க வேண்டும். ஏங்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சுவாசிக்க நேர்கின்றது புருவ வழியில்…”
 
1.நமது உணர்வுகள் நுகரும் அல்லது செல்லும் பாதை அந்தப் புருவம் தான்
2.இரண்டு கண்களுக்கு இடையில் புருவ மத்தியில் உயிரின் இயக்கம்
3.நம் உயிரின் துணை கொண்டு துருவத்தில் இருந்து வரும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை
4.புருவத்தின் வழி நம் உடலுக்குள் உள்ள அணுக்களுக்கு அந்த உயர்ந்த சக்தியினை நாம் ஊட்டுகின்றோம்.
5.நம் ரத்த நாளங்களில் அதைப் பெருக்குகின்றோம்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
 
கண்ணின் நினைவலைகளை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது உங்கள் உணர்வலைகள் இரத்த நாளங்களில் கலப்பதும் உங்கள் உடலில் உள்ள அணுக்களில் பெருகும் அந்த உணர்ச்சிகளை அறியலாம்…”

உலகின் சத்திய நியதியை எடுத்துச் சொன்னால்… ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்று இல்லை

உலகின் சத்திய நியதியை எடுத்துச் சொன்னால்… ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்று இல்லை


இப்படி இப்பூமியில் பல காலமாய் ஏற்பட்டதின் தொடர்ச்சியில் பல பல நிலைகள் நடக்கின்றன. ஒன்றைப் போல் ஒன்றில்லாமல் தான் ஒன்றை அழித்து ஒன்று சக்தி கொண்டு இவ்வண்டமும் பேரண்டமும் சுழலுகின்றன.
 
ஆனால் நம் மனித ஆத்மாக்கள் மட்டும் ஒருவரைப் பார்த்து ஒருவர்
1.அவரைப் போல் நாம் வாழ வேண்டும்
2.மற்றவர்களைப் பார்த்து ஆண்டவன் அவர்களுக்கு அபரிமிதமான சக்தியை அளிக்கின்றார் என்ற குறைவான எண்ணம் வேறு.
3.ஒன்றைப் போல் ஒன்றில்லை… ஒன்றில்லாமல் ஒன்றில்லை என்ற நிலை இப்பூமிக்கே உள்ள பொழுது (அனைத்திற்குமே)
4.நாம் ஏன் ஒன்றின் எதிரொலியாய் எதிர்ப்பார்க்க வேண்டும்.
 
ஆதி காலம் தொட்டே ஞானங்கள் உணர்த்தி வந்த நிலையிலும் ஒவ்வொருவரும் அவர்களின் உண்மை நிலையைத்தான் உணர்த்தினார்கள்.
 
இன்று நம் ஞானத்தின் சக்தி பொதுவானது தான். ஒவ்வொருவருக்கும் அந்த ஞானத்தைப் பெறும் ஆற்றல் உள்ளது என்று உணராமல் செக்குமாடுகளாய்ப் போல் சுழன்று கொண்டே உள்ளோம்.
 
ஞானிகள் வெளிப்படுத்தியதை இப்பூமியில் (இந்தியா) உள்ள பல பாகத்தில் இதன் நிலையை எடுத்து அதில் ஆராயும் நிலையைப் (ஞானோதய நிலை) பெற்று பல விஞ்ஞானத்தைத் தன் ஞானத்துடன் சேர்த்துச் செயலாக்குகின்றார்கள்.
 
ஆனால் ஞானத்தை வளர்த்த பூமியிலுள்ள ஆத்மாக்கள் இன்று மற்றைய மேலை நாடுகளின் செயற்கையின் வளர்ச்சியில் மயங்கி இங்கிருந்து அங்கு சென்று வந்தால் இவ்வுலக அனுபவம் பெறலாம் என்று அற்ப ஆசையில் ஓடுகின்றார்கள்.
 
ஞானிகளையே அள்ளி வழங்கிய ஞானச் சுரங்கத்தை எடுக்கும் பக்குவம் இன்றைய காலத்தின் ஜாதியின் அடிப்படையில் சொந்தமாக்கி பக்திக்குப் பொருளைக் கொண்டு ஸ்தானங்கள் அமைக்கப்படும் கோயில்களில் ஏற்படும் இம்மதிப்பு விகிதத்தைக் கொண்டு மங்கச் செய்து விட்டார்கள்.
 
இராமாயணத்தையும் கீதையையும் இவர்கள் ஜாதியின் அடிப்படையில் சொந்தமாக்கி அதில் உள்ள கருத்துக்களையும் மாற்றிவிட்டனர்.
 
ஆனால் விக்ரமாதித்த ராஜாவின் கதையில் உள்ள வேதாள முனிவர் செப்புவதாக உணர்த்திய அதன் கருத்துக்களை மக்களினால் விளையாட்டாகவும் விரும்பத் தகாத முறையில் பேய் என்ற ஒதுக்கப்பட்ட நிலையிலும் ஒதுக்கிவிட்டவர்கள்
1.விக்ரமாதித்தன் கதையில் உள்ள கருத்துக்களை ஊன்றி அறிந்தால்
2.இவ்வுலக நடப்பின் உண்மைகளை அன்றே கதையுருவில் ஆவி பேய் என்ற ரூபத்தில் உணர்த்தியுள்ளார்.
3.விக்ரமாதித்த ராஜாவின் கதையில் உள்ள நிலைகள் உண்மை நிலைகள்.
 
ஒவ்வொரு மனிதனின் எண்ணத்திலும் இன்று பல பேயான குணங்களுக்கு இடமளித்துவிட்டு பேய் என்று உருவமில்லாத நம்பப்படாத நிலைக்கு மட்டும்தான் இன்றைய மனிதன் பயப்படுகின்றான்.
 
உலக நிலை எப்படி இருக்கின்றது பார்த்தீர்களா…?
 
அனைத்துமே ஆவி தான். பக்தி என்று சக்தி மாதா என்று மற்றவர்கள் எழுதி வைத்த மந்திரங்களைப் புரியாமல் உருப்போட்டுப் பல பொருட்களை அச்சக்தி மாதாவுக்குப் படைத்துப் பூஜித்து வணங்கச் சொன்னால் இன்றைய நம் மனிதர்கள் நம்புவார்கள்.
 
1.“உலகின் சத்திய நியதியை எடுத்துச் சொன்னால் ஆவி என்றும் பேய் என்றும் சொல்பவர்களை ஒதுக்கித் தள்ளுவார்கள்…
2.இன்று இங்குள்ள ஆத்மாக்கள் ஒன்றையே சுற்றிச் செக்கு மாடுகளைப் போல் உழன்று உள்ள நிலையில் மறு சொல் ஏற்படுவது கடினம்தான்.
 
நம் பூமியின் நிலையே அந்தந்த இடத்திற்குத் தகுந்த அமிலத்தை ஈர்க்கும் குணத்தைக் கொண்டு இப்பூமியின் பல பாகங்களில் அதனதன் இயற்கை வளத்தின் செழிப்புத் தன்மையும் கால நிலைகளும் உருவாகின்றன.
 
இயற்கைத் தன்மைக்கு மட்டும்தான் அம்மாற்றமா…? இயற்கையின் வளர்ச்சி பெற்ற மனித ஆத்மாவுக்கும் அதுவேதான். அந்தந்தப் பூமியின் காந்த சக்தியைக் கொண்டுதான் மனிதனின் எண்ண ஓட்டம் உருவ வளர்ச்சி உணவு நிலை உறங்கும் நிலை அனைத்துமே இருந்திடும்.
 
இங்குள்ள மனிதனின் சுறுசுறுப்பிற்கும் மற்ற நாட்டின் சுறுசுறுப்பின் தன்மைக்கும் மாறுபடும். இங்கு காய்க்கும் காய்கறி கனி வளங்களைப் போல் மற்ற நாடுகளில் இருப்பதில்லை.
1.இங்குள்ளவை அங்கு வளர்வதில்லை… அங்குள்ளவை இங்கு வளர்வதில்லை.
2.இதே விதையை அங்கு போட்டாலும் அப்படி அது வளர்ச்சி எய்தினாலும் சுவையில் மாறுபடுகின்றது.
 
அங்குள்ள மனிதன் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளான். பல நவீன செயற்கையகங்களை உருவாக்கி உள்ளான் என்றால் அது அவன் செயல் மட்டுமல்ல அவன் பிறந்த பூமியின் அமில குணத்தில் அவன் உருவாக்குகின்றான். அவன் செயல் திறனும் அதன் நிலைக்கொப்பத் தொடருகின்றது.
 
நம் பூமியில் கலந்துள்ள இந்த ஞான ஒளியை அன்று உணர்ந்த சித்தர்களின் தொடர்பிருந்தும், இன்று நாம் தவற விட்டு சாமான்யர்களாய்ப் பெற முடியாத ஒன்றாக அதனைக் கருத்தில் கொண்டு வாழ்கின்றோம்.
 
1.இன்னும் சிலர் சித்தும் ஞானமும் எதற்காக…? வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா…? என்ற உணர்விலேயே ஞானத்தைத் தவற விட்டு
2.இன்று பக்தி என்ற மமதைப் பிடியிலும் அரசியல் என்ற கோமாளி விளையாட்டிலும் நம் செயலையெல்லாம் விரயமாக்கி வாழ்ந்து வருகின்றோம்.

December 1, 2024

உடல் நலம் பெறுவதற்குத் தான் இந்தத் தியானம் செய்கின்றோமா…? என்றால் இல்லை…!

உடல் நலம் பெறுவதற்குத் தான் இந்தத் தியானம் செய்கின்றோமா…? என்றால் இல்லை…!


அன்றாட வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?
 
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகித் துருவ நட்சத்திரமாக ஆனான் ஒளியின் சரீரமாக இருக்கின்றான் உடலை ஒளியாக மாற்றிச் சென்றான். அப்படி ஒளியாக மாறியது தான் துருவ நட்சத்திரம்.
 
அதிலிருந்து வருவதைத் தான் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டு வருகின்றது நம் பூமியிலேயே பரவச் செய்து கொண்டிருக்கின்றது.
1.காலையில் நான்கிலிருந்து ஆறரை மணிக்குள் மொத்தமாகக் குவித்து கொண்டு வருகின்றது.
2.வெயில் வருவதற்கு முன் நாம் அதை எடுத்துப் பழகுதல் வேண்டும்.
 
குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை நீங்கள் செவிகளில் கேட்கப்படும் பொழுது ஏங்குகிறீர்கள். அந்த உணர்வுகள் உங்களுக்கு எளிதில் கிடைக்கின்றது.
 
ஒரு இடத்திற்குச் செல்லும் பொழுது திடீரென்று விபத்து ஆகிவிட்டது என்று கேள்விப்பட்டால் அல்லது பேப்பரிலே அதைப் படித்தால் நம் மனது எப்படி ஆகின்றது…? கொஞ்ச நேரமாவது நம் மனது சோர்வடைகிறது.
 
இதைப் போல உங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைச் சொல்லப்படும் பொழுது
1.என்னைக் கண்களால் பார்க்கின்றீர்கள். கரு விழி உங்களுக்குள் பதிவாக்குகின்றது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றது.
3.ப்படிப் பதிவாக்கி துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் உணர்வை நுகரச் செய்தால்
4.தங்கத்தில் திரவத்தை ஊற்றினால் அதற்குள் மறைந்துள்ள செம்பை பித்தளையும் ஆவியாக மாற்றுவது போல் தீமைகளைக் கரைத்துவிடும்.
 
ஏனென்றால் தீமைகளை வென்றது துருவ நட்சத்திரம். அதிலிருந்து வரக்கூடியதைத் தான் காலை துருவ தியானத்தில் நீங்கள் பெற்றால் உங்களுக்குள் வலுவாக்கி வளர்த்துக் கொள்ள ஏதுவாகும்.
 
எப்படி வேதனை என்ற விஷமான உணர்வுகள் உங்களுக்குள் ஊடுருவி நல்ல குணங்களை அது கெடுக்கின்றதோ நல்ல அணுக்களை மாற்றுகின்றதோ தைப்போல
1.தீமைகளை வென்றிடும் உணர்வுகள் உங்களுக்குள் வளர்க்க அதை நீங்கள் விடாப்பிடியாகச் செய்து வர வேண்டும்,.
2.ஒரு நாளைக்கு செய்துவிட்டு என் கஷ்டம் எல்லாம் போகவில்லையே என் உடலில் உள்ள நோய் போகவில்லையே என்று
3.அப்படி எண்ண வேண்டியதில்லை நோய்க்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
 
நாம் அந்த அருள் உணர்வைப் பெருக்கிக் கொண்டே வந்தால் இந்த உணர்வின் வளர்ச்சி பெருகும் பொழுது இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் பிறவி இல்லா நிலை அடைகின்றோம்.
 
இல்லாமல் போனால் கீழே தான் மீண்டும் பிறவிக்கு வருகின்றோம்.
1.பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்றால்
2.நான் மேலே சொன்ன முறைப்படி செய்யுங்கள்.
 
நீங்கள் தேடிய சொத்தும் செல்வமும் கையில் வைத்திருக்கிறீர்களா…? வருகின்றது வளர்கின்றது பின் தேய்கின்றது… தேய்ந்த பின் வேதனைப்படுகின்றோம்.
 
சரி சொத்து தான் போகட்டும் இந்த உடலை நல்ல முறையில் அழகாக வளர்த்து வைத்திருக்கிறீர்கள் ஆனால் கடைசியில் இந்த உடல் எவ்வளவு சுருங்குகின்றது… எவ்வளவு வேதனைப்படுகிறது…?
1.உடலைக் கட்டுக்கோப்பாக ஆரோக்கியமாக அழகாக வைத்திருக்க முடிகின்றதா…?
2.அல்லது இந்த உடல் நிரந்தரமாக நம்முடன் இருக்கின்றதா…?
 
யோசிக்கின்றோம் சொத்துக்காக எத்தனையோ சண்டைகளையும் போடுகின்றோம்… ஆசையும்படுகின்றோம்.
 
ஆனால் ஒருவன் வந்து பணத்தை எல்லாம் கொள்ளையடிக்கும் பொழுது பாவிப் பயல்…! இப்படி எடுத்துச் செல்கின்றானே…” என்று அவன் சாபம் இடுகின்றான்.
 
வன் சொத்தை அவன் அபகரித்துச் செல்லும் பொழுது இவன் அவன் உடலுக்குள் சென்று சிறிது நாள் அதை அவன் அனுபவித்தாலும்
1.இவனுடைய சாப அலைகள்வனுக்குள் ஊடுருவி அவனை நாஸ்தியாக்குகின்றது.
2.இப்படித்தான் தொடர்ந்து நடக்கின்றது.
 
இதைப் போன்ற நிலைகளில் இருந்து எல்லாம் விடுபடுவதற்குத் தான் காலையில் துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கின்றோம்.
தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் வலுவைக் கூட்டி நம் எல்லையைதுவாக்கி நாம் அனைவரும் பிறவியில்லா நிலை அடைவோம்…”

முற்பிறவி என்று சொல்லும் “சிலருடைய அமானுஷ்ய செயல்கள்”

முற்பிறவி என்று சொல்லும் “சிலருடைய அமானுஷ்ய செயல்கள்”


இன்று இவ்வுலகில் சில இடங்களில் சில ஆத்மாக்கள் குழந்தைப் பிராயத்திலேயே அதன் வயதுக்கு ஒவ்வாத நிலையில் சில நிலைகளை ஞானோதயம் பெற்று வயதுக்கு மீறிய சித்தர்களாலும் சப்தரிஷிகளாலும் மட்டுமே உணர்த்தக்கூடிய நிலையில் உணர்த்துகின்றனர் என்றால் அது எந்த நிலையில்…?
 
அவ்வாத்மாவின் ஒளி அலைகள் அதனுடைய முன் ஜென்மத்தில் சில மகான்களின் தொடர்புடன் வாழ்ந்திருந்து அவர்களின் எண்ணத்திலேயே ஆத்மா பிரிந்து மறு ஜென்மத்திற்கு வரும் பொழுதும் இன்னும் ஒவ்வோர் உடலுக்குள்ளும் பல அணுக்கள் உள்ளன என்று உணர்த்தியுள்ளோம்.
 
அதைப்போல் பல ஆவிகளும் அவ்வுடலில் ஏறிக் கொண்டுள்ளன.
1.அந்த நிலையில் அம்மகானானவர் அவர் வாழ்ந்து, ஞானம் பெற்றுச் சக்தியின் நிலையில் ஒளியுடன் கலக்கப் பெறும் பொழுது
2.அவர் உடலுடன் உள்ள நிலையிலேயே அவர் எடுத்த ஜெபத்தினால்
3.அவ்வுடலில் இருந்த மற்ற ஆவிகளும் அணுக்களும் (பல கோடி எண்ண அணுக்கள்) அவரின் ஞானத்தினால் இவைகளும் நல்ல நிலை எய்துகிறது.
 
இம்மகான் உடலை விட்டுச் செயல்படும் நிலையிலேயே இவ்வுடலில் தங்கிய இவ்வாவிகளுக்கும் அவற்றின் எண்ணமெல்லாம் நீங்கி இம்மகானுடன் அவர் உடலில் சாடியதின் பயனால்
1.அவர் பெற்று ஏற்றிய ஞானத்தின் ஒளியில் பங்கு பெற்று மறு ஜென்மத்திற்கு வந்து வாழும் நிலையில்
2.மகானுடன் ஒன்றியதினால் அவ்வொளி அலையை ஈர்க்கும் அமில குணமுடன்
3.இச் சிசு பிறப்பில் வாழும் பொழுது அம் மகானின் சக்தி அலையை இச்சிசுவின் மேல் பாய்ச்சி
4.பல அபூர்வ நிலையெல்லாம் வயதிற்கு மீறிய செயலாக இன்றளவும் நடந்து வருகிறது.
 
திருஞானசம்பந்தரின் மொழி அமுதை ஒரு குழந்தை வெளிப்படுத்துகிறது என்றால் அது இந்த நிலையில் தான்.
 
இன்று மட்டுமல்ல பல கால கட்டங்களாய் சில சில இடங்களில் இப்படி வியக்கத்தகும் அதிசய நிலைகள் நடந்து வருகின்றன. இதன் வட்ட ஒளியிலேயே ஞானம் பெற்றுச் செயல்பட்டால் மீண்டும் மீண்டும் சக்தி நிலை பெருகிப் பல நிலைகளைச் செயலாக்கிடலாம்…
 
பெற்ற பயனைப் பொருளுக்கும் புகழுக்கும் விரயப்படுத்தி விட்டால் ஞான சக்தியின் வலு குன்றி விடுகின்றது.
 
திருவையாறு தியாகராஜரின் நிலையும் இந்நிலையில் வந்ததுதான். அவர் தன் உடலை விட்டுப் பிரியும் நாள் வரை அச்சங்கீத ஞானத்துடனே ஐக்கியப்பட்டுத் தான் அடைந்த ஞானத்தின் பொக்கிஷத்தை இம்மியளவும் சிதற விடாமல் செயல் கொண்டதினால் நல் ஒளி பெற்றார்.
 
இந்த நிலை தெய்வீக நிலையில் மட்டும் ஏற்படுகின்றதா…? மற்ற நிலைகளில் இல்லையா…? என்ற வினா எழும்பலாம்.
 
இன்று உலகத்தில் பல பாகங்களில் தன் பூர்வ ஜென்மத்தில் இந்த இந்த இடத்தில் வாழ்ந்ததாகவும், இவர் தான் என் தாய், இவர் தான் என் தந்தை என்று சொந்த பந்தங்களை உணர்த்தியும், தன் முந்தைய நாமகரணத்தையும் சொந்த பந்தங்களின் நாமகரணத்தையும் மற்ற எல்லாக் குறிப்புகளையும் மறு ஜென்மம் எய்திய பிறகும் முன் ஜென்மத்தில் நடந்த இடத்தை உணர்த்துகின்றார்களே இவை எந்த நிலையில்…?
 
ஓர் ஆத்மா வாழுகின்றது. அது வாழும் நிலையில் இன்று பேய் பிடித்து விட்டது, பிசாசு பிடித்து விட்டது என்றெல்லாம் சிலரைச் செப்புகின்றனர்.
 
எப்பேயும் யாரையும் பிடிப்பதில்லை. ஆனால் இம்மனித ஆத்மாவின் எண்ணச் சிதறலினால்
1.அந்த அந்த எண்ண நிலைக்கொப்ப ஆவி உலக ஆத்மாக்கள் அதன் எண்ணத்தை ஈடேற்றச் சில உடல்களில் ஏறுகின்றன.
2.உடலில் ஏறிய எவ்வாத்மாவுமே அவ்வுடலுக்குச் சொந்தமான ஆத்மா பிரிந்த பிறகுதான் இவ்வாவி ஆத்மாவும் வெளியேற முடிகின்றது.
 
ஓர் உடலில் இப்படி ஏறிய ஆவி ஆத்மாவானது அவ்வுடலுக்குச் சொந்தமான ஆத்மாவைக் காட்டிலும் சக்தியுடையதாய் ஏறிச் சில செயல்களைப் புரிவதினால் தான்
1.சிலர் (சில உடல் ஆத்மாக்கள்) தன் நிலை பெற முடிந்து தன் எண்ணத்தைக் கொண்டு வாழ்ந்திட முடியாமல்
2.ஆவி ஆத்மாவின் செயலில் வாழ்வதினால்தான் பேய் பிடித்து விட்டதுபிசாசு பிடித்து விட்டது…” என்கின்றனர்.
 
இப்படி வீரிய சக்தி கொண்ட ஆவி ஆத்மாக்கள் ஏறிய உடல் ஆத்மாக்கள் நீண்ட நாளும் வாழ்வதில்லை அகால மரணம் எய்துகின்றனர்தன் நிலை மறந்து.
 
அந்த நிலையில் அவ்வுடலில் இருந்து உடலுக்குச் சொந்தமான ஆத்மாவும் உடலில் ஏறிய ஆவி ஆத்மாவும் பிரிந்து செல்கின்றது.
 
இவ்வுடலில் ஏறிய ஆவி ஆத்மாவிற்கு தன் செயலைச் செயல்படுத்த மற்றோர் உடலில் ஏறியதினால், தன் முந்தைய நிலை மறந்து
1.எவ்வுடலில் ஏறிச் செயல் கொண்டதோ அவ்வுடலின் சொந்த பந்தங்களுடன் தன் எண்ணமும் செயல்பட்டதினால்
2.இவ்வுடலுக்குச் சொந்தமான சொந்த பந்தங்களும் வாழ்ந்த இடங்களையும் தனதாக ஒன்றி விடுகின்றது.
 
டலை விட்டுப் பிரிந்த ஆத்மா எவ்வாத்மாவானாலும் சரி உடனே பிறப்பிற்கு வருவதில்லை. தன் உதிரத் தொடர்புடைய தாய் தந்தையார் மக்கள் இவர்கள் உள்ளவரை பிறப்பிற்கு வருவதில்லை.
 
அப்படி இருக்க இக் குறுகிய காலத்தில் பிறப்பெய்தி இவர்கள் தான் என் தாய் தந்தையார் சுற்றத்தார் என்றெல்லாம் முன் ஜென்மத்தின் நிலையை உணர்த்துவது எப்படி…?
 
அதாவது இவ்வுடலில் ஏறிய ஆவி ஆத்மாவானது, தாயின் கரு நிலைக்கு வந்தவுடன் அதன் இரண்டு நிலை கொண்டு
1.இரண்டு நிலை என்பது அதன் முந்தைய ஜென்ம நிலையும் ஆவி ஆத்மாவாய் மற்ற உடலில் சாடியதின் நிலையும் கொண்டு
2.கர்ப்பத்திற்கு வந்தவுடன் இவ்வாத்மாக்களுக்கு பன்னிரண்டு வகையான அமிலத்தை ஈர்க்கும் குணமுடைய சக்தியைக் காட்டிலும்
3.மற்றொரு உடலில் ஏறி வெளிப்பட்டதின் நிலையினால் தாயின் கருவில் அதன் நிலையும் மறக்கப் பெற்று
4.பிறப்பிற்கு வந்த பிறகு அது எடுக்கும் சுவாசத்தினால் மற்றோர் உடலில் ஏறி வெளிப்பட்ட ஆவி ஜென்மத்திற்கு வந்து
5.வாழும் வளர்ச்சி பெற்ற எண்ண நினைவுகள் எல்லாம் நினைவில் சாடும் பருவத்திலேயே அதன் பேசி உறவாடும் காலகட்டத்தில்
6.அவை ஏறிய உடல் ஆத்மாவின் சொந்த பந்தங்கள் வாழ்ந்த நினைவலைகள் எல்லாம் இவ்வாத்மா செப்புகின்றது.
 
மற்றோர் உடலில் குடியேறி தன் முந்தைய ஆவி நிலையை மறந்து அவ்வுடலின் எண்ணத்தில் வாழ்ந்து செயல்பட்ட ஆவிகளினால்தான் இப்படி முந்தைய ஜென்மத்தைச் செப்ப முடியும். ஆனால் இவற்றிலேயே எல்லா ஆவிகளும் இப்படி மற்ற உடலில் ஏறிய பிறகு ஜென்மத்திற்கு வர முடியாது.
 
1.நல்ல ஆத்மாவின் எண்ணமுடன் ஏறிச் செயல்பட்ட ஆத்மாக்களுக்குத்தான் இப்படிப் பிறப்பு எடுக்கும் நிலை பாக்கியமும் வருகின்றது.
2.ஆனால் முந்தைய ஜென்ம வாழ்க்கையை உணர்த்தி வாழும் ஆத்மாக்களும் நீண்ட நாட்கள் வாழ்ந்திடாது.