ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 30, 2023

சோமாஸ் ஸ்கந்தன்

சிருஷ்டியின் தொடராக மகரிஷிகளால் மறைமுகப்படுத்தப்பட்ட நிலைகள் தெளிவு பெறும். படைப்பாக்கும் உயிரணுக்கள் ஜீவன் கொள்ளும் செயலில்

1.சிதாகால மண்டலம் என்றே தன்னுள் கவன ஈர்ப்பு நரம்பு நெற்றி பொட்டினுள் எண்ணங்களும்...
2.எண்ணத்திற்கொப்ப வாசனைகளும் வாசனைக்கொப்ப ஜீவன் கொண்டிடும் அணுக்களின் செயலாக
3.சிருஷ்டிக்கின்ற ஒவ்வொரு மனிதனும் பிரம்மனே.

உலகோதய நிலை நாடிடும் மனிதன்... நொடிப்பொழுதினுள் அதற்கும் குறைவாக உயிரணுக்கள் எண்ணத்திற்கொப்ப ஈர்த்து... சிருஷ்டியின் செயல் உலகோதய நாட்டமாக மோகத்தின் குணங்கள் முதன்மையாகக் கொண்டிடும் பொழுது... சரீரத்தின் சகல அணுக்களும் சக்தி கொண்ட சூட்சுமம் "ஓம்" பொருள் என்னும்... ஓங்கார ஒலி கொண்டு ஒளி காட்டும் "தன் ஆத்ம வலுவை உணர்வதில்லை..."

வேல் என்ற அறிவு நற்குணங்கள் என்ற முருகன் கைக்கொள்ளும் செயலில்... அகங்காரம் ஆணவம் மோகவலைப்படுத்தும் "சிருஷ்டி என்றிட்ட குணங்களென்னும் பிரம்மன்..." தன் செயல் ஒழித்து நற்குணங்கள் வசம் சிறைப்படுகின்றான்.

பின் துர்க்குணங்கள் தன் செயல் விடுக்க
1.நற்குணங்கள் சிருஷ்டிப்பதே அதுவும் பிரம்ம தத்துவமாக
2.உலகோதயம் எனும் ஈர்ப்பின் நிலை விடுத்து கை கொண்ட அறிவாகக் காட்டுவதே
3.சிருஷ்டியையே முருகன் சிருஷ்டித்தான்... "பிரம்மாவைச் சிறை பிடித்தான்...!" என்று சொல்வதில் ஓர் சூட்சமப் பொருள் உண்டு.

நெற்றிப்பொட்டு எனும் கவனத்தின் ஈர்ப்பில் உள் நுழைந்திடும் ஈர்ப்பினும் எண்ண நினைவலையாம்... அணுக்கள் அறுகோணக் கருவறை என்ற அறிவின் சூட்சமம் செயல் கொண்டிட... அணுக்களின் எந்த வீரிய குண சக்தியோ அந்தச் சக்தியே செயலாக வேல் தோன்றுவதும் தோன்றாதிருத்தலும் துர்க்குண சம்ஹாரச் செயலுக்கு மனிதன் கொண்டிடும் வைராக்கியம் அந்தச் செயலின் வலுக் கூட்டும்.

1.சப்த கன்னிகள் சாப விமோசனம் என்பதுவும் சூட்சமப் பொருள் தான்
2.ஒளி கொண்டு செயல்படும் சப்தரிஷிகள் சப்தத்தின் நாத வாகினி "உலகத்தின் ஈர்ப்பில் செயல்படுவது சாபம்..."

அத்தகைய சிருஷ்டி அன்றி "சக்திவேல் எனும் அறிவு செயல் கொண்டிட..." உலகோதயம் மாற்றிட்ட சப்த நாதங்களைத் தன்னுள் மெய் ஒலி ஒளி சக்தியாகச் சப்தரிஷிகளின் படைப்பே "நேர்முகமாகக் கொள்தல் என்பது ஈர்ப்பின் நிலை விடுத்த சாப விமோசனம்..."

1.எண்ணத்தின் உயர்வே அறுகோணக் கருவறை உயர்த்திட்ட பீடம்...!
2.அதனில் உயிராத்ம சக்தியை அளந்திடச் செய்திட "நீல வண்ணம்" காட்டும் குளிர்விப்பு சக்தியாகத் தோற்றம் காட்டும்.

பர வெளியில் உருக்கொள்ளும் உயிரணுக்கள் அதனின் சுழற்சி அறுகோணத் தன்மையதாய் அமில குண ஈர்ப்பின் எண்ணம் கொண்ட ஜீவன் பெறுகின்றது. சிருஷ்டியின் இரகசியங்களை இப்படி பிண்டத்தில் கண்டனர் மகரிஷிகள்.

சரீரத்தில் கண்ணுற்ற செயல் எண்ண ஜீவித செயல்பாடு "சிரசின் நெற்றிப் பொட்டில் அறுகோணக் கருவறையாக"
1.அதனுள் எண்ண குண வாசனை சுவாச அலை எனும் ஈர்ப்பாகச் செயல் கொண்டிட
2.சிவசக்தி சுழுமுனை நாடிகள் மூலாதாரம் தொடங்கி பிடரிக்கண் பார்வையுடன் இணைந்து கொண்டு
3.அறுகோணக் கருவறையின் உள் நிகழ்வாகச் செயல் கொண்டு எண்ணங்களின் ஜிவித சிருஷ்டியே நடைபெறுகின்றது.

பர வெளியின் உயிரணுக்கள் தன்மையில் உள்நிகழ்வாகச் செயல் கொண்டிடும் சூட்சுமங்களை... சித்தர்கள் மனித சரீரத்தில் செயல் கொண்டிடும் சூட்சுமத்தையே ஒப்பு நோக்கி... உதயம் கொண்டிடும் அணுக்களின் தன்மையை உணர்த்தினர்.

அணுக்களின் செயல்பாட்டைச் சரீர நிகழ்வாகக் கண்ட மாமகான்கள்
1.சிவன் கையில் முத்தலை சூலாயுதம் சக்தியின் கையில் முத்தலை சூலாயுதம் என்றே
2."சூல்" என்று அணுக்களின் ஜீவித செயலின் கரு என்றே மறைபொருள் காட்டினர்.

ஏழு பிறவிகள் என்று கூறியவற்றுள் அணுக்களின் உதயம் காட்டிடும் செயலில்... "அறுகோணங்கள்" உலகின் ஜீவித அணுக்கள் கொண்டிடும் "பிறப்பின் இரகசியங்கள்" எனவும்... அந்த உயிரணு தனக்கு ஒத்த அமில குணத்தன்மைகள் ஈர்த்துக் கொண்டிட்டு அறுகோண சூட்சுமத்துள் எந்நிலை வலுக்கொள்கின்றதோ அதுவே அந்த உயிரணுவின் ஜீவித நிலை.
1.அறுகோணத்தின் மையப் பகுதியே
2.தெய்வப்பிறவி எனும் ஏழாம் நிலை.

அறுகோணச் சக்கரம் என்று உரைத்த பின்பு... வாசனையின் குணங்கள் மனிதச் சரீரத்தினுள் கவன ஈர்ப்பெனும் நெற்றிப்பொட்டில்... அறுகோணங்களின் உட்குவிந்த பகுதிகள் நற்குணங்கள் எனவும்... பிறப்பின் சூட்சுமத்தில் தாய்மைப் பேறு குழந்தைக்கு ஊட்டுவது அன்பு பரிவு பாசம் என்ற முத்தொடர்களும்... உயிரணு கருக் கொண்ட நிலைத் தொட்டு ஜீவித சரீரம் பெற்றிடும் எண்ணத்தின் ஈர்ப்பில் தாய்மையால் ஊட்டப்படுகின்றது.

ஞானம் வீரம் சாந்தம் என்றிட்ட குணங்களுக்கே... உள்முகமாக உயிராத்ம சக்தி வலுக் கொண்டிடும் அந்தச் செயலுக்கே
1.அந்த மூன்றின் குணங்களுக்கு வீரிய சக்திகளை
2.ஈர்ப்பினால் ஊட்டப்படல் வேண்டும் "அதுவும் தியானம் கொண்டே..."

சக்தியின் கையில் முத்தலை சூலாயுதம் "இடப்பக்கம் வளைந்திட்ட நிலை கரு கொண்டிடும் உயிரணுக்களின் ஈர்ப்பு... பின்பு அந்த உயிரணுவைப் பேணுகின்ற தன்மை மையப் பகுதியின் கூர்வேல்... முத்தலை சூலாயுதத்தின் வலப்புற வளைவே அந்த ஜீவனை ஈன்றிடும் தாய்மைப் பெறும் என..." - சிருஷ்டியின் இரகசியங்கள் காத்தலாகக் கரங்களில் கொண்ட நிலையும் "சித்தர்களால் காட்டப்பட்டதே..."

ஈஸ்வரரின் கையில் முத்தல சூலாயுதம் உயிரணுக்கள் உதயம் காட்டித் தாய்மைப் பேற்றின் முழுமைக்கு அளித்தலால்... ஈஸ்வரர் கொண்ட முத்தலை சூலாயுதம்
1.சரீர அமைப்பில் சிவசக்தி நாடிகள் சுழுமுனையில் ஒன்றி உயர் ஞானம் வாய்க்கப் பெறின்
2.அங்கு "சோமாஸ் ஸ்கந்தன்" (சிவம்+சக்தி+முருகன்) உதயமாகின்றான்.

சூரிய சந்திர ஒளி பெற்றவன் என்ற பெயர் நாமச் சூட்சுமம் மூலாதாரச் சக்தியாக எழுகின்ற ஊர்த்துவ சக்தி... அருகோணக் கருவறையுள் முத்தலை சூலாயுதம் செயல் கொண்ட நிலை... ஞானவேல் என்ற சக்தியாகக் காட்டுவது...
1.உயர் ஞான நற்குண எண்ணங்கள் நெற்றிப்போட்டில் மோதிடும் செயலாக
2.தெய்வப் பிறவி எனும் மைய நிலையை அறிவால் பொருத்தி... சுடர்தலால் "மனிதனே சிஷ்டிக்கும் பிரம்மன் ஆகின்றான்..."