ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 23, 2023

அலைபடுபேதம்

“காசினி” என்று அழைக்கப்படும் பூமியின் நடு மையத்தில் ஆழ் உறைகின்ற நெருப்பானது... “ஈர்ப்பின் அலைபடுகின்ற பேதத்தினால் எதிர் மோதல் நிலைபெற்றுப் பொங்கிப் பிரவாகித்து (எரிமலை)… காசினியை விட்டு ஆசினி என அழைக்கப்படும் விண்ணை நோக்கி உயர்ந்து எழ.. மலை வாயின் வழி வழிவிட்டு அலைபடுத்தும் பேதத்தை நீக்கித் தன்னுள் சமன்படுகின்றது.

“ஆழ் உறையும் நெருப்பு” மலை வாயின் வழியே சொரிந்து வெளிப்படுத்துகின்ற செயலின் காரணம் “அலைபடுபேதம்…” (எதிர் மோதல் அலைகள்).

மனித மனத்தின் மாண்பு உலகோதய நடைமுறை ஈர்ப்பின் செயல் வசத்தில் வண்ணம் கொண்டு விளங்கிடும் மனக்கடல் அலையை
1.”உலகோதய நாட்டம்” எனும் மிகைப்பட்ட குணங்கள் (TENSION) அலைபடுகின்ற பேதத்தால்… அந்த அலைபடு பேதத்தை நீக்கிடவே…
2.காசினியின் நெருப்பு ஆசினியின் வழி ஓடி மலைவாயின் வழி சொரிதல் போல்
3.தெய்வீக நெறி நின்று வண்ண நிலை கொண்ட மனத்தின் பாங்கையே கேடுறுத்தும்
4.உலகோதயம் என்னும் அலைபடுபேதத்தைப் “பிடர் வழி போக்கிவிடு…”

எப்படி…?

“உந்துவிசை குணங்கள்” (தியானத்தின் மூலம் உந்தி எடுக்கக்கூடிய நல்ல எண்ணங்கள்) எண்ணியது எண்ணி ஆங்கு நிகழ்த்தப் பெறும் செயல்திறத்தால்
1.எடுக்கப்படும் உயர் குணத்தன்மைகள்… கொடுக்கப்பெறும் நற்குணங்களின் பிடர்தல் எனும்… “உந்துவிசையின் வழி”
2.மனதினை அலைக்கழிக்கின்ற அந்தப் பேதங்களைப் போக்கும்… சமன்படுத்தும்.

போகும் என்பது செயல்வழி போக்கும் என்பதே முயற்சி வழி.

ஆனால் சமன்படுத்தாதபடி… அலைபடு பேதத்தின் செயல்வழியாய்ச் சென்றிடுங்கால்… அலை கடலில் துடுப்பற்ற படகு தத்தளிக்கின்ற நிலைக்கு… அந்தந்தக் குணங்களின் ஆவேச உந்துதல் தன் வழியில் பற்றி இழுத்து நல்ல குணங்களைக் கேடுறுத்தும்.

ஆகவே… படகை (வாழ்க்கையை) நீ எங்கு செலுத்திட விரும்புகின்றாயோ அந்த இடத்திற்குச் செலுத்திட
1.“முயற்சி எனும் துடுப்பிட்டு” அலையைத் தணிவாக்கி
2.விரைந்து செலுத்தப்படுகின்ற தன்மையில் நிலை பெற்று நின்று வாழ்ந்திட எமது ஆசிகள்… அத்திரி மாமகரிஷி…!