ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 15, 2023

கண்ணுக்குப் புலப்படாதது கண்ணுக்குப் புலப்படுவதாக மாறினாலும் நாம் அதை அறிந்திருக்கின்றோமா…?

ஜீவன் பெற்று உடல் கொண்டு வாழும் மனிதன்
1.இயற்கையின் கதி குணங்களுக்கொப்ப எண்ணுகின்ற எண்ணத்தின் காந்தப்புல ஈர்ப்பு நிலைகளில்
2.சுவாசம் எனும் காற்று கொண்டு... பிடர்தல் (உந்துதல்) குண எந்த எண்ணமோ
3.அந்த எண்ணத்தின் வலு வீரிய காந்த ஈர்ப்பில் பிடர்தல் குணத்தன்மைகள் போல்
4.காற்றில் உலாவி ஓடிடும் படர்தல் குண கோடானு கோடி விசேஷத் தன்மைகளில்... “ஒத்த நிலையை ஈர்த்துக் கொண்டு”
5.சுவாசக் காற்றாக ஈர்க்கப்பட்ட ஒத்த குணங்களின் வலு வீரியத்தில்... “எக்குணம் பிடர்தல் கொண்டு வலுவாக்கப்பட்டதோ”
6.அந்த வலுவின் வலுவிற்கே வலு கூட்டிக் கொண்டிடும் ஜீவனாக... “அதே குணங்கள் மென்மேலும் ஈர்க்கப்பட்டு”
7.இரத்தத்தில் கருவுற்று அணுக்களாக உருப்பெற்று... அது தசைகளில் சேர்க்கப்பட்டு
8.எண்ணுகின்ற எண்ணம் தெய்வீக குணங்களற்ற... மாற்று நிலை (மீண்டும் பிறவிக்கு வரும்) கொள்ளப்படும் குணங்களாக இருந்திட்டால்
9.அந்தக் குணங்களுக்கொப்ப சேர்க்கப்படும் அமிலங்கள்... தியானம் கொண்டு நல்ல அணுக்களாக மாற்றம் செய்யப்படவில்லை என்றால்
10.உறைதல் குணம் கொண்டிட்டே (உடல் உறுப்புகளில் மாற்றமாகி) சரீரத்தையே நலிவுறச் செய்திடும் கதியாகி
11.பின் வினையாகி… பின் செயலுறும் வினைப் பயனாகி...
12.பின் விதியாக்கிடும் நிலைபெறும் செயல் கூறுகள் கொள்ளுகின்ற
13.கொள்ளப்படுகின்ற (விதிப்படி எடுக்கப்படும்) எண்ணத்தையே செயல் நடத்திடும் உயிர் கடவுளை இயக்கிடும் உணர்வலைகள்
14.உயிராத்மாவாகப் பதிவு பெற்றிடும் ஆத்ம சூட்சுமத்தில்
15.நாம் கூறிடும் இந்த எளிய தியானத்தின் வழியாகப் பெறப்பட வேண்டியது “ஆத்ம பலம் ஒன்றே…”

இயற்கையின் கதியால் சுவாச நாடிகளில் ஓடிடும் காற்று... பரிசுத்தமாக அமையப் பெற்றிட உன் முயற்சி இருந்திட்டால் மாற்று நிலை அமிலக் கூறுகளின் அணுக்கள் உடலுக்குள் உறையும் நிலை தடுக்கப்படும்.

மேல் நோக்கிய சுவாச நிலைகள் மாறு கொண்டிட்டால்... “கனம் கொண்ட” சுவாச அலைகள் (கோபம் பயம் துன்பம் பொறாமை குரோதம்) சரீர நாடிகளில் ஓடிடும் பொழுது அதனால் தடை ஏற்பட்டு... சரீரத்தின் வெப்ப கதியும்... நீர் அமில சக்தியில் கலந்திட்ட மாற்றமில குணத் தன்மையையும் சுவாச நாடிகளில் “நற்சுவாசத் தடங்கல்கள்” ஏற்பட்டுவிடும்.

அத்தகைய காலத்தில்…
1.வெப்பமும்... நீர் சக்தியுடன் கலந்திட்ட அமில குணங்களும் சுவாச நாடிகளில் நற்சுவாசத் தொடர்பின்றி
2.நற்சுவாசக் காற்றின் தொடர்பும் வெப்ப சக்தியில் கலந்துறும் சூரிய சக்தியும் நீர் அமில சக்தியுடன் கலந்து… தீவினைப் பயனுறும் செயலாக மாறி
3.விசேஷ செயல் உறாமல் (நல்லது ஏற்படாது) காற்றின் சூட்சுமம் தடைப்பட்டே... ஒன்றுடன் ஒன்று நெருங்கிக் கொண்டிட்ட தன்மையாக
4.காற்றின் மூலத்தைத் தாக்கிடும் செயலாக… தசைகளில் வேதனையாகி சுவாச சமைப்பால் அங்கு (உடலில் ஆங்காங்கு ஏற்படும் வலி) அறிந்து கொள்கின்றோம்.

உறையும் நிலை இங்கு அதிமுக்கியம். நற் சுவாச குணங்கள் எடுக்கப்படும் போது அதனால் காக்கப் பெறுவது சரீரம் மாத்திரம் அன்று... ஆத்மாவும் தான் காக்கப்படுகிறது.

வேதனையைச் சரீர உணர்வுகள் காட்டுகின்றன... அதுவே ஆத்மாவின் பதிவாகச் சேரும் நிலையை உணர்ந்தாயா…?

சரீரம் கொண்டு தன்னைக் காத்துக் கொண்டிடும் செயல் கூறுகள் இந்த மனிதனுக்கு மாத்திரம் தான் உண்டு என்று எண்ணிடலாகாது. இயற்கையில் ஜீவன் கொண்ட தாவரங்களுக்கும் இத்தகைய நிலை உண்டு.

அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் வந்து நீ கண்டிருப்பாய். ஆகாய நீர் உரிக்க அறிந்தவனப்பா நீ. புலர் காலைப் பொழுதில் புல் பூண்டு செடி கொடிகளின் மீது பனித்திவலைகள் முத்து முத்துக்களாக உரு கொண்ட நிலையைப் பார்த்திருக்கின்றாய். அது எவ்வாறு உருப்பெறுகின்றது…?

பருவ காலமான பனிக்காலத்தில் பெய்கின்ற பனி அப்படி உருப்பெறுகின்றது என்று நீ நினைக்கின்றாய். ஞான விழிப்பு தந்தாயிற்றே... சொல் பார்க்கலாம்…!

அறிந்ததைத் தெளிவதே ஞானியருக்கு அழகு.

நண்பகலில் சூரியனின் வெப்ப அலைகளைச் சமைத்திடும் பூமி... தன் சமைப்பில் வெளிப்படுத்திடும் வெப்பத்தின் அலைகள்… உணர்வலைகள் கொண்டு வெப்ப கதியாகப் படரும் செயல் பகல் பொழுதிலும்... அதே வெப்ப அலைகளைப் பெற்றிடும் சகல தாவரங்களும் ஜடப் பொருள்களும் ஏன் மனிதனும் கூட உணர்ந்து கொண்டிடும் அச்செயல் சூரிய அஸ்தமன செயலுக்குப்பின் இரவிலே வெப்பத்தின் நிலை என்ன…?

பூமி சமைத்து வெளித்தள்ளும் சுவாசக்கதியாக
1.அதி வெப்ப நிலைகள் பூமியின் சுவாச உணர்வலைகளால் சமைப்பின் பின் வெளிப்படும் நிலையே
2.மேல் நோக்கித் தள்ளப்படும் வெப்பக் காற்று சென்று...
3.பின் அந்த இடத்தை நோக்கி குவியப் பெறும் பருவ காலத்தின் நீர் அமிலக் காற்று... கிரியா ஊக்கியாகச் செயல்படுகிறது.

தாவரத்தை எடுத்துக் கொள். வெப்பத்தைப் பெற்றிருக்கும் பகல் பொழுதில் பூமியின் சுவாச அதி வெப்பம் தணிவுறும் இரவின் போது... தான் பெற்றுக் கொண்டிட்ட வெப்ப அமில நிலைகளை வெளிப்படுத்திடும் பொழுதே... காற்றில் படர்வு நிலை பெறும் குளிர்வு நிலை நீர் அமில சக்திகளை உடனுக்குடன் வெளிப்படுத்திடும் பொழுதே... ஈர்த்திடும் கிரியைகள் மிக மிக நுண் நீர் அமிலக் கூறுகள், ஈர்ப்பில் படர்வு பெற்றே... இரவுக் காலம் முழுவதும் நடைபெறும் அந்தச் செயலால் உருப் பெற்றிடும் திவலையாக... துளிகளாகக் காண முடிகின்றது (VAPORISATION AND CONDENSATION).

இதையே உன் சரீர செயலில் கண்டு கொள்.

ஜடப்பொருளான எத்தனையோ பொருள்கள் மேஜை சுவர்கள் எங்கிலும் நடைபெற்றிடும் செயலில் ஜீவன் கொண்ட தன்மைகளில் அந்த செயல் ஜடப் பொருள்களில் அறியவொண்ணாதது.

உறைபடு செயல்கள்... மறைபடு பொருள்கள்…! அதாவது…
1.கண்ணுக்குப் புலப்படாதது கண்ணுக்குப் புலப்படுவதாக உறைந்தாலும்
2.உடலுக்குள் ஆகப்படும் போது அது மறை பொருள் தான்.
3.அதை அறிய வேண்டியது மிகவும் அவசியம் அல்லவா…!