உணர்வுகள் முன்னறிவிப்பாக அனைத்தும் தெளிவுபட... அறிவில் பொருந்துதல்… அதுவே உயர் ஞான வளர்ப்பின் சித்து.
கனியாகும் முன் காயின் நிலை கண்டு… மனத்தின்கண் நினைப்பது கனிந்து விருந்தாக்கும் என்று நினைப்பதே நன்று.
வாயுள் படும் அந்தப் பொருளை (கனி) அதன் சுவையை முன்னறிதல்... சுவாச செயலாக நின்று...
1.உயிரின் உயர் நிலை கண்டு உண்டு களித்திருத்தல்...
2.ஞானமாகப் பயிர் வளர்த்திடும் வித்தகம் என்று பூரணத்துள் ஞான திருஷ்டி ஏற்பட்டுவிடும் பாங்கு வளர்ப்பின் நிலையின் “ஓர் அனுபவம்…”
இதுவே பிருகு மகரிஷி உண்டு… கண்டே உண்டு… களிப்பு எனும் பேரானந்தப் பெருநிலை அனுபவித்தல் தன்மையாக வேதாள மகரிஷி உரைத்திட்டது.
சரீரத்தின் தன்மைகள் கண்டு காற்றலையில் ஈர்த்திடும் விஷத்தின் குணங்களும் அன்றி… சரீரத்தில் நேரடியாக உட்கொண்டு விடும் விஷ அமிலத்தன்மைகள் எதுவாக இருந்தாலும் “நீலி கொண்டு தான்” சித்தர்கள் சரீர வைத்தியத்தில் அனுபோக முறைகள் கண்டு உரைத்துப் போயினர்.
நீலன் என்று உரைப்பது மனிதன் பெற்ற இந்தச் சரீரத்தையே...!
1.தவசியாய்ச் செயலுறும் பாங்கில்... விஷ அமிலத்தன்மைகளின் ஈர்ப்பில் தாக்குண்டு
2.அதனால் பெற்றிடும் அக்குணத்தன்மைகளை “அமுதமாக்கிடும் சக்தி நிலை கண்டமே நீலி…”
மருத்துவக் குறிப்புகள் நீலியைக் காட்டும் அந்தப் பெயர் படைத்திட்டது ஓர் மூலிகை. விஷத்தின் முறிவு சக்தியாக அதனை கைக்கொள்வோர் மிக அரிது.
மனமாகிய உலகினில் கண்டு தெளிதல்...
1.நாபியின் நாடிக்குள் பச்சை நிற வண்ணம் காட்டிடும் அமைப்பின் உள் நிலையை நீலி என்று புகழ்வது..
2.பிடரிக்கண்... சக்தி கொண்ட மூலாதாரத்தை நோக்கிடுங்கால்…
3.கிளர்ந்து எழுந்திடும் கந்தன் எனும் ஜோதி நீலியின் உட்பகுந்து சென்றிடும் பொழுதே…
4.எண்ணத்தால் உட்கண்டு தெளிதல் என்பது ஆங்கு செலுத்தப்படும் எண்ணமானது
5.தூய நிலை கொண்டு மாற்று நிலைத் தன்மைகளையும் மாற்றி…
6.உயர் நுண் காந்த அலையின் உயர்வாகச் சேர்க்கும் மனித இனத்தை வழி நடத்திட…
7.வழிகாட்டிடும் அவ்வின மாமகரிஷிகள் உரைத்திட்ட வழி நடத்தலே
8.நீலி கொண்டு நீலன் நஞ்சு முறித்திட்ட “ஸ்தூல… சூட்சம…” இரு நிலையின் “ஒரு பொருள்” காட்டும்.