ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 11, 2023

வேடிக்கை பார்த்தது தீய வினையாக எப்படி மாறுகிறது…?

ரோட்டில ஒருவன் செல்கின்றான். அவன் நடையையும் மற்ற நிலையும் பார்க்கிறோம்... அவன் ஒரு தினுசாக நடந்து போவான். நாம் என்ன செய்கின்றோம்...? அவனைப் பார்த்தவுடன் இவன் டான்ஸ் ஆடிக்கொண்டு போகின்றான்... நடக்கிற நடையைப் பார்...! என்ற வகையிலே அந்த நடிப்பு போன்ற செயலைப் பார்த்ததும் “வெறுப்பு” வருகின்றது.

இன்னொருவன் அங்கே பிக்பாக்கெட் அடிக்கும் நோக்கத்துடன் செல்கின்றான். பர்ஸ் வைத்திருப்பவனைப் பார்த்ததும்... அப்படியே அவன் காலைத் தட்டி விட்டு அவனைக் காப்பாற்றுகிற மாதிரி பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொள்கின்றான்.

பார்க்கின்றோம் ஆனால் சொல்ல முடியவில்லை. அடுத்த தடவை அவன் வரும் பொழுது பார்த்தவுடனே நமக்குப் பதட்டம் வருகிறது

இன்னொரு பக்கம் ஒருவன் உதைக்கும் நோக்கத்துடன் செல்கின்றான்... அடுத்தவனை உதைக்கின்றான். அந்த உணர்வை நுகர்கின்றோம். இவன் போக்கிரிப் பயல்... எல்லாரையும் அடிக்கின்றான்... இவனைக் கண்டு எல்லோரும் பயந்து ஓடுகின்றார்கள் என்று நாமும் பார்த்துவிட்டு அந்தப் பக்கம் செல்லாமல் வேறு பக்கம் சென்று விடுகின்றோம்.

ஏனென்றால்
1.கடைவீதியில் நாம் நடந்து செல்லும் போது இப்படி ஒரு தடவை நடந்து விட்டால்
2.அந்த உணர்வு பதிவாகி விட்டால் அந்த உணர்வு நம்மை இனம் புரியாதபடி பயப்பட வைக்கிறது.

இரண்டு பேர் நண்பராகச் சந்தோஷமாக இருக்கிறோம். சந்தர்ப்பத்தில் ஒருவருக்கொருவர் சண்டை வந்து விடுகிறது... ஏமாற்றி விட்டார் என்று...!

அடுத்தாற்போல் அவனைப் பார்த்தவுடனே என்ன நினைக்கின்றோம்...? அந்தத் திருட்டுப் பயல் போகின்றான் பார்... ஏமாற்றுகிறவன் போகின்றான் பார்...! என்போம்.

அவன் அங்கே நல்லதைப் பேசிக் கொண்டிருப்பான். ஆனால்
1.நாமோ அவன் ஊரை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகின்றான் என்று
2.நம்மை அறியாமலேயே இந்தச் சொல்களைச் சொல்லும்படி வைக்கும்.

அப்பொழுது எது இயக்குகின்றது...?

நாம் பார்வையில் பார்த்து எடுத்துக் கொண்ட பிறிதொருவரின் உணர்வு... அவன் செயல் காற்றிலிருக்கின்றது; அதை நாம் நுகர்கின்றோம்.

அவன் இல்லாத பொழுது... அவன் இந்த மாதிரியான ஆள்...! என்று யாராவது சொன்னால் “ஆமாம்...” அன்று நான் பார்த்தேன் என்று அந்த உணர்வை எடுத்து அவனுடைய செய்கைகளை நம் இரத்தத்திலே கலந்து விடுகின்றோம்.

இந்த உணர்வுகள் எல்லாம் என்ன செய்கின்றது...?

இரத்தத்தில் கலந்த பின் அந்த அணுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்தண்த உணர்வை எடுத்துச் சாப்பிட ஆரம்பிக்கின்றது.

நான்கு பேரிடம் இதைச் சொன்னால்... தட்டி விட்டான் பிட்பாக்கெட் அடித்தான் உதைத்தான் என்று இந்த உணர்வுகளை எடுத்து வளர்த்து விட்டால் அடுத்து நம்முடைய நினைவின் எண்ணங்கள் என்ன செய்யும்...?

கண்ணிலே அந்த பர்ஸ் யாரிடமாவது தெரிந்தால் போதும்... பிட்பாக்கெட்டாக அதை எடுக்கலாமா...? மற்றவர் எதாவது நமக்கு இடைஞ்சல் செய்தால் உடனே உதைக்கலாமா...? என்று இந்த மனம் போகும்.

ஏனென்றால்
1.நாம் அந்த தவறு செய்தோரின் உணர்வுகளைப் பார்த்து நுகர்ந்து அதை வளர்த்துக் கொள்கிறோம்.
2.இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்
3.நாம் எதை எண்ணுகின்றோமோ அது நமக்குள் அதிகமாக...
4.அதன் உணர்வே அதன் வழிக்கு நம்மை வளர்த்து விடுகின்றது என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

மனிதனான பின் பிறிதொருவர் செயலைப் பார்க்கின்றோம். தவறு என்று பார்த்தால் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்...?

1.அதைத் தடுப்பதற்காக அதைக் காட்டிலும் சக்தி வாய்ந்த உணர்வுகளை அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்.
2.இப்போது அதைத் தான் இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கின்றோம்.

பிறிதொரு மனிதனின் உணர்வு இயக்கினால் அடுத்த கணம் ஈஸ்வரா...! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.அவன் அறியாது செய்யும் தவறிலிருந்து விடுபட வேண்டும்...
2.பொருளறிந்து செயல்படும் தன்மை பெற வேண்டும்.
3.அவன் பொருள் திருடு போனால் அவன் எப்படிப் பதறுவானோ அதை உணர்ந்து அதற்குத் தக்க சிந்திக்கும் ஆற்றல் வரவேண்டும் என்று
3.நாம் இந்த உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

இப்படிச் செய்தால் நாமும் நம்முடைய நிலைகளில் நல்ல உணர்வுகளைச் சேர்த்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு நல்ல சாப்பாட்டைக் கொடுத்து சிந்திக்கும்படியான செயலுக்கு வருகின்றோம்.

ஆனால் தவறு செய்கிறார்கள்... தவறு செய்கிறார்கள் என்று சொன்னால் அந்தத் தவறு செய்யும் உணர்வே நம்மை இயக்கி விடுகின்றது. நாம் இதிலெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.