வேதனை என்ற உணர்வு உட்புகுந்து உடலுக்குள் சென்று தீமைகள் செய்யாது தடுத்தல் வேண்டும். அவ்வாறு தடுக்க வேண்டும் என்பதற்காகத் துருவ நட்சத்திரம் ஒளியின் கற்றையாக இருக்கும் அந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவாக்கி உள்ளேன்.
1.அதை எடுக்கும் திறன் உங்களுக்குள் வர வேண்டும் என்பதற்காக மணிக்கணக்கில் உபதேசித்து
2.ஒவ்வொரு உணர்வின் மாற்றங்களை நீங்கள் அறிந்திடவும்
3.அறிந்த உணர்வு (ஞானம்) உங்களுக்குள் பதிவாகவும்
4.அதனின் நினைவு கொண்டு தீமைகளை அகற்றிடும் அந்த வலிமை பெற வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.
எப்பொழுது தீமை என்ற உணர்வுகள் வருகின்றதோ அப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பதிவாக்கிக் கொண்டால் இந்த உணர்வை எண்ணும் போது உயிர் எலக்ட்ரிக்... எண்ணங்கள் எலக்ட்ரானிக்.
கோபமான உணர்வைப் பதிவாகிவிட்டால் அதை நினைக்கும் பொழுது அது எலக்ட்ரானிக்காக மாறி... கம்ப்யூட்டரில் இயக்குவது போன்று அவன் உணர்ச்சி கொண்டு நமது உணர்வின் குணங்கள் அப்படி இயங்கி விடுகின்றது.
ஆகவே தான் தீமை என்ற உணர்வு நமக்குள் உட்புகாதபடி தடுக்க உயிரான ஈசனை எண்ணி கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரவையின் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
பல முறை துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்துள்ளேன் அந்த உணர்வினை மீண்டும் எண்ணி... காற்றுக்குள் மறைந்திருக்கும் உணர்வின் தன்மை நீங்கள் கவர்ந்து இங்கே இடைமறித்தால் இந்த வேதனை உள்ளே புகாதபடி தடுத்து நிறுத்தப்படும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு தனக்குள் பாதுகாப்புக் கொடுத்து...
2.தீமை செய்யும் அணுக்கள் அந்த அருள் ஒளி கண்ட பின் அது அடைபட்டு விடுகிறது.
ஒவ்வொரு அணுவின் தன்மையும் நம் இரத்தத்தில் சுழன்று வரும் போது தீமை செய்யும் உணர்ச்சிகளை உந்தினால் தான் அது தன் உணர்வை அதிகமாகக் கவரும்.
ஆனால்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரரொளி பெற வேண்டும் என்று உள் செலுத்தினால்
2.உடலுக்குள் இருக்கும் நிலைகளை எல்லாம் இது மறைத்து விடுகின்றது.
தீமையான உணர்வு உள்புகாதபடி தடுத்து நின்ற பின் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் யார் துன்பப்படுகின்றாரோ வேதனைப்படுகின்றாரோ அவர்கள் உடலில் அது படர்ந்து அவருடைய துன்பங்கள் அகல வேண்டும் என்று நம் உணர்வின் சொல்லால் அவர் செவிகளில் பாய்ச்ச வேண்டும்.
அப்பொழுது அவர் நம்மை உற்றுப் பார்த்தால் நம்மிடமிருந்து வெளிப்படும் உணர்வுகளை நுகர்ந்து அந்த உணர்வு உயிரிலே பட்டு அந்தத் தீமைகளை அகற்றும் சக்தியாக மாறும்.
இதைச் செய்... நீ துருவ நட்சத்திரத்தின் சக்தி பெறுவாய்...! என்றால் அந்த நினைவைக் கூட்டினால் அவர்களும் காக்கப்படுவார்கள்.
நடைமுறை வாழ்க்கையில் வேதனைப்படுகிறான் என்று நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவானால்... அந்த உணர்ச்சிகள் உந்தி... கண் வழி ஆன்மாவாக மாற்றி... உயிருடன் இணைக்கச் செய்து... இரத்தத்தில் கலக்கச் செய்து... அதை உணவாக எடுத்து வேதனைப்ப்டும் அணுக்களாகப் பெருகத் தொடங்கி விடுகின்றது. நல்ல அணுக்களுக்கு இடமில்லாது போய்விடுகிறது.
அதை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்ற ஆசையில் இதைச் சொல்கிறேன்.
1.குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்
2.அவரால் தான் நாம் இதை அறிய முடிகின்றது.
3.அவரின் உணர்வை உங்களுக்குள் பாய்ச்சுகிறேன்
அதை நீங்கள் ஏங்கிப் பெறும் போது நீங்கள் நுகர்ந்ததை உங்கள் உயிர் அதைக் கருவாக்கி உங்கள் உடலுக்குள் அணுவாக உருவாக்கிவிடும்.
1.அதன் துணை கொண்டு உங்களைக் காத்திடும் அரும்பெரும் சக்தியாக
2.குரு அருள் உங்களில் வளர வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது..