ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 9, 2023

உள்நாக்குக்கு மேல் சிரசின் உச்சி வரை இருக்கும் “அணைந்திடாத அக்கினிக் குண்டம்”

அதீத செயல்பாடுகள் சக்தியின் வளர்ப்பாகக் கண்டுகொண்ட மகரிஷிகள் சரீரத்தினுள் அந்தச் செயல்பாட்டை அறிந்து கொண்டு... (தெய்வ குணங்களை) ஒவ்வொரு நிலையாகச் செயல்பாடுகள் கலைகளாய்... அவைகள் செயலுறும் நாதவிந்துவாக தெய்வீக உருவங்களாகப் பெயர் நாமப்படுத்தி... விநாயகர் சிவன் சக்தி கந்தன் என்று சூட்சுமப்படுத்தி அருளினார்கள்.

நாத விந்துகள் கலைகள் செயல் கொண்டிடும் நிலைகளும் நாவின் அடிப்பாகம் பிரணவம் (உமிழ் நீர் சுரக்கும் இடம்) என்று செப்பிய சூட்சும நிலைகளின் அகழ்வுகள்... நாவின்படி தொடங்கி தொண்டைப் பகுதியினுள் செயல்படும் ஆகாய இருள் மாயை.

1.உள்நாக்குக்கு மேல் சிரசின் உச்சி வரை என்றுமே அணைந்திடாத அக்கினிக் குண்டம் உண்டு (சுவாசம் உள் சென்று வெளி வரும் போது சூடாக இருக்கிறதல்லவா)
2.ஈஸ்வர ஜோதி எனும் சிவத்தை அறிந்து கொண்டிடும் ஜீவன்களுக்கு அந்த நிலை தமக்குள் உணர்த்தும்
3.உயிராத்ம சக்தியின் வலுவாக்கும் செயலுக்கு தெய்வீக வடிவ நீல வண்ணம் காட்டி
4.உயிர் ஆத்மா (உயிரும் அதனுடன் ஒன்றும் ஒளியான உணர்வுகளும்) ஐக்கிய நிலையே “சீதை அக்கினி குண்டத்தில் இறங்கினாள்…” என்று
5.சூட்சும சொல்லால் பொருள் காட்டி உரைத்தாரப்பா வான்மீகி மாமகரிஷி.

தட்டாது ஒதுக்கும் நிலையே நமக்கு வேண்டியது.

வேதாள மாமகரிஷி உலகியல் தன்மையில் “தேகி” எங்ஙனம் செயல் கொள்வார்...? என்றே நயம்பட உரைத்த உரை... கட்புலன்களால் (கண் பார்வை) பௌதீக மாயப் பொருள்கள் அனைத்தையும் ஒளி கொண்டு நோக்கி அறிதலும்... அறிந்ததை அறிந்ததாகப் பொருளின் குறிப்பைத் தெளிவாக உணர்தல் என்றே அறிந்த பின் தெளிந்து உணர்ந்து கொள்கின்றோம்.

அறிந்து கொண்ட செயலை நடைமுறைப்படுத்திடும் வழி வகைக்கே செயல் கொண்டாலும்
1.கட்டுப்படாத தன்மைகளையும் அதே உணர்வின் எண்ணம் உணர்த்தியும் தெளிதல் போல்
2.அந்த நிலையிலும்... ஈர்த்துக் கொண்டிட்ட வாசனைக்கொப்ப அறிந்திடாத் தன்மைகளும் செயல்கொள்ளும் விதத்தை
3.மேலாம் அறிவு உரைத்த நன்மைதனை நாளும் பொருள் விளக்கம் பெறுவது எப்படி…?

கடும் மழைக்காலத்தில் புள்ளினங்கள் (பறவைகள்) மழை நீரால் நனைந்து “குளிர் தன்மையாக விதிர்விதிர்ப்ப” அந்தப் பறவை இனங்கள் சிலிர்த்துச் சிறகினை வீசி அத்தன்மை படாது ஒதுக்கும்.

அதைப் போல்
1.எந்த நிலையாகினும் அந்நிலையின் அலைகள் நம்மைச் சாடிடாத வண்ணம்
2.புள்ளினங்கள் தன் மீது படாது ஒதுக்குவதைப் போல் ஞானச் செல்வங்கள் பிரகாசித்திடும் விழிப்பார்வையின்
3.சீதை குளித்திட்ட அக்கினிக் குண்டம் மறைபொருளாகக் குளிர்ந்து எழுந்த குளிர்கனல் மேல் நிலை காட்டும்.

அவ்வாறு ஈர்த்துக் கொண்டிடும் உயிர் சக்தி... ஆத்ம நிலைக்கே ஊட்டும்.