3/04/2018

உங்களுக்குள் ஒரு நல்ல மன மாற்றத்தைக் கொண்டு வருகின்றோம்


இன்று விஞ்ஞானம் நிரூபிக்கிறது. எத்தனையோ உயிரினங்களின் ரூபங்களை மாற்றுகின்றனர். மனிதன் ஆறாவது அறிவு கொண்டு எத்தனையோ விதமான மிருகங்களை மாற்றுகின்றார்.

முதன் முதலில் அகஸ்தியன் தாவர இனங்களை மாற்றினான். தனக்குகந்த காட்டு விலங்குகளை மாற்றினான். அதன் வழி மக்கள் அவன் நிலை வந்தனர்.

அகஸ்தியனுக்குப் பின் இன்று விஞ்ஞானிகள் எத்தனையோ நிலைகள் கொண்டு பல முறைகள் கொண்டு பல மாற்றங்களைக் கொண்டு வருகின்றனர்.

ஆகவே இந்த உலகில் நாம் வாழ்கிறோம் என்ற நிலைகளில் நினைவை வைத்து
1.இன்று விஞ்ஞான உலகில் வாழ்கின்றோம்.
2.ஆனால் அஞ்ஞான வாழ்க்கை தான் வாழ்கின்றோம்.

விஞ்ஞானி எவ்வளவோ புதிது புதிதாகக் கண்டுபிடித்தாலும் அவர்கள் குடும்பத்தில் நிம்மதி இருக்கிறதா…? செல்வந்தர்கள் செல்வத்தைத் தேடிய பின்பு அவர்கள் குடும்பத்தில் நிம்மதி இருக்கிறதா?

பொருள் செல்வத்தின் மீது தான் குறி வருகிறதே தவிர அருள் செல்வத்தின் மேல் யாருக்கும் நாட்டம் வருவதில்லை.

1.அருள் செல்வத்தை வேண்டினாலும்
2.தெய்வீகப் பண்பு என்று கேட்டு…!
3.தன் உடலின் இச்சைக்காக அந்த ஆசையைத்தான் வேண்டி நாம் எடுக்கிறோமே தவிர
4.உடலில் வரும் தீமையான ஆசைகள் நீங்க வேண்டும்
5.”அருள் ஒளி பெற வேண்டும்…” என்று நாம் யாரும் எண்ணுவதில்லை.

தியான வழியில் உள்ள அன்பர்கள் கூட சிலர் அத்தகையோர் உண்டு.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு அருள் உணர்வுகளைப் பெருக்கி உலகை இருளிலிருந்து மீட்டிடும் அருள் ஞானிகளாக நீங்கள் ஆக வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளை அருள் ஞானக் குழந்தைகளாக உருவாக்க வேண்டும்.

திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். ஒவ்வொரு நொடிக்கு நொடியும் இந்த உணர்வுகளின் மனம் மாறிக் கொண்டே இருக்கும் உங்களில்
1.எதன் வழி கொண்டு உங்கள் உணர்வுகள் மாறுகின்றதோ
2.அதை திசை திருப்பத்தான்
3.மெய் ஞானிகளின் உணர்வை அடிக்கடி பாய்ச்சி அந்த உணர்வை இணைத்துக் கொண்டுள்ளோம்.

சில பேர் உபதேசம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே எங்கெங்கோ போய்க் கொண்டிருப்பார்கள்.

அவர்களுக்கும் திருப்பி மகரிஷிகளின் உணர்வைச் செலுத்தி அதன் வழி அவர்களை வாழ வைப்பதற்குத் தான் இதைச் செய்கின்றேன்.