ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 13, 2023

சதிபதி

ஆயகலைகள் அறுபத்தி நான்கு என்றால் வாழ்க்கை நடைமுறையில் புறச்செயல்படும் காரியங்கள் குறிக்கின்ற கலைகள் என்றே எண்ணமிடுகின்றாய்.

வீரம் விவேகம் நளினம் முதற்கொண்டு நாம் காரியங்கள் நிகழ்த்தும் கலைகளும் உண்டு. மகரிஷிகள் உணர்த்திச் செயலுற வந்த மெய்ஞ்ஞானச் சுடராக்கும் கலைகள் அறுபத்தி நான்கினையே இங்கே உரைத்திட வந்தோம்.

எண்ணத்தின் தெளிவு…
1.இக்கணம் நீ என்ன “எண்ண நினைவில் இருக்கின்றாய்…?” என்று வினவினால்
2.“நான் இதை நினைத்தேன்…” என்று கூறுமளவிற்கு மனத்தின் தூய்மை வலுப்பெற்றிருத்தல் வேண்டும்.
3.அந்நிலை வலு கொண்டு விட்டால் கலைகள் தொடக்கம் அச்சரம் ஐம்பதில் தொடங்கும்.

ஓங்காரப் பொருள் காட்டும்
1.“பிரணவம்” என்றே அழைக்கப் பெறும் ஓம்...!
2.அதனுள் மூன்று நிலைகளாக கலைகள் (1)ஈர்த்து (2)சமைத்து (3)அமைதல் என்கின்ற விதமாக கலைகள் ஐம்பது.
3.அதாவது உயிரிலே ஈர்க்கபட்டு சமைத்து – ஓ; உடலாக அமைவது - ம்

ஈர்ப்பின் அகரம் பத்தாக… ஈர்த்த பின் செயல் வரும் உகரமாக பதினான்கு செயல் கொண்டு… அமைவு பெறும் மகரம் இருபத்தி ஆறாக ஓம் என்ற பிரணவ கலைகள் ஐம்பது நாற்பூத செயல்பாடலாய் விந்து கலைகள் நான்கு… நாதக்கலைகள் பத்தாக ஆக “அந்த அறுபத்தி நான்கு கலைகளையே சரீரத்தில் கண்டனர் மகரிஷிகள்…!”

இதற்கும் மேல் ஒளியாகும் நிலை ஒன்று சிரசின் உச்சியில் ஈஸ்வர ஜோதி…! ஒளி நிலை பெற மகரிஷியில் காட்டிட்ட அனிமாது சித்துகளை (அஷ்டமாசித்து) அடைந்து விட்டாலும்
1.அடக்கத்தின் திரு உருவாக ஒளி மண்டலத்தில் உறையும் மனமாக காரியமாற்றி… காரணத்துடன் வாழ்வான்
2.அதனின் நிலைக்கு வேறு எந்த நிலையும் நாம் எண்ணிடல் ஆகாது.

இச்சரீர வாழ்க்கையிலும் சிவசக்தி (சதி+பதி) சமேதராகச் சக்தி நிலை பெற்றிடவே உணர்ந்து கொண்டிட வேண்டிய பயன் தரும் நிலை காணுவோம். தாகம் எடுக்கின்றது தாகத்தை தணிக்க நீர் அருந்த வேண்டும் என்று மனம் நாடுகின்றது.

இது “சதியானவள்...” (வேகா நிலை) கொள்கின்ற செயலுறும் எண்ணத்தின் நிலையே கோபுரம் போல் உயர்ந்து விளங்குகின்றது. அதுவும் மலையின் மீது அமைந்த கோபுரம்.

“பதியானவன்…” மோகத்தின் வழிப்பாதை பயணமுற்று... அந்த வழிப் பாதையின் தொடரில் பன்மாடங்கள் இளைப்பாரி... நீக்கமுறாத் துயில் வசம் ஆட்படுகின்றான் (பல பிறவி எடுத்த நிலை).

அறிவின் சுடர்தல் தொடங்கி மெய்ஞான விழிப்பு ஏற்படுத்தும் கருத்தினுள் ஒன்றியவுடன் பதியானவன் விழித்துக் கொள்கின்றான்.

விழிப்பு நிலை பெற்றவுடன் வழித்தடங்கல் நிலையினை எண்ணியே செல்லும்
1.வேகத்திற்கு மேல் வேகமாக எண்ணத்தைச் செலுத்தி
2.கோபுரம் வாழ்கின்ற தன் பாகமாம் “சதியின் துணை நாடி…”
3.சதிபதி சிவசக்தி கூடும் நிலைகாட்டி…
4.இரு புறத்தூய்மையும் அகத்தின் வசம் எழ…
5.ஒளிநிலைப் பிரவாக மெய்ஞானச் சுடராக நிலை பெற்றிருக்கும் சூட்சுமம் செயல் கொள்கிறது.

மோகத்தின் நிலை மாற்றும் “இரகசியக் குறிப்புகளை” இங்கே காட்டி விட்டோம். சித்துக்களைப் பற்றியும் கூறி விட்டோம். கலைகளின் வகை இரு நிலைப்படும் நிலையைக் காட்டி “ஆய்வை” உனக்குள்ளே தூண்டி இருக்கின்றோம்.

செயலில் “வேகம்” வேண்டும்.. வேகத்தின் பிரதானம் “நிதானமும்” வேண்டும். எண்ணத்தில் ஆட்டுகின்ற கருத்தே சொல்லியவன் சுருதி கணபதியாக வரல் வேண்டும்.

சகல நிலைகளையும் உணர்த்தி ஏற்றுக் கொண்டிடும் பக்குவத்திற்காகப் பண்படுத்தி விதைத்திருக்கின்றோம்.