காசியம்பதியில் விறகு சுமந்த வேண்மா சந்தர்ப்பத்தில் மயக்கமுற்றுச் சாய்ந்து... அந்தச் சரீரத்திலிருந்து ஜீவன் நீங்கிடும் தருவாயில் ஆங்கு வட்டமிட்ட “விஸ்வேஸ்வர மாமகரிஷி” (காசி விஸ்வநாதன்)... வேண்மாவின் உடலில் சூட்சும செயல் கொண்டு “கல்லால சித்தன்” என்ற நாமம் பூண்டு மௌனித்து எடுத்த சக்தி நிலை பெரிது.
1.மௌனமே சக்தி பெறச் சம்மதம் எனப் பொருள்பட
2.வானியல் தொடர்பாக வாக்கு தேவி அன்னபூரணி… அஷ்டலட்சுமி... என்ற மண்டலங்களாகப் பெயர் நாமப்படுத்தி
3.அதைச் சிரசினுள் காட்ட வந்ததே
4.அன்னபூரணியை வலக்கண்ணும்
5.அஷ்டலட்சுமியை இடக்கண்ணும்
6.வாக்கு தேவியைப் பிடரிக் கண்ணும் என்று காட்டி
7.மனக்கண் குறிப்பாக உள் முகம் நோக்கி… அகப்பார்வை ஒளிமார்க்கம் காட்டும் விதம்... - அதுவே “அக்ஷி…”
இத்தன்மையை அறியும் போது அறிய வேண்டியது ஒன்று உண்டு.
கிணற்றில் நீர் இருக்கின்றது. கிணற்றில் இருக்கின்ற நீரை நீர் இறைக்கின்ற உபாயமாகக் கைக்கொள்ள வேண்டிய முறை உண்டு.
அதாவது யாம் சொல்ல வருவது “அறிவை அறிவால் அறிதல்” என்பது.
சிறு குழந்தைகள் ஓரு மண் கலயத்தைக் கயிற்றினால் கட்டி அதைக் கிணற்றிற்குள் விட்டு நீர் இறைக்கின்ற செயலில் அது பக்குவமற்ற தன்மை என்றாலும்... “கவனத்தின் குறைபாடு தான்…”
சிறு பிள்ளை விளையாட்டு என்றபடி நீர் மொண்ட அந்தச் சிறு மண்பாண்டம் நீர் இறைக்கும் தருவாயில் கிணற்றுச் சுவரில் பட்டு உடைந்து விடுகிறது. அந்தக் குழந்தைகள் தாங்கள் கைக் கொண்ட செயலுக்கு நாணமுறுகின்றனர். அதைப் போல் இல்லாதபடி
1.இந்த ஞான வழியினை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழி முறை என்பது... சிந்தனையில் சிரத்தையோடு
2.சூட்சும மாமகரிஷிகள் காட்டுகின்ற வழித்தன்மையைக் கையாள்வதில் கொள்கின்ற தனித்துவ செயல்பாடு “உறுதியாக” இருத்தல் வேண்டும்.
அந்த உறுதியை எப்படிச் செயல்படுத்துவது…?
கிணற்றில் நீரை இறைக்க வேண்டும் என்றால் உடையாத ஓர் கலம் வேண்டும். நீர் இறைக்கும் தருவாயில் நீர் இறைக்கின்ற கலம் நீர் மொள்கின்ற சத்தத்தைப் புலனறிவால் அறிந்து கொண்டு... கலத்தில் நீர் நிறைந்து விட்ட தன்மையை உணர்ந்தே… பக்குவமாக வெளிக்கொணர்ந்து பயனுறக் கைக்கொள்ளல் வேண்டும்
அது போல்
1.விஸ்வேஸ்வர மாமகரிஷி காட்டிய அந்த உயரிய வழித்தன்மை
2.அவராலும் அவருடைய சீடர்களாலும் கடைபிடிக்கப்பட்டு வந்த அந்த முறையை
3.இன்று அறியப்பட வேண்டிய இரகசிய உண்மைகளை நீங்கள் அறிந்து தெளிந்து... ஆக்கச் செயலுக்காக உயர்ந்து
4.பால்வெளியின் பூதியில் ஓர் மண்டலமாக உருக் கொள்கின்ற திறனுக்கே
5.உயர்வெண்ணம் செலுத்தப்படல் வேண்டும்
அரை குறையாக அறிந்ததை... அறிந்து விட்டதாக எண்ணி இரகசிய உண்மைகளைச் செல்வம் சேர்த்திடும் எண்ணத்திற்குச் செயல்படுத்திட எண்ணிய இந்தத் தேசத்தில்... அக்ஷி முறை செயலுறுவாகச் செயல் கொண்டு “இயங்கிடாத நிலையே” இன்று திபெத்தில் இரகசிய முறையாக வளர்ந்து கொண்டே இருக்கின்றது.
1.ஆத்மாவும் ஜீவனாடி நாத விந்துவும்
2.மேலது கீழாய் கீழது மேலாய்
3.சிருஷ்டி எனப்படுவது கீழ் இறங்கல்
4.ஞானம் எனப்படுவது மேலுயர்தல்
5.சிருஷ்டி... சிருஷ்டிக்கும் சக்தி... என்று ஆதி சக்தியின் தன்மையையே அவ்வாறு குறிப்பிட்டோம்.
“ஸ்ரீ பாதங்கள்...” என்று உரைப்பதே “நாத விந்து” எனப்படுகின்ற ஒலி ஒளி சக்திகளையே.