ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 4, 2023

அக்ஷி

முன்பு ஒரு காலத்தில் காசியம்பதியில் விறகு சுமந்து விற்று ஜீவனம் செய்து வந்தவர் வேண்மா என்ற பெயர் கொண்டவர். காசி நகர் சக்தியாகச் செயல்படும் அன்னபூரணியை மானசீகமாகப் பூஜித்த அன்பன் அவன்.

“விஸ்வேஸ்வரர்” வேண்மாவில் செயல் கொண்டு “அக்ஷி முறை” வகுத்துத் தந்த வழி இன்று “குண்டலினி” யோகப் பயிற்சியாக…
1.அந்த முறையும் இந்த முறையும் ஒன்றெனக் கூறி
2.பொருள் ஈட்டும் செயலாகப் பேராசை வலையில் சிக்கித் திகழ்கின்றனர்.

விஸ்வேஸ்வரர் சூட்சுமமாய் வேண்மாவில் செயல் கொண்டு அன்றைய காலகட்டத்தில் “சம்பூத் தீவாக” வழங்கி வந்த அத்தீபகற்பத்தில் அக்ஷியை உபதேசித்தார்.

அவர் “கல்லால சித்தன்” எனப் பெயர் பூண்டு காட்டிய வழி இன்றும் திபெத்திய பீடபூமியில் சீடர்கள் வழி கூற வந்த “லாமாக்கள்” என்று பெயரிட்டே அவர்கள் தம் வசம் இன்றும் செயல் கொண்டு செயல்படுத்தி... மறைக்கப்பட்டு... பேரின்ப லயத்தை தியானத்தின் வழியாகச் சித்தன் நிலை கைகொள்கின்றனர்.

சரீரத்தில் ஓடிடும் சுவாச நாடிகள் (காற்று நூல்) மகரிஷிகளால் காட்டப்பட்டதை ஏற்கனவே உணர்த்தி உள்ளோம். சுவாசங்கள் ஓடிடும் அந்தந்தக் காலகட்டத்தில் “அந்நாடிகளின் வழி எண்ணிடல் வேண்டும்” என்று எத்தனை பேர்களுக்குச் சொல்கின்றாய்…?

எண்ணல் வேண்டும் என்கிறாயே அது என்ன…?
1.நீ கூறுகின்ற வழியே தான் இன்னும் ஒரு படி மேலாக “அகக் கண்ணால் கண்டு”
2.அந்தந்த இடங்களின் சக்தியை… சக்தியின் செயல்பாட்டையும்
3.சிரசின் உச்சிக்கே அகக்கண் கொண்டு நகர்த்தி
4.மேலெழும்ப வைத்திடும் செயலில் கிடைத்திடும் பேரானந்தம்
5.நீங்காமல் நின்று நிலை பெற்றிருக்க அனுபவித்தலே “அக்ஷி…”

அதற்கும் மேலாக ஆத்ம பலம் கூட்டிடும் தத்துவார்த்த உபதேசமாக
1.“யக்ஞம் வேதாள மாமகரிஷி” அன்று முன் மொழிந்ததை
2.இந்த உலகினுக்கு இக்கலியில் மொழிய வந்திருக்கின்றோம்.

அவைகள் முற்றுப் பெறவில்லை. நீங்கள் அருந்த வேண்டிய ஞானச் சுடர் விளக்கம் எத்தனையோ உண்டு.

1.மூலாதாரம் முதல் கொண்டு உச்சி வரை ஒவ்வொரு இடமாக ஒளித்தன்மையைச் சித்தித்தே
2.விழிப்பார்வை கொண்டு எண்ணிப் பிறக்கும் அக்ஷி ஜோதியை… ஆகாய லிங்கத்தைக் காண்பதே சித்தன் நிலை…!

சரீரம் முழுக்க காந்தத்தின் புலன் உணர்வுகளால் தாக்க (உடல் உறுப்புகள் தியானம்) ஆத்ம பலம் கூட்ட அறிந்து கொள். அறிந்ததைத் தெரிந்ததே மெய்ஞானச் சுடராகும் வழி.