காரண காரியமாக விளங்கும் இந்த உடல் கொண்ட ஜீவாத்மா… சிருஷ்டி எனப்படும் பிறவிக்குத் தனக்குகந்த தன்மைக்கே… கொண்ட குணங்களின் தன்மைக்கொப்ப பிறப்பினுக்கே வந்தாலும்… சகலமும் மறைக்கப்படுகின்ற சூட்சமம்... ஒளி நிலை பெற்றிட மேலெழும்பும் சக்தியின் தன்மையாக எடுத்துக் கொண்டால் ஆத்மா ஒளி பெற்றே திகழ்கின்றது.
1.”காரணம்” என்பது ஆகாய சூட்சுமமாக சகலமும் மூலத்தின் தன்மையாக விளங்கி
2.சிருஷ்டியின் செயலாக… கொண்ட எண்ணம் செயலுற்று… “காரியமாகின்ற” சரீரத்தைப் பெறுகின்றது.
காரண காரியம்… காரிய காரணமாக மனிதன் செயல்பட்டு… பெற்று… வளர்த்து (தன்னை) உயர்த்திக் கொண்டிட்டால் ஒளிமார்க்க நிலை…!
“அன்னபூரணி காட்டும் ஆகாரக் குறிப்பு” வியாபித்திருக்கின்ற மூலப்பிரகிருதி… (இயற்கையின் படைப்பு) சகலமும் ஈஸ்வர சொரூபம் தான் என்றாலும் மூலத்தின் குணத்திற்கு வண்ணங்கள் உண்டு.
1.பிருதிவி (பூமி – நிலம்) தத்துவத்தில் மண்ணாகக் காண்பதே செந்நிறம்
2.அக்கினியாகக் காண்பது கருமை நிறம்
3.நீரின் தன்மையில் அடங்குவது வெண்ணிறம்
4.காற்றின் புலப்படாத் தன்மையுள் பச்சை நிறம்
5.ஆகாய நிலையின் புகைவண்ணம் வெளிர் நீலம்.
இந்த ஐந்தும் (பஞ்ச பூதங்கள்) ஜீவன் புசித்திட ஈஸ்வர சக்தியாக... அன்னபூரணி - விஸ்வேஸ்வரர் மாமகரிஷியின்... தாய் சக்தி எனும் பஞ்ச காரண காரணியாக... ஒளிமார்க்க (ஓளிச்சரீரம் பெறுவது) நிலை உபதேசிக்கப்பட்டதப்பா.
மூல காரணியை... மனிதன் செயல் கொள்ளும் விதத்தில் “வேதாள மாமகரிஷி” உரைத்திட்ட நிலையும் உண்டு.
பெரும் நெருப்பாக இருந்தாலும் அதுவும் நீருக்குள் அடங்குகின்றது. பெரும் நீரானது இழுத்து இயங்கும் செயலாக… காரண சக்தி இயற்கையின் சீற்றம் காட்ட... காரியம் ஏற்படும் நீர் அடங்காது.
சூரியக்கதிர் அம்பு பாய்ந்து… அகநிலையால் புறமும்… காத்திடுகின்ற செயலாக
1.இப்பரு உடலைக் கொண்டு ஆத்ம சக்தியை வளர்த்துக் கொண்டாலும்…
2.இவ்வுடலையே சூழ்ந்து காத்துக் கொள்ளும் வலு வீரிய “காரண மூல சக்தி ஆத்மாவிற்கு உண்டு…”
காட்டையே பற்றி எரித்து உரத்து ஆடும் பெரும் நெருப்பானது நாணல் புல்லைப் பற்றி அதையும் தீய்ப்பினும்... கடும் மழை நீருள் அந்தக் காட்டுத் தீயானது அணைகின்றது.
அது போல் மனித மனத்தின் நிலை அகம் புறம் இரண்டு செயல் தன்மைகளில்
1.உலகோதய நிலை நாட்டத்திலும்… நாம் எடுக்கும் ஜீவ ஆதார சக்தி…
2.காட்டுத் தீயை அடக்கிய நீர் சக்தியானது
3.பூமியின் மேற்பரப்பில் காற்று நெருப்பால் ஒவ்வாத நிலைகளற்று… (கருகிய நிலைகள்)
4.பூமிக்குள் மறைந்திருக்கும் கிளைத்தெழும் ஜீவசக்திகள் அந்த நீரின் சக்தி கொண்டே (கருகியது) தழைத்து எழுவது போல்…
5.மன எண்ணக் கரு அவ்வண்ணமே ஜீவ ஆதார சுருதியாக “அகக் கனலாகக் கனன்று எழும்…”
இதிலே காட்டிட்ட தன்மைகள் பண்டு (பண்டைய – பழைய) வழியாக இருந்தாலும் அதை விண்டு அறிந்திடுதல் வேண்டும்.