அன்று பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பெற்ற பெருநகரில் செல்வத்தின் அதிபதியாக வாழ்ந்து வந்தவர் திருச்சாடனார்.
வாழ்க்கைத் துணை நலம் நன்கு அமையப் பெற்றும் பன்னெடும் காலமாக மக்கள் செல்வம் அமைந்திடாமல் கணவனும் மனைவியும் குழந்தைப் பாக்கியப் பேறு வேண்டி அன்னதானங்கள் இட்டு... அது மிகப்பெரிய சாமாராதனையாக (இறைவனின் அடியார்களுக்குச் செய்யும் சேவை) அனுதினமும் நடைபெற்று வந்தது.
ஒரு பெண் மகவை ஈன்ற பின் துணைவியார் இயற்கை நிலை எய்துகின்றார். அந்தக் குழந்தையைப் பேணும் பொறுப்பை திருச்சாடனார் ஒரு தவமாய்ச் செய்து வந்தார்.
குழந்தையின் மங்கைப் பருவத்தில் உபேந்திரன் என்கின்ற தவநெறிச் செல்வனுக்கு மணமுடித்து திருச்சாடனார் முழுமையாகத் தவ வாழ்க்கையில் ஈடுபட்டார்.
பூமியில் சில விசேஷ அலைத்தன்மைகள் பாயப்பெறும் காலகட்டம்… இரு சம்பவங்கள் அப்பொழுது நடந்தேறியது.
செல்வச் சீமான் திருச்சாடனார் உள்ளத்தால் துறவறத்தை மேற்கொண்டார். காட்டு வழிப் பயணம் செல்கின்ற காலத்தில் செல்வ நிலையைக் குறிக்கோளாக வைத்த ஊரின் எல்லையில் வாழ்ந்து வந்த மந்திரவாதி ஒருவன் திருச்சாடனாரை அழித்திடும் நோக்கம் கொண்டு வேதை (தாக்குபவன்) என்பவனை ஏவி விடுகின்றான்.
வேதையும் ஓர் அம்பை ஏவியது.
1.பகலை இரவாக்கிட்ட கடும் மழைக்காலம் ஞானத்தின் சூட்சுமத்தில் “மகரிஷிகளால் ஆட்கொள்ளப்படுகின்ற செயலும் உண்டு…”
2.“நில் என்றால் உடனே நிற்கும்...” ஞானக்காவலுடன் சூட்சும மகரிஷிகள் உடன் இருக்க
3.அச்செயல் தடுக்க… முதலில் எய்த அம்பு திருச்சாடனாரின் மார்பைத் துளைத்தது.
4.பின் மீண்டும் தொடுத்த அம்பு பாயும் முன் திருச்சாடனார் வாயிலிருந்து “நில்...” என்றே ஒலித்த ஒலியின் தொனியினால்
5.வினை... சுவரில் எறியப்பட்ட பந்து போல் எய்த இடமே திரும்பச் சென்றது.
“நில்” என்ற வெளிப்பட்ட தொனியின் அதிர்ச்சியினால் வேதை என்பவன் மயங்கி உயிர் துறந்தான்.
“சூரிய மண்டல தேவன் அங்கே சூட்சமமாக திருச்சாடனார் சரீர நிலையில் செயல் கொண்டு” முன்னிலும் பிரகாசமான தேஜசுடன் சரீர துன்பங்கள் நீக்கம் பெற்று...
1.“வேதம்” என்ற மறைபொருளை ஒலியின் தன்மைகளை ஆளுகின்ற செயலினால்
2.”வேதாள மாமகரிஷியாக” அவர் இன்றும் விளங்கிக் கொண்டிருக்கின்றார்.
வேதாள மகரிஷி உரைப்பான்...! மனமாகிய கிணற்றில் குறுக்கே சுவரெடுத்தால் நீர் இறைத்திடும் செயல் தடைப்படுகிறது. ஆனால் மனக்கிணறோ பழுதுராத் தன்மையில் நலம் பெற விழைகின்றது.
ஜெப நீர் (தியானத்தில் எடுக்கும் சக்தி) பெற்றுத் உயிராத்ம சக்தியைக் காத்திட முனைவோர்... மனக்கிணற்றின் ஜெப நீர் பெற்றிட குறுக்கே எழுந்திட்ட தடைகள் அது சூட்சமமாக இருந்தால் “அதைத் தகர்த்து விடவேண்டும்...” என்ற மன எண்ணத்தின் உயர்வைக் கூட்டிடல் வேண்டும்.
பின் ஜெபநீர் அருந்திடத் தடை ஏது…? இந்நிலையின் பொருள்கள் விளக்கி
1.எது தீமை தந்திட விளைந்ததோ அதையே நன்மையாக்கிடும் நல் நிலைகள் காட்டி
2.அஷ்டமாசித்துக்கள் பெற வைத்துக் காத்திட்ட வேதாள மகரிஷியின் செயல்கள் பல உண்டு.
புறக்கண்ணால் நோக்கிடும் செயல் உயர் ஞான சக்தியின் வளர்ப்பிற்கே தவிர்க்கப்பட்டாலும்... கொண்ட சேமிப்பைக் குறைவாக்குவது
1.உலகோதய வாழ்க்கையில் வந்திடும் மோதல் காலங்களில்
2.உற்று உறுத்துக் கேட்டல்… அதிசயித்து எச்செயலையும் விழிப்பார்வை கொண்டு பார்த்தல்…
3.இந்த இரண்டு வகையான காரியங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்.
திருச்சாடனார் சூட்சும அவதார நிலையின் நோக்கமே… மனித சரீரத்தின் உயிர்களுக்கு ஊறு விளைவித்திடும் கபாலிகர்கள் வசம் இருந்து அவைகளைக் காத்திடத் தான்.
அதற்காக… தனது உருவை விகார வடிவம் அமைத்து… வேதாளம் என்ற பெயரும் படைத்திட்டுப் புனித பூமியை மாசு படுத்திடும் அவர்களை விரட்டிட வேதாள வடிவம் தாங்கித் தன்னை அச்சுறுத்தும் தோற்றமாகக் காட்டினார்.