ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 1, 2018

மன வலிமை கொண்ட “காந்திஜி” உண்மையான ஆன்மீகவாதி


சாமி (ஞானகுரு) ஆன்மீகவாதி அல்லவா…! ஆன்மீகத்தைப் பேசும் போது எப்படி அரசியல் எப்படிப் பேசுகின்றார் என்று சிலர் எண்ணுகின்றார்கள்.

காந்திஜி உண்மையான ஆன்மீகவாதி. வலிமை பெற்றவர்….

அந்த வலிமை இருந்தால் தான் நம் உயிர் மனிதனாக வளர்க்கும் போது பகைமை உணர்வுகளைள் நமக்குள் வளர்த்திடாது
1.நம்மைக் காக்க முடியும்.
2.நாட்டைக் காக்க முடியும்.
3.நாம் மனிதன் என்ற முழுமையையும் அடைய முடியும்.

அனைவரும் ஒன்று சேர்த்தால் தான் மகிழ்ச்சி. அப்படிப்பட்ட மகிழ்ச்சியான உணர்வை வளர்க்கப்படும் போது தான் பிறவியில்லா நிலைகள். தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

சாமியாராகப் போன நான் (ஞானகுரு) எப்படி அரசியலைப் பேசுகின்றேன் என்று எண்ண வேண்டாம்…!
1.நான் அதிலே சேவை செய்தவன்.
2.காங்கிரஸில் தொண்டனாகச் சேர்ந்தவன்… அடிபட்டவன்…!
3.“நான் அடிபட்டவன்” என்று இப்போது (02.10.1997 அன்று உபதேசித்தது) சொல்கின்றேன்.

“அடிபட்டது” என்று அந்த நேரத்தில் யாரிடமும் நான் சொல்லவில்லை. சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்றும் சொல்ல வேண்டியதில்லை.

வினாக்கள் வரும் என்பதற்காகத் தான் இதைச் சொல்கின்றேன். காந்திஜி வழியில் செயல்பட்டவன்.

அந்த ஞானிகளின் அருள் ஒளி கொண்டு நம்மை அறியாமல் இயக்கும் தீமையிலிருந்து நாம் விடுபடல் வேண்டும்.

1.காந்திஜியின் நினைவைக் கொண்டு வந்தால்
2.நம் மனித வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபடும்
3.அந்த ஆன்மீக வலிமை கிடைக்கும்.
4.அத்தகைய வலிமை இருந்தால் தான் நாம் அருள் ஒளியைப் பெற முடியும்.

அந்த வலிமை இல்லை என்றால்
1.ஒன்றை நாம் எதிர்பார்ப்போம்…!
2.நடக்கவில்லை என்றால்… வலிமை இல்லை என்றால்…
3.நான் கொடுத்த சக்தியை நீங்கள் இழப்பீர்கள்.
4.நல்ல உயர்ந்த குணங்களை இது தாழ்மைபடுத்தும்.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள்தல் வேண்டும் என்பதற்காகத்தான் காந்திஜியின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

நம் உடலுக்குள் நம்மை அறியாது இயக்கும் பகைமையான உணர்வுகளிலிருந்து விடுபட காந்திஜியின் நினைவை நாம் கொள்தல் வேண்டும். காந்திஜியை எண்ணிப் பாருங்கள்…!
1.மனம் அமைதி பெறும்
2.சாந்தமும் விவேகமும் கிடைக்கும்.