ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 9, 2018

சொல்லும் சொல் ஒன்றாக இருந்தாலும் சொல்லிற்குள் மறைந்திருக்கும் “உணர்ச்சிகள்…” எப்படி இயக்குகின்றது என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்…!

 

1.வாருங்கள்…! வாருங்கள்…! என்று கூப்பிடுகின்றேன்.
2.ஆனால் “வாங்க…ஆ…!” என்று கொஞ்சம் அழுத்தமாகக் கூப்பிட்டால் என்ன சொல்வீர்கள்…?
3.என்ன இப்படி “வெடுக்…” என்று கேட்கின்றார்…! என்று தான் சொல்வீர்கள்.
4.அதே சொல் தான். ஆனால் அந்தச் சொல்லிற்குள் இந்த உணர்ச்சிகள் இப்படித்தான் இயக்கும்.

இனிமையாக இருந்தால் மகிழ்கின்றோம். அழுத்தமாகும் பொழுது எரிச்சலாகின்றது.. வெறுக்கச் செய்கின்றது…!

அப்பொழுது எது நம்மை இயக்குகின்றது…?

உதாரணமாக கண்ணாடி தெளிவாகத் தெரிகிறது. தட்டினால் உடைந்து போய்விடும். அதில் பெயரை அடிக்க (எழுத) வேண்டும் என்றால் அதற்குத் தகுந்த அடி கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அதில் எழுத முடியாது.

கண்ணாடி உடைந்து போனதென்றால் எழுதி என்ன செய்வது…?

அதே மாதிரி நமது ஆன்மா என்பது ஒரு “கண்ணாடிக்குச் சமம்” தான். அதில் வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் கலந்தால் அழுக்காகப் படிந்துவிடும். நல்ல குணத்துடன் கலந்து அழுக்கடைந்து விடும்.

அதற்கு அப்புறம் சிந்திக்கும் தன்மை இருக்காது.

வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அந்த உணர்வைக் கவரும் போது நம் ஆன்மா அழுக்கடைந்து விடுகிறது. மீண்டும் மீண்டும் அவரை எண்ணி “இப்படிக் கஷ்டப்படுகின்றாரே…!” என்று எண்ணினால்
1.அப்போது நாம் மீண்டும் அழுக்கைத்தான் சேர்க்கின்றோமே தவிர
2.அதைத் துடைத்துப் பழகுகின்றோமா… என்று சிந்தித்துப் பாருங்கள்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகள எடுத்து நம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு மகரிஷிகளின் அருள் சக்தியால் உன் வேதனைகள் அகலும். நீ நலம் பெறுவாய்…!

ஆகவே “இப்படி வேதனைப்பட்டுக் கொண்டு இருக்காதே…”என்று அவரிடம் சொல்லித் துடைத்து விட்டோம் என்றால் தன்னை உணரக்கூடிய சக்தி இருக்கும்.

உதாரணமாக நாம் கடையில் வியாபாரம் செய்யும் பொழுது என்ன செய்கிறோம்…?
             
ஒரு கடன்காரன் வந்து என்ன… கடனுக்குக் கொடுக்க மாட்டீர்களா…? என்று கேட்டு விட்டுப் போகின்றான்.

உடனே அவன் மீது வெறுப்பு வருகின்றது. வேதனை என்ற உணர்ச்சி வருகிறது.
1.“சுருக்… என்று கேட்டுவிட்டுப் போகின்றான் பார்…! என்று வரும்.
2.விஷம் என்ற நிலைகள் நம்மை இயக்குகின்றது.

கடனுக்குக் கொடுத்தாலும் பணம் திரும்ப வரவில்லை என்ற நிலையில் வெறுப்பு வருகின்றது. கடனுக்கெல்லாம் இப்பொழுது சரக்குக் கொடுப்பதில்லை. “ஒன்றும் முடியாது… இல்லை…!” என்று சொல்வோம்.

ஆனால் முதலில் கடன் கொடுத்துப் பழகிவிட்டோம். கடன் கொடுத்துப் பழகியது இப்பொழுது வெறுப்பாகச் சொல்லும் பொழுது என்ன ஆகும்…?

அடுத்த கடையில் கடன் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். இப்படி நம்முடைய வாடிக்கையாளர்கள் எல்லாம் அங்கே போய்விடுவார்கள். அங்கே போனவுடனே அவனுக்குச் சரியான நேரத்தில் பணத்தைக் கொடுப்பார்கள்.

நம்மை எண்ணும் பொழுது “இவன் நம்மை வெறுத்தான் அல்லவா…! இவனுக்கு என்ன கடனைத் திருப்பிக் கொடுப்பது…? என்ற நிலையில் தான் வருவார்கள்.

வெறுப்பின் தன்மையால் இந்தக் கடனைக் கொடுக்க மாட்டார்கள். இது இயற்கை.
1.சில சந்தர்ப்பம் நாம் நுகரும் உணர்வுகளில் இப்படி நடக்கும்.
2.இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

இப்படி வெறுப்புகள் வளர்ந்த பின் அடுத்தாற்போல் நன்றாகக் காசு கொடுத்துப் பொருளை நல்ல முறையில் வாங்குகின்றவர்கள் நம்மிடம் வியாபாரத்திற்காக வருவார்கள்.

சரக்குக் கேட்டு நம்மிடம் அவர் விசாரிக்கும் போது அவருக்குப் பதில் சொல் நம்மிடம் சரியாக வராது. அவருக்குச் சரக்கு எடுத்து கொடுக்கப் போகும் போது சரியான பதில் வராது.

1.அவர்கள் ஒன்றைக் கேட்டு கொண்டிருப்பார்கள்.
2.ஆனால் நாம் அந்த வெறுப்படைந்த நிலையில் சாமானை எடுத்துக் கொடுப்போம்.
3.பார்க்கலாம் சில சமயங்களில்… நாம் வெறுப்பாகி விட்டால்…
3.உப்பு என்பதற்கு பதில் “பப்பு…!” என்று சொன்ன மாதிரி
4.ஏதாவது ஒன்றை நாம் பேசுவோம்.

என்னங்க…! நான் என்ன கேட்கிறேன்…? நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்..! எடுத்துக் கொடுக்கின்றீர்கள்…? என்பார் வாடிக்கையாளர்.

இரண்டு தரம் நம்முடைய உணர்வுகள் மாறி வந்தவுடனே சொன்னவுடனே என்னவாகின்றது..?
1.விஷயத்தைச் சொல்லிச் சொல்லாதபடி…
2.எதையோ கேட்டுக் கொண்டு இருக்கின்றாய்…! என்று அவரிடம் நாம் வம்பு செய்வோம்.
4.அவர்கள் சொல்வது நம் காதில் கேட்காது. அவர்களைக் குற்றவாளியாக ஆக்குவோம்.

“தறி” நெய்கின்றவர்களை எடுத்துக் கொண்டோம் என்றால் கொஞ்சம் வெறுப்பாகி விட்டால் போதும். நிச்சயம் ஒரு பக்கத்தில் நூல் அறுந்து கொண்டே போகும்.

கண்ணுக்கு முன்னாடியே ஒரு நூல் அறுந்து இருக்கும். நூல் அறுந்தது நமக்குத் தெரியாதபடி வெறுப்பிலேயே இருப்போம். அது மேலும் சிக்கலாகி விடும்.

ஏனென்றால் வெறுப்பான உணர்வு இருக்கும் போது எதிரில் இருக்கும் அறுந்த நூலைப் பார்க்க முடியாது.

நீங்கள் அவசரமாகப் போக வேண்டும் என்று மட்டும் எண்ணிப் பாருங்கள். கையில் சாமானை வைத்துக் கொண்டே இருப்பீர்கள்.

ஆனால் அதைக் காணோம்…! காணோம்…! இங்கே தானே வைத்தேன்.. எப்படிக் காணாமல் போகும்…? என்று சொல்லி வீட்டில் சண்டைக்குப் போவோம்.

நாம் வெளிப்படுத்தும் பதட்டத்தைப் பார்த்து உங்கள் கையில் தான் இருக்கிறது என்று அவர்களும் சொல்ல மாட்டார்கள். “சரி… காணோம்..! எங்கே போய்விட்டதோ… என்று இவர்களும் சேர்ந்து தேடிப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

கடைசியில் அமைதி ஆன பிற்பாடு “ஐய்யய்யோ…! நான் கையில் வைத்துக் கொண்டு இருக்கின்றேன்…” என்பார்கள்.

சொல்கிறது அர்த்தம் ஆகிறதல்லவா…!

அப்பொழுது நம் கண்ணுக்கு முன்னாடி இருப்பதை இருளச் செய்வது எது…?
1.நம்மை அறிய விடாமல் செய்வதும்
2.அறிந்த நிலையில் செயல்படுத்துவதும்
3.”நாம் நுகர்ந்த உணர்வு தான்…!”

நாம் நமது வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் இருள் சூழச் செய்யும் உணர்வுகளை எல்லாம் துடைத்துப் பழக வேண்டும்.

அகஸ்தியன் எப்படி ஒவ்வொரு இருளையும் மாய்த்து ஒளியின் தன்மை பெற்றானோ அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் ஒவ்வொரு நிமிடமும் எடுக்க வேண்டும்.

எல்லா உணர்வுகளுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கலக்கச் செய்யும் பரிபக்குவ நிலை பெற வேண்டும். நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபடும் “மெய் ஞானம்” நமக்குக் கிடைக்கும்.

அதன் வழி நாம் செயல்படுத்தும் பொழுது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மகிழ்ந்து வாழ முடியும். உங்களால் முடியும்…!