இன்றும் வீடுகளில் மாட்டுச் சாணத்தை மெழுகுகின்றார்கள்.
நாம் வெளியிலே சென்று வீட்டுக்குள் வரும் பொழுது அந்த மாட்டுச்
சாணத்தில் மிதித்தால் நம் காலில் ஒட்டிக் கொண்டிருக்கும் சில விஷக் கிருமிகளை அதை வீரியமிழக்கச்
செய்து உடலுக்குள் போகாதபடி தடுத்துவிடும்.
இதற்காகத்தான் மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகச் செய்தார்கள்.
ஆனால் இன்று கெமிக்கலை வைத்து சாணப் பவுடரைத் தயாரிக்கின்றார்கள்.
மாட்டுச் சாணம் போல் நிறமாக இருக்கின்றது.
கெமிக்கலை வைத்து உற்பத்தி செய்த அந்த விஷமான பவுடரை வீட்டிலே
மெழுகினால்
1.சிறு குழந்தை தெரியாமல் அந்தத் தரையை நக்கினால் போதும்…!
2.குழந்தைக்கு நோய் தன்னாலே வரும்
3.அதிகமாகச் சாப்பிட்டால் மரணம் தான்
அந்தச் சாணப் பவுடரைச் சாப்பிட்டு ரொம்பப் பேர் தற்கொலை செய்திருக்கின்றார்கள்.
இப்பொழுதும் நீங்கள் பத்திரிக்கைகளில் பார்க்கலாம்.
இதுவெல்லாம் “நாகரீகம்…! எந்த அளவில் இருக்கின்றது….?” என்று
தெரிந்து கொள்ளுங்கள். நன்றாக யோசனை செய்து பாருங்கள்.
நம் ஞானிகள் நமக்குக் காட்டிய நல்ல வழிகளை விட்டு விட்டோம்.
நம்மைக் காக்கும் நிலை இல்லாது அழகு நாகரீகம் என்ற நிலையில் தீமைகளைத்தான் தேடிக் கொண்டுள்ளோமே
தவிர தீமைகளை நீக்கும் நெறிகள் இல்லை.
குருநாதர் எமக்கு உணர்த்திய உண்மைகளைச் சொல்கின்றோம். உங்களைக்
காத்து உடலுக்குப் பின் அடைய வேண்டிய மார்க்கத்தைக் காட்டுகின்றோம்.
எடுத்துக் கொண்டால் உங்களுக்கு நல்லது…!