வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் தியானமிருக்க வேண்டும். அதாவது
வாழ்க்கையே தியானம் ஆக்க வேண்டும்.
எப்படி…?
உட்கார்ந்து உட்கார்ந்து மணிக்கணக்காகச் செய்து கொண்டு இருப்பது
தியானம் அல்ல. இது தியானம் ஆகாது.
ஏன்…?
நீங்கள் தியானத்தை முடித்துவிட்டு வேறு வேலைக்குப் போகின்றீர்கள்.
அடுத்தாற்போல தீடீரென ஒரு ஆக்ஸிடென்டோ அல்லது ஒரு மாடோ உங்களை விரட்டிக் கொண்டு வந்தால்
என்ன செய்வீர்கள்…!
“ஆ…” என்று பயந்தால் அது உள்ளே வந்துவிடும். பயத்தையும் அதிர்ச்சியையும்
உடலுக்குள் உருவாக்கி விடும்.
1.இந்த உணர்வு அதிகமானால் அடுத்தாற்போல
2.நீங்கள் தியானத்தில் உட்கார முடியாது.
3.எந்த ஒரு அதிர்ச்சியான செய்தியை கேட்டாலும் இது முன்னாடி
நிற்கும்.
4.அப்பொழுது…, நீங்கள் எப்படித் தியானம் எடுக்க முடியும்…!
எதுவாக இருந்தாலும் எத்தகைய நிலை வந்தாலும் அப்போதைக்கு அப்போது
துடைத்துப் பழகினால் தான் அடுத்து உங்களைத் தியானத்திலே உட்காரவிடும்.
இல்லை என்றால் நிச்சயம் தியானத்திற்கு வர முடியாது.
இந்தக் கான்சன்ட்ரேசன் (CONCENTRATION) அது… இது...! என்று
ஏதேதோ ஆங்கிலத்தில் பேசுவார்கள். ஒன்றும் நடக்காது….
நீங்கள் வருடக் கணக்காகத்
தியானத்தை எவ்வளவு வளர்த்தாலும்..,
1.நான் இவ்வளவு காலம் செய்தேன்…!
2.அப்படித் தியானம் செய்து கொண்டு வந்தேன்… அப்பொழுதெல்லாம்
நன்றாக இருந்தது
3.இப்பொழுது என்னால் “முடியவே இல்லை…,” என்பார்கள்.
ஏனென்றால் எதிர்பாராத விதமாக அதிர்ச்சியோ பயமோ கோபமோ குரோதமோ
மற்றதோ எடுத்தால் அது வலுவானது. நுகர்ந்தது நம் ஆன்மாவில் கலந்து அது வலிமை பெறுகின்றது.
அதனால் உங்களால் முடியாமல் போய் விடுகின்றது.
நான் செய்தேனே… போய்விட்டதே…! செய்தனே… போய்விட்டதே…! என்று
வேதனைப்பட்டு விஷத்தைத் தான் உங்களால் வளர்க்க முடியுமே தவிர அதைப் போக்க முடியாது.
(இது மிகவும் முக்கியமானது)
ஒவ்வொரு நொடியிலும் நாம் கையில் அழுக்கு படுவதைத் துடைப்பது
போலத்தான்
1.நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்போது தீமையைக் காணுகின்றீர்களோ
2.அப்பொழுதெல்லாம் நான் (ஞானகுரு) கொடுத்த அருளை வைத்து
3.”ஈஸ்வரா…….!” என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்
4.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று
புருவ மத்தியில் இணைத்து விடுங்கள்
5.உள்ளே புகாது தடுத்து விடுங்கள்
6.அந்தப் பேரோளியைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்
7.அப்புறம் உடல் முழுவதும் படர்ந்து உடலிலுள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள்
பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்துங்கள்
8.இது வளர வளர இந்த ஆன்மாவிலிருக்கும் தீமைகளைத் (எந்தத் தீமையை
நீங்கள் நுகர்ந்திருந்தாலும்) தள்ளிக்கொண்டே போகும்
9.உங்கள் ஈர்ப்பு வட்டத்திற்கு வெளியில் போய் விட்டது என்றால்
சூரியன் எடுத்துக் கொண்டு போய் விடும்
10.ஆன்மா பரிசுத்தமாகும்…!
அதனால் தான் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் கூடக் கொஞ்ச நேரமாவது
இதை எடுத்தீர்கள் என்றால் ஆன்மா தூய்மை அடைவதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்வீர்கள்.
1.எந்தக் கவலை வந்தாலும்
2.எந்தத் தொல்லை வந்தாலும்
3.எந்தச் சங்கடமாக இருந்தாலும்
4.நீங்கள் மேலே சொன்ன மாதிரி கூட ஒரு ஐந்து நிமிடம் எடுங்கள்.
மேலே வானை நோக்கிக் பாருங்கள். கண்களைத் திறந்து அந்த மகரிஷிகளின்
அருள் உணர்வு பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
கண்களை மூடுங்கள். உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்கள்
பெற வேண்டும் என்று எண்ணுங்கள். இது கொஞ்ச நேரம் இப்ப்டிச் செய்து அதைக் கூட்டிப் பாருங்கள்.
இது உங்களால் சாத்தியம் ஆகுதா…? இல்லையா…? என்று பாருங்கள்.
இப்படித்தான் வாழ்க்கையே தியானமாக்க வேண்டும்.
அப்போதைக்கப்போது நாம் துடைக்கவில்லை என்றால் உடலுக்குள் போய்
அந்தந்த அணுக்கள் பிறந்து விடும். அப்புறம் ஆன்மாவில் அந்த அழுத்தம் கூடி விடும்.
1.தியானத்தில் உட்கார்ந்தால் அவன் அப்படிப் பேசினான்…
2.இந்த மாதிரி அதிர்ச்சி ஆனது…! என்ற அந்த நிலை தான் வரும்.
ஆனால் அதிர்ச்சிகள் மீண்டும் வந்தால் யாம் சொன்ன முறைப்படி
உடனடியாக எடுத்து இதை எடுத்து நீங்கள் மீள வேண்டும்.
உங்களால் முடியும். "இது தான் உண்மையான தியானம்…!"
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுத்த அந்த அருள் சக்திகளை உங்களுக்குள்
பதிவாக்குகின்றோம். திரும்ப எண்ணும் போது அந்த உணர்வின் இயக்கமாக உங்களுக்குள் வரும்.
1.அந்த "அரும் பெரும் சக்தியை” உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
2.ஒவ்வொரு நொடியிலும் உங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கக் கற்றுக்
கொள்ளுங்கள்
3.உங்கள் வாழ்க்கையே தியானமாகின்றது…!