ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 30, 2023

எலக்ட்ரானிக் கருவிகளை அதிகமாக உற்று நோக்குபவர்களுக்குத் "தலைவலியும் தலை சுற்றலும் வருவதன் காரணம்..."

விஞ்ஞான அறிவால் இந்த உலகமே நச்சுத்தன்மை அடைந்து கொண்டுள்ளது. ரேடியோ டிவி ஒலி/ஒளிக் கற்றைகளாக அது பரவிக் கொண்டுள்ளது. மனிதன் உற்றுப் பார்த்துக் கேட்டறியும் போது தனக்குள் பதிவாகி விடுகிறது.

எப்படி...?

1.கெமிக்கல் கலந்த உணர்வுகளை இயந்திரத்துணை கொண்டு எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்று ஒலி/ஒளிக்கற்றைகளாக மாற்றுகின்றனர்..
அதன் மூலம் உருவங்களைப் பார்த்து அந்த உணர்வின் ஒலிக்கற்றைகளை நாம் செவி வழி கேட்டு
3.உணர்வின் தன்மை நுகரும் பொழுது நம் உடலுக்குள்ளும் இது கலந்து விடுகின்றது.

ஒளிக்கற்றைகள் பரவப்படும் பொழுது கண்ணுற்று இந்த உணர்வுகளை நுகர்ந்து அந்த உணர்வின் அறிவாகத் தெரிகின்றோம். "எந்தக் கெமிக்கலில் கலந்து" இதைச் சேர்த்தானோ நிச்சயம் இது இயக்கும்.

எதிலே கலக்கின்றதோ விஷத்தின் உணர்ச்சிகளாக அது இயக்கப்படும் பொழுது இரத்த நாளங்களிலே சிறுகச் சிறுக... சிறுகச் சிறுகச் சேருகின்றது.

நம் உடலில் உள்ள அணு செல்களுக்கும் இந்த உணர்வின் விஷத்தன்மைகள் கலந்து விடுகின்றது
1.அதிகமாக டிவி கம்ப்யூட்டரைப் பார்த்தவர்களுக்கு தலைவலி நிச்சயம் வரும்
2.அதே சமயத்தில் கை கால் குடைச்சலும் அதிகமாக இருக்கும்.
3.சில நேரங்களில் அதைப் பார்த்த பின் இந்த உணர்வின் அழுத்தங்கள் ஆகி மோதலாகும்போது
4.நடந்து போகும் போது சில பேருக்கு தலை சுற்றும்... கீழே தள்ளுகின்ற மாதிரிக் கொண்டு போகும்.

ஆனால் டாக்டரிடம் சென்றால் இரத்தக் கொதிப்பு... அது... இது... என்று எதையெதையோ பரிசீலனை செய்து காசை பறிக்கும் நிலைகள் தான் வரும்.

ஏனென்றால் டி.வி. கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் கருவிகளை "நெருங்கி உற்றுப் பார்க்கப்படும் போது" இத்தகைய நிலை வருகிறது.

பார்க்கலாம்... ஆனாலும் பார்த்த பின் மாற்றி அமைக்க துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்து அந்த வீரியத்தைத் தணித்துப் பழகுதல் வேண்டும்.

சாதாரணமாக... அசுத்தமான இடங்களை நம் கையை வைத்துத் தான் அதைத் தூய்மைப்படுத்துகின்றோம். ஆனால் அதற்குப் பின் அந்தக் கையில் இருக்கக்கூடிய அழுக்கைத் துடைக்கின்றோம் அல்லவா.

அதைப் போன்று நுகர்ந்தறிந்த உணர்வின் தன்மையை அதை எல்லாம் மாற்றி அமைத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

இயற்கையின் இயக்க நிலைகளை ஆதியிலே அகஸ்தியன் கண்டுணர்ந்தான். நஞ்சை வென்றிடும் சக்தி பெற்றான். விஷத்தை ஒடுக்கிடும் சக்தியாக அவன் வெளிப்படுத்திய உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலன் கவர்கின்றது.

அவன் எதை எதை எல்லாம் கண்டுணர்ந்து அந்த அறிவின் உணர்ச்சியாக மாற்றி அமைத்தானோ அதன் உணர்வுகள் இங்கே பரவிக் கொண்டுள்ளது. அதை எல்லாம்
1.நமது குரு துணை கொண்டு அவர் ஊட்டிய அந்த உணர்வின் தன்மையை உற்று நோக்கி
.அதன் உணர்வைக் கவர வேண்டும் என்ற ஏக்கத்தால் அதைப் பெற்றுக் கொண்டதனால்
3.அகஸ்தியன் கற்றுணர்ந்த உணர்வின் அறிவும் எனக்குள்ளும் (ஞானகுரு) வருகின்றது.
4.அதை நீங்களும் பெற வேண்டும்... உங்களுக்குள்ளும் அது வளர வேண்டும்.
5.அவன் நஞ்சை ஒளியாக மாற்றிய ஆற்றலை நீங்களும் பெற வேண்டும்.
6.விஞ்ஞானத்தால் வரும் நஞ்சுகளை எல்லாம் வென்று அதை ஒளியின் சுடராக மாற்ற வேண்டும்.