ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 31, 2023

ஞானத்தின் வளர்ச்சி எப்போது வரும்...?

நமது உயிரின் தன்மை இயக்கப்படும் போது பிறரின் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகளைச் (நல்லதோ கெட்டதோ) சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்தாலும்

1.கண்ணின் புலனறிவு நமது ஆன்மாவாக இங்கே மாற்றுகின்றது.
2.இதைத் தான் நாம் நட்சத்திரங்கள் என்று சொல்வது.

எதன் தன்மை வருகின்றதோ ஒன்றுக்கொன்று கலவையாகும் பொழுது அந்தக் கலந்த உணர்வு நாம் சொல்வோம் "எனக்குப் பதட்டாமகிறது என்று...!"

தீமை செய்கின்றான் என்று அவன் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகள்... கண் அவனைப் பதிவாக்கி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் இழுக்கப்படும் பொழுது... அதாவது துருவம் எந்தப் பகுதியில் இருக்கின்றதோ அதனின் நேர் வரிசையில் தான் இழுக்கும்... அதே போன்று
1.நமது கண்ணின் பார்வை எதன் பாதையில் இழுக்கின்றதோ நாம் எண்ணிப் பார்க்கும் பொழுது
2.அதை இழுக்கும் அந்தப் பகுதி வழியாக அதன்வழி பதிவான பின் அந்த உணர்வுகள் ஆன்மாவாக மாற்றுகின்றது.

எந்த மனிதனை நாம் உற்றுப் பார்க்கின்றோமோ அந்த உணர்வு அந்த உடலில் இருந்து வெளிவருவதை இழுத்து நம் ஆன்மாவாக நம் ஈர்ப்பு வட்டதிற்குக் கொண்டு வந்து சேர்ப்பிக்கின்றது.

அப்படிச் சேர்ப்பிக்கும் போது பல விதமான உணர்வும் உள் அடங்கி உணர்வுகள் எதிர்த்து வந்த பின் கலக்கங்கள் வருகின்றது.
1.நல்ல உணர்வுகளும் அவருடைய தீமையான உணர்வுகளும் இங்கே கலக்கப்படும் பொழுது
2.நுகர்ந்த பின் நமக்குள் பதட்டம் ஆகின்றது.

இது எல்லாம் இயற்கையில் நடக்கக் கூடிய நிகழ்ச்சிகள் தான்.

அகஸ்தியன் இந்த உண்மைகளை உணர்ந்தவன் அவன் தன்னுடைய வளர்ச்சியின் பருவத்தில் வரப்படும் போது அவனுக்குத் திருமணத்தைச் செய்து வைக்கின்றார்கள்.

திருமணமான பின் தன்னுடைய மனைவிக்குத் தான் பெற்ற உணர்வுகள் அனைத்தையும் செவி வழி ஓதுகின்றான். உண்மையின் இயக்கம் இதுதான்... இதையெல்லாம் நீயும் பார்க்க வேண்டும் என்று உணர்த்துகின்றான்.

அதைக் கேட்டறிந்த மனையாளும் அதை ஏற்றுக் கொண்டு அதே வழியில் வழி நடந்து வருகிறது.

கணவனால் கண்ட உண்மைகள் தனக்குள் வளர்ந்து அதையெல்லாம் தன் கணவன் பெற வேண்டும் என்று எண்ணுகிறது.

தான் சொன்ன உணர்வுகள் மனைவி கண்டுணர்ந்ததை அகஸ்தியன் தன் மனைவி மீண்டும் உயர வேண்டும் என்று இரு உணர்வுகளும் ஒன்றாகும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
1.இதுவும் ஒரு சந்தர்ப்பம் தான்.
2.இவ்வாறு இருவரும் இணையப்படும் பொழுது உயர்ந்த உணர்வாக அங்கே வளருகின்றது.

காரணம் ஆண் பெண் என்ற செடிகள் இருந்தால்தான் அது விளைகின்றது... நல்ல அலனைக் கொடுக்கின்றது.

நட்சத்திரங்களிலும் ஆண் பெண் என்ற நிலைகள் தான் உண்டு. ரேவதி கார்த்திகை ரோகிணி என்று ஆண் பெண் என்ற நிலையில் வரப்படும் பொழுது... அது மின்னலாக உருவாகி சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதிப் பல அணுக்களாக மாறினாலும்... எந்த நட்சத்திரத்தின் துகள்கள் எதனுடன் எது கலக்கின்றதோ... அதற்கொப்ப தான் வளர்ச்சியும் இயக்கங்களும்.

பெண்பாலின் நட்சத்திரம் ஆனால் அது மற்றொன்றைக் கவர்ந்து செடிகளையோ பாறைகளையோ வளர்க்கும் தன்மை வருகிறது. அதன் வழி வளர்ந்த பின் மற்றதுடன் கலந்து இந்த உணர்வு வளர்ச்சி பெறும் தன்மை வருகின்றது.

இதைப் போன்று தான் நமது உயிரும்...!

கார்த்திகை நட்சத்திரத்தின் தன்மை ஆண் பாலாக இருந்தாலும் ரோகிணி நட்சத்திரம் என்று வைத்துக் கொள்ளுங்கள் அதன் உணர்வின் துகள்கள் தூசிகள் மோதப்படும் பொழுது இந்த மோதலில் அதனைக் கண்டு இது அஞ்சி ஓடுவதும்... வியாழன் கோளிலிருந்து வரக்கூடிய சத்து "குரு" - விஷத்தன்மையான கதிரியக்கங்கள் வரும்பொழுது இதைக் கண்டு இது அஞ்சி ஓடுவதும் கார்த்திகை நட்சத்திரத்துடன் மோதும் பொழுது அதற்குத்தக்க மோதி "ஒன்றுக்கொன்று துடிப்பின் நிலைகள் வருகின்றது..."
1.துடிப்பின் நிலை வரும் பொழுது மற்ற கோளிலிருந்து வரும் தூசிகளை இதை ஈர்க்கும் சக்தி வருகின்றது
2.ஈர்க்கும் சக்தி வந்த பின் அது அடைபட்டுவிடுகிறது... அந்தத் துடிபின் நிலையே உயிர்...!

எந்தெந்தக் கோளின் தன்மை அடைபட்டிருக்கின்றதோ துடிப்பால் ஈர்க்கும் நிலை வரும் பொழுது... உராய்ந்து.. அதே உணர்வின் தன்மை தனக்குள் இணைந்து அது அணுவின் தன்மையாக உருவாக்கி... அதன் மலத்தின் தன்மை கொண்டு அந்த உணர்வுக்கொப்ப உடலை மாற்றி அமைத்து விடுகிறது.

இதைப் போல் இந்த உணர்வின் தன்மை உருவான இந்த நிலைகளை அன்று அகஸ்தியன் தெளிவாகத் தெரிந்து கொண்டான். இப்படித்தான் உயிர் உருவானது என்று...!

மற்ற துகளின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று கலக்கப்படும் பொழுது எதன் ஈர்ப்புக்குள் வருகின்றதோ சூரியன் ஒளிக்கற்றைகளால் தாக்கப்படுகின்றது.

அந்த உணர்வு பொறியாக மாறி அதன் உணர்வுக்கொப்ப பாறைகள் விளைகின்றது என்பதை அகஸ்தியன் அறிந்த அந்த உண்மைகளை நாமும் அறிந்து கொள்வது நல்லது.

விஞ்ஞான அறிவில் எத்தனையோ பாட நிலைகளை புரட்டி பார்த்து அவர்கள் படித்துணர்கின்றார்கள். ஒரு இன்ஜினியரிங் என்றால் நான்கு வருடம் படிக்கிறார்கள் பௌதீகத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்... டாக்டர் என்ற நிலைக்கு வர வேண்டும் என்றால் அதற்கு ஐந்து வருடம் என்று படிக்கின்றார்கள்... தெளிவாகத் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது.

ஆனால் இப்பொழுது உபதேசிப்பது அனைத்தும்
1.நான் படித்து வரவில்லை... கற்று வரவில்லை...
2.குரு காட்டிய உணர்வின் தன்மையை மோதலில் உணர்வின் உணர்ச்சியாக நான் அறிய முடிகின்றது.

குரு எனக்குப் பதிவாக்கியது போன்று... அதை நான் அதை நுகர்ந்தது போன்று...
1.அந்த இயற்கையின் உணர்வுகள் உங்களுடன் மோதப்படும் பொழுது அதை அறிந்திடும் அறிவாக உங்களுக்குள் வரும்.
2.ஞானம் என்ற நிலையில் உங்களுக்குள் வளர்ச்சியாகும்

விஞ்ஞானத்தால் வரக்கூடிய எத்தகைய விஷத்தன்மையிலிருந்தும் மீட்டிட... அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் அதைப் பிளந்து நமக்குள் அறிவின் தன்மைகொண்டு காக்கும் தன்மையாக உங்களை மாற்றி அமைக்கும்.

அத்தகைய நிலை நீங்கள் பெற வேண்டும் என்றும் வளர்ச்சியின் பாதையில் நீங்கள் வரவேண்டும் என்று தான் என்பதற்குத்தான் இதை உங்களுக்கு தெளிவாக ஊட்டிக் கொண்டு வருகின்றேன்.

மனிதனாக உயிர் உருவாக்கிய பின் பிறவி இல்லாத நிலையை நீங்கள் அடைய வேண்டும். அப்படிப்பட்ட நிலை அடைந்தவன் தான் அகஸ்தியன்.