மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்
எமக்கு (ஞானகுரு) உபதேசித்தது போல அதையே தான் உங்களுக்குள்ளும் முழுமையாகப் பதிவு
செய்கின்றேன்.
பதிவு செய்ததை வளர்க்க வேண்டும்
என்றால் உங்களுடைய நினைவின் ஆற்றல் கொண்டுதான் அதைச் செயல்படுத்த முடியும்.
1.சாமிக்கு என்னமோ சக்தி இருக்கிறது...!
2.அதனால் தான் அவர் அதைச் செய்கிறார்... இதைச் செய்கிறார்...!
3.நமக்கு எங்கே...! அதெல்லாம் முடியும் என்று உங்களைத்
தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
4.நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பெற முடியும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் (வெளித்
தோற்றத்தில்) ஒரு பித்தனைப் போல தான் இருந்தார். குப்பைக்குள் மறைந்திருக்கும்
சத்தினை எடுத்துத் தாவர இனங்கள் செழித்து வளர்வது போலத்தான் அவரின் நிலைகள்.
1.குருநாதர் பித்தனைப் போன்று இருந்தாலும்
2.எண்ணிலடங்காத விண்ணுலக ஆற்றலைத்
3. தனக்குள் சத்தான உணர்வுகளாக வளர்த்துக் கொண்டவர்.
அத்தகைய உணர்வின் சொல்லே எமக்குள்
ஆழப் பதிந்தது. அதனின் நினைவின் ஆற்றலால் எனக்குள் வரும் தீமைகளையும் அகற்றிட
முடிந்தது.
இதைப்போல ஒருக்கிணைந்த நாம்
அனைவரும் அவரைப் பின்பற்றினால் அந்த மகா ஞானிகளின் உணர்வுகளைப் பெற முடியும்.
ஒரு நூலால் (தனித்து) ஒன்றும் செய்ய
முடியாது. பல நூல்களை இணைத்து அதை கயிறாகத் திரித்தால் கடினமான பொருளையும் தூக்க
முடிகின்றது.
இதைப்போல தான் நாம் அனைவரும்
ஒருக்கிணைந்த நிலையில் உணர்வுகளைத் தூண்டி அருள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற
வேண்டும் என்று
1.அந்த ஏக்க உணர்வுடன் நாம் தியானித்தோம் என்றால்
2.பல நூல்களைக் கயிறாகத் திரித்து வலுவான பொருளைத் தூக்குவது
போல
3.மகரிஷிகள் விளைய வைத்த பேராற்றல்களை நாம் அனைவரும்
எடுத்துக் கொள்ள முடியும்.
இதை ஏன் அவ்வாறு சொல்கிறோம் என்றால்
1.மகரிஷிகள் இந்த பிறவிக் கடனை அறுத்துச் சென்றவர்கள்
2.அவர் உணர்வுகளை அணுக வேண்டும் என்றால் நம் எண்ணத்திற்கு
அந்த வலு கிடையாது
3.ஒரு மனிதன் தனித்து எண்ணும் போது அதற்கு வலுவில்லை.
ஆகவே ஒருக்கிணைந்த நிலையில் பல
ஆயிரம் பேர் சேர்ந்து அருள் ஞானியின் உணர்வுகளைப் பெறும் கிளர்ச்சியை
ஊட்டுகின்றோம்.
அந்தக் கிளர்ச்சியின் உணர்வுகள்
உங்களுக்குள் வலு பெறச்செய்து அதனின் எண்ணத்தால் இயங்கி நமக்கு முன் சுழன்று
கொண்டு இருக்கும் மகரிஷியின் அருள் ஒளியை ஏகோபித்த நிலைகளில் நாம் கவர்தல் வேண்டும்.
அப்பொழுது அவரவர்கள் எண்ணிய
வலுவிற்குத்தக்க அந்த மகரிஷிகள் விளைய வைத்த அந்த ஆற்றல் மிக்க சக்தி நம்
ஆன்மாவில் கலந்து நாம் தியானிக்கும் சுவாசத்திற்குள் உட்புகுந்து நமக்குள்
வளர்ச்சி பெறத் தொடங்குகின்றது.
1.அவ்வாறு ஒருக்கிணைந்து தியானித்த பின்
2.மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்திருக்கும்
எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நிலையில்
3.வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் அவர்கள் பெற வேண்டும்
4.பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் அவர்கள் பெற வேண்டும்
5.அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவர்கள் வாழ வேண்டும்
என்று
6.ஏகோபித்த நிலையில் அந்த உணர்வின் அலையை நாம் பாய்ச்ச
வேண்டும்
அவ்வாறு வெளிப்படுத்தும் போது “நலம் பெற வேண்டும்...”
என்ற ஏக்க
அலைகளை ஒவ்வொருவரும் நாம் எடுக்கின்றோம். இதைத்தான் கீதையிலே “நீ எதை நினைக்கின்றாயோ... நீ அதுவாகின்றாய்...!” என்று சொல்லப்பட்டது.
1.நீங்கள் நலம் பெற வேண்டும் என்று நான் எண்ணினால்
2.அந்த உணர்வின் சக்தி எனக்குள் அதுவாகி
3.நலம் பெறச் செய்யும் சக்தியாக நான் செயல்படுகின்றேன்.
அதே போல நீங்களும்
1.நான் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நீங்கள் செயல்படும்
போது
2.அந்த நலம் பெறும் சக்தி உங்களுக்குள் விளைந்து
3.நீங்கள் அதுவாகி எனக்கு நன்மை செய்கின்றீர்கள்.
ஆகவே மகரிஷிகளின் உணர்வுடன் ஒன்றி
என்றும் நிலையான ஒளிநிலை பெறும் அந்தத் தகுதியைப் பெறும் நோக்குடன் தான் மாமகரிஷி
ஈஸ்வரபட்டாய குருதேவர் காட்டிய அருள் வழியில் இதை உபதேசிக்கின்றோம்.
அவர் காட்டிய அருள் வழியில்
தியானித்து அந்த அருள் மகரிஷியின் அருள் சக்திகளை நாம் அனைவரும் பெறுவோம்...!