ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 31, 2018

அகஸ்தியனும் அவர் மனைவியும் வாழ்ந்த வாழ்க்கை நாங்கள் வாழ வேண்டும்


விஞ்ஞான அறிவால் ராக்கெட்டை விண்ணிலே ஏவி இங்கிருந்து ஒலி/ஒளி அலைகளைப் பாய்ச்சி அதனின் மோதலின் தன்மை கொண்டு அதனுடைய நாத சுருதிகளைத் தனக்குள் எடுத்து அதனுடைய வேகமும் அதனுடைய பொறியின் தன்மையும் விஞ்ஞானி கண்டறிகின்றான்.

இதைப் போலத் தான் நீருக்குள் இருக்கும் விஷக் கிருமிகளை அறிவதற்கு அழுத்தமான நஞ்சினை (ஆற்றலை) பாய்ச்சுகின்றார்கள். அவ்வாறு பாய்ச்சப்படும் போது நீரினைப் பிளந்து அதனுடைய உள்கூறுகளைக் காட்டுகின்றது.

அதை வைத்து அவர்கள் அந்த நீரையே நன்னீராக மாற்றுகின்றார்கள். அதனுடைய அழுத்தத்தையும் விஞ்ஞான அறிவில் கண்டு கொள்கின்றான்.

ஆனால் மெய் ஞானியோ உப்பு நீராக இருந்தால் தன் பார்வையால் பாய்ச்சும் உணர்வு கொண்டு அதை நன்னீராக மாற்றி விடுகின்றான்.

மெய் ஞானியான அகஸ்தியன் அவன் செல்லும் பாதையிலே எங்கே சென்றாலும் தன் உணர்வினைப் பாய்ச்சி தனக்கு வேண்டிய நன்னீரைத் தேடிக் கொள்கின்றான்.

காடு மலைகளில் செல்லபடும் பொழுது அவன் அமர்ந்த இடங்களில் மேகக் கூட்டத்தைத் தனக்குள் கவர்ந்து அங்கு நீராக மாற்றித் தன் வளர்ச்சிக்குண்டான நிலைகளைச் செய்கின்றான்.

1.வழுக்குப் பாறைகளாக இருக்கும்… உயிரினங்களே வராத நிலையும் இருக்கும்…!
2.அத்தகைய பாறையில் அகஸ்தியன் அமர்ந்திருந்தால்
3.அது மேகக் கூட்டங்களை இழுத்து நீராக அங்கே வடியும்.

அகஸ்தியன் சென்ற பாதைகளில் மேகங்களை இழுத்துப் பாறைகளுக்குள் நீராகப் மாற்றி பெரும் நீரோடையாக ஜீவ நதியாக ஓடும் நிலைகளும் இங்கு உண்டு. இவை எல்லாம் புவியியலின் மாற்றங்களே…!

“உயிரியலின் மாற்றங்களில்…” இதைப் போன்று ஒருவன் வேதனைப்படும் உணர்வைக் கவர்ந்தால் நமக்குள் சிதைவுண்ட உணர்வின் நிலைகளும் எதிர் நிலை போன்று பல பல நிலைகளும் உருவாகின்றது.

1.அந்தச் சமயத்தில் மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால்
2.மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் ஊடுருவி
3.அந்தத் தீமையான உணர்வுகளை மாற்றி
4.நன்மை பயக்கும் அணுக்களாக நமக்குள் மாற்றி விடுகின்றது.

கணவன் மனைவி இருவரும் இதைப் போன்று உயர்ந்த நிலைகளை எடுத்து ஒவ்வொரு நிலைகளிலும் அந்த மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறவேண்டும் என்று
1.உயிரின் ஈர்ப்பால் உடலில் வளர்ககப்பட்ட அணுக்களில் பரவச் செய்து
2.மெய் ஞானிகள் தன் பார்வையால் நந்நீராக மாற்றுவது போல்
3.அகஸ்தியன் ஜீவ நீரை உற்பத்தி செய்வது போல்
4.உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் உணர்வாக மாற்றி ஒளியின் சுடராக ஆகலாம்.