ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 16, 2023

பல கோடிச் சரீரங்களில் “தப்புவதற்காக வளர்த்துக் கொண்ட எல்லா நினைவுகளும் நாங்கள் பெற வேண்டும்”

நான் இல்லை...! நீ இல்லா இவ்வுலகில் “எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா...!”

உயிர் இல்லையென்றால் இந்த உடலான உலகில் நாம் இருக்க முடியுமா...? முடியாது.

ஆரம்ப நிலைகளில் புழுவிலிருந்து நாம் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்திருக்கின்றோம்

புழுவாக இருக்கும் பொழுது குளவி கொட்டுகின்றது. குளவி கொட்டியபின் புழுவிற்கு வேதனை வருகின்றது.
1.வேதனை வந்தபின் குளவியின் மீதே நினைவு செல்கின்றது.
2.அப்படி நினைவு செல்லும்பொழுது குளவியின் உணர்ச்சிகள் என்ன செய்கிறது...?
3.புழு உடலை உருவாக்கிய அணுக்களுக்குள் ஊடுருவி புழுவைக் குளவியாக மாற்றுகின்றது.

வேதனைப்பட்டோம்... குளவியை நினைத்தோம் குளவியாக மாறுகிறது. வேதனையிலிருந்து தப்ப வேண்டும் என்று எண்ணினோம். விஷத்தையே பாய்ச்சி விஷத்தை உருவாக்குகிறது குளவி.

குளவி முதலில் தன் உமிழ் நீரால் மண்ணைப் பிசைகின்றது. அதை எடுத்துக் கொண்டு வந்து கூடாகக் கட்டுகின்றது தன் உடலில் இருந்து வரக்கூடிய விஷத்தைப் புழுவின் மீது பாய்ச்சுகின்றது.

இந்த விஷம் புழுவின் உடலுக்குள் செல்கின்றது... மயங்கிவிடுகிறது.. புழுவைக் கூட்டிற்குள் உள்ளே தள்ளி மூடி விடுகின்றது .கூட்டின் மீது அடிக்கடி அந்த குளவினுடைய ஞாபகத்தை ஊட்டுவதற்காக டுர்ர்ர்ர்... என்று ஒரு இரைச்சலிடுகிறது.
1.இந்த அதிர்வின் தன்மை என்ன செய்யும்...?
2.இழுக்கும் (ஈர்க்கும்) நினைவு வரும்.

விஷத்தின் தன்மையால் புழு துடித்த பின் உமிழ் நீரால் கூட்டிய கூட்டின் மீது அந்த ஒலிகள் பட்டபின... அந்த அதிர்வுகள் உள்ளே இயங்கிக் கொண்டே இருக்கின்றது.

இந்த உணர்வுக்கொப்ப புழுவின் அணுத்தன்மைகள் என்ன செய்கின்றது...? குளவியாக ரூபம் மாறுகின்றது.

ஆகவே...
1.எப்படிக் குளவி கொட்டியபின் சுரீர்ர்ர்... என்று குளவியை எண்ணி அந்த உணர்வினை இழுத்துக் குளவியாக நான் ஆனேனோ
2.மற்றதை இதைப்போல உருவாக்கும் சக்தி நான் பெற்றேனோ
3.இந்த நினைவுகள் எல்லாம் எனக்குள் வர வேண்டும்.

பாம்பு எலியைக் கண்ட பின் என்ன செய்கின்றது...? விஷத்தைப் பாய்ச்சுகின்றது... விஷத்தைப் பாய்ச்சியவுடன் எலி மயங்குகின்றது.... வேதனை தாளாது துடிக்கின்றது.

விஷத்தால் தாக்கப்பட்டால் நாம் துடிக்கின்றோம் அல்லவா. அது போல் துடிக்கும் வேகம் ஆன பின் விஷத்தின் தன்மை எலிக்குள் அதிகமாகின்றது. அப்போது அதனுடைய வலு இழக்கப்படுகின்றது.

எலி என்ன செய்கிறது...? எந்த விஷத்தால் தாக்கப்பட்டதோ “அதையே நினைவு கொள்கின்றது...” அந்த உணர்வின் இயக்கமாக எலியின் உயிர் நுகரப்படும் போது அந்த உணர்வின் துடிப்பாகிறது.

அதைத் தாங்காது இந்த உடலை விட்டு உயிர் வெளியே செல்கின்றது. பாம்பு “தன் விஷத்தின் தன்மையை” எலி உடலுக்குள் பாய்ச்சியதால் பாம்பின் உடல் எலியைத் தனக்குள் இழுக்கின்றது.

இழுத்துக் கொண்டபின் எலியின் உயிரான்மா உள்ளே புகுந்து விடுகின்றது. உள்ளே சென்ற பின் பாம்பை உருவாக்கிய உணர்வுகள் அதன் விஷம் எதுவோ அந்த விஷத்தின் தன்மை கொண்டு கருவாகி முட்டையாகிறது.

பாம்பு விஷத்தைப் பாய்ச்சி எலியை உணவாக உட்கொண்டது
1.பாம்பின் விஷம் எலியின் உடலுக்குள் இது இரையாகி
2.அந்த அணுக்கள் அந்த உணர்வின் தன்மை பாம்பாக உருவாகும் கருத்தன்மை அடைகின்றது.
3.அதனுடைய வலுப்பெற்ற பின் பாம்பு இழுத்துக் கொள்கிறது.
4.அதற்குள் சென்றவுடன் முட்டையாகின்றது... முட்டையான பின் பாம்பு அதை அடைகாக்கின்றது.
5.அதற்குத்தக்க அமிலங்கள் உற்பத்தியாகின்றது முழுமை அடைந்த பின் முட்டை வெளியே வருகின்றது.
6.முட்டை வெளியே வந்தபின் தன் உணர்வின் தன்மை கொண்டு அடைகாக்கிறது.

இந்தத் துடிப்பின் நிலைகள் எப்படி குளவி மண் கூட்டின் மீது இரைச்சலானதோ அந்த உணர்வின் அதிர்வைக் கொண்டு தனக்குள் இழுக்கச் செய்ததோ இதே உணர்வின் தன்மைகொண்டு அந்த முட்டை மீது பட்ட உடனே இந்த சூடு அதை இயக்கித் துடிப்பு ஆகிறது.

அந்தத் துடிப்பு ஆகும் பொழுது உணர்வின் நினைவு கொண்டு அதே பாம்பாக உருவாகின்றது.

மணத்தால் நுகர்ந்தறிந்து வாழக்கூடிய சக்தி பெற்றது தான் உயிரினங்கள். ஆகையினால் மணத்தால் நுகர்ந்தறிந்த உணர்வு கொண்டு பாம்பு தன்னைத் தாக்கும்போது அந்தப் பாம்பையே நினைக்கின்றது.

அதிலிருந்து தப்ப வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது. தப்புவதற்கு என்ன வழி...?
1.வேதனையாகி உடலை விட்டு உயிர் சென்ற பின் அதுவாக ஆன பின்
2.பாம்பின் மணத்தை நுகர்ந்து வலு பெற்ற பின் தப்பும் மார்க்கம் வருகிறது... பாம்பாக மாறுகிறது.

எலி பாம்பாக ஆன பின் அதே பாம்பைப் போன்று மற்றொன்றின் மீது விஷத்தைப் பாய்ச்சி உனவாக உட்கொள்ளும் நிலை வருகிறது.

இப்படித்தான் பரிணாம வளர்ச்சியில் நாம் ஒவ்வொரு சரீரத்தில் இருக்கும் போதும்...
1.தப்ப வேண்டும் தப்ப வேண்டும் என்று பல கோடிச் சக்தி வாய்ந்த உணர்வுகளை எடுத்து மனிதனாக வளர்ந்துள்ளோம் .
2.அப்படி அந்த பல கோடிச் சரீரங்களிலும் எடுத்துக் கொண்ட...
3.தான் தப்புவதற்காக வளர்த்துக் கொண்ட அந்த எல்லா நினைவுகளும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
4.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எங்களுக்கு தீமையிலிருந்து மீண்டிடும் சக்தியாக அது வரவேண்டும் என்பது தான் இதனுடைய பொருள்