ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 18, 2023

எம்முடைய உபதேசங்களை “அடிக்கடி பதிவாக்கினால் தான்” தீமைகளை நீக்கும் வலிமை கிடைக்கும்

உங்கள் வாழ்க்கையில் எப்போதெல்லாம் சங்கடத்தைப் பார்க்கின்றீர்களோ... அடுத்த கணமே ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் உள்ளுக்கே அடைத்துப் பழக வேண்டும்.

காலை நான்கு மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய சக்திகளைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்துக் கவர்ந்து நமக்கு முன் கொண்டு வருகின்றது.

அதை நாம் நுகரும் பொழுது உடலுக்குள் செல்கின்றது இது வலுப்பெற்று விடுகிறது.

அன்றாட வாழ்க்கையில்... காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ உணர்வுகளை சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் வேதனை இத்தனையும் எடுத்திருக்கின்றோம்... அது நமக்குள் பதிவாகி இருக்கின்றது.

1.இந்தப் பதிவுகள் நம் ஆன்மாவில் இருக்கும்
2.ஆன்மாவிலிருந்து நுகர்ந்து நுகர்ந்து ஒவ்வொன்றாக வரிசையாக நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் சுவாசிக்க ஆரம்பித்தால்
3.அந்த உணர்வுகள் உயிரில் மோதினால் அந்த எண்ணங்கள் எல்லாம் நமக்கு வரும்.

சும்மா உட்கார்ந்து இருந்தாலும் கூட... அவன் சண்டை போட்டான் இவன் என்னை ஏமாற்றினான்... சம்பந்தமில்லாமலே ரோட்டிலே ஒருவன் போனான்... கீழே விழுந்தான்...! என்று எல்லா உணர்வும் வரும்.

பதிவான அந்த உணர்வுகள் நமக்குள் மீண்டும் நினவாகி... தனது இனமான உணர்வை உணவாக எடுத்து வளரத் தொடங்கும். அப்படி அதை நுகரும் போது என்ன ஆகிறது...?

உயிரிலே பட்டால் அந்தந்த உணர்ச்சிகளை நாம் அறிய முடிகின்றது உணர்ச்சிகள் இரத்தத்தில் கலக்கின்றது. கலந்த பின் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்கள் சோர்வடைகிறது... சிந்திக்கும் தன்மை இழக்கின்றது.
1.இங்கே யார் தவறு செய்தது...? யாரும் தவறு செய்யவில்லையே.
2.ஆனால் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் அதற்குக் காரணம்.

வேதனைப்படுபவரைப் பார்க்கின்றோம். அந்த வேதனையை நம் உயிர் உடலுக்குள் உருவாக்குகிறது... அது ஒரு சந்தர்ப்பம்.

அதை மாற்றி அமைக்கத் தீமைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் சக்திகளைப் பெறுதல் வேண்டும். அதை நுகர்வதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அதை வளர்த்தால்... தீமையை நீக்கும் சந்தர்ப்பமாக நமக்குள் வரும்.

சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வு தான் பரப்பிரம்மமாகிறது. மனிதன் அந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்கி உயிரிலே நுகர நேர்ந்தால்... அதை உருவாக்கினால்... “துருவ நட்சத்திரத்தின் சக்தி நமக்குள் பிரம்மமாகிறது...”

பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன். கார்த்திகேயா...! இந்த ஆறாவது அறிவால்... தீமை என்று தெரிந்து கொண்ட பின்... அந்தத் தீமையை நீக்க வேண்டும் என்று அறிந்து கொண்ட உணர்வை வைத்துத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நுகர்ந்தால் அருள் ஒளியை உருவாக்கலாம்.

அந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கும் போது தீமையை நீக்கும் சக்தி கிடைக்கும். ஏன் இது நம்மால் முடியாதா...?

அதற்காக வேண்டித் தான்
1.அவ்வப்பொழுது தீமையை நீக்கும் சந்தர்ப்பத்தை உங்களுக்குள் உருவாக்குகின்றோம்... நினைவூட்டுகின்றோம்.
2.உங்களைக் காக்க இது உதவ வேண்டும் என்பதற்காகத் தான் மணிக்கணக்கில் உபதேசிக்கின்றேன்.

சிறிது நேரம் சொல்லிவிட்டுச் சென்றால் “நன்றாக இருக்கின்றது...” என்று சென்று விடுவார்கள்... உள்ளே பதிவாகாது. பதிவாகவில்லை என்கிற போது குருநாதர் என்ன சொன்னார்...? என்று கேட்பார்கள்.

அதற்காக அழுத்தமாகக் கொடுக்கப்படும் பொழுது அதைப் பெற வேண்டும் என்ற உணர்ச்சிகள் வருகின்றது அதை வைத்து உங்களைக் காக்கும் எண்ணங்கள் வரும்.

இப்படித் தான் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்கிறோம்.... அடிக்கடி பதிவாக்குகின்றோம்.
1.இதை நினைவு கொண்டால் அந்த அருள் உங்களுக்குள் வலுப்பெறுகின்றது
2.இருளைப் போக்கும் சக்தியை நீங்கள் பெறுகிறீர்கள்