தெய்வச் சிலையைப் பார்த்து உன் காரியங்கள்
நடைபெற வேண்டும் என்றால் கூட்டி அதற்குண்டான மந்திரத்தை நீ இத்தனை தடவை சொன்னால் உனக்கு
இன்ன பலன் உண்டு என்று சொல்லியிருப்பார்கள்.
அதன் வழியில் நாம் பக்தி கொண்டு சிலையைப்
பார்த்து இது தான் முருகன் என்றும் இது தான் காளி என்றும் நாம் மந்திரத்தைச் சொல்லி
அதனின் உணர்வை ஜெபித்து அதைப் பெறவேண்டும் என்ற ஆசையில் ஆழமாகப் பதிவாக்கி விடுகின்றோம்.
இப்படிப் பதிவான உணர்வுகள் நாம் இறந்த
பிற்பாடு என்ன ஆகின்றது...?
எந்தத் தெய்வத்தை எதன் ரூபத்தில் காட்டினார்களோ
அடுத்தவர்கள் அந்தத் தெய்வத்தை ஏங்கிப் பார்க்கும் நிலையில்
1.அதனின் உணர்வின் அலையாக அவர்களுக்குள்
ஈர்க்கப்பட்டு
2.அந்தப் பக்தி கொண்ட ஆன்மாக்களுக்கு
3.நாமே அந்தத் தெய்வமாகக் காட்சி கொடுக்கும்
நிலை வரும்.
எப்படி..?
எந்தச் சிலையைப் பார்த்து மந்திரத்தை ஜெபித்து
எதனின் உணர்வின் அலைகள் எனக்குள் பதிவானதோ உடலை விட்டுச் சென்ற பின் “நான் பார்த்த
அந்தத் தெய்வம்...” அவர்களுக்குக் காட்சியாகத் தெரியும்.
அதாவது கேமராவில் (VIDEO) ஒரு படத்தை எடுத்து
அதை அலைகளாக மாற்றி மீண்டும் திரைகளில் இடப்படும் போது அதே உருவத்தைக் காணுவது போன்று
தெரியும்.
1.பக்தி மார்க்கங்களில் எதனை வழிபட்டு
2.எதனின் உணர்வை எதனை எண்ணி அந்த வழி பெறுகிறோமோ
3.தெய்வத்திற்கு என்னென்ன புஷ்பங்களைப்
போடுகிறோமோ
4.என்னென்ன நிறங்களில் உடைகளை உடுத்துகின்றோமோ
5.இதைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கின்றது
6.கண்ணுற்றுப் பார்க்கும்போது நமக்குள்
படமாகப் பதிவாகின்றது.
7.நுகர்ந்த உணர்வோ உயிரில் படுகின்றது.
8.அந்த உணர்வுகள் உடல் முழுவதும் படர்கின்றது.
ஆசையின் நிமித்தம் அந்தத் தெய்வத்தை வழிபட்டு
அதன் வழிகளில் பெருகி வந்தாலும் இந்த உடலை விட்டுப் பிரிந்த பின் இன்னொரு பக்தி கொண்ட
ஆன்மா இதே போல செய்தால் அந்த ஆன்மா அங்கு சென்று அருளாடும்.
அதே சமயத்தில் மந்திரம் செய்பவர்கள் என்ன
செய்வார்கள்...?
இன்னென்ன மந்திரம் கொண்டு ஜெபித்தால் இந்தத்
தெய்வத்தைக் கைவல்யப்படுத்திக் கொள்ளலாம் என்று மந்திரத்தை ஜெபிப்பான் என்றால்
1.இந்த உணர்வின் தன்மை கொண்டு
2.அதே தெய்வத்தை நாமும் பதிவாக்கியதால்
நாம் வளர்ந்து கொண்ட அந்த நிலைகள் கொண்டு
3.நம் உயிரான்மா அந்த மந்திரவாதி கையிலே
சிக்கும்.
அவன் கையிலே சிக்கிய பின் அவர்கள் செய்யும்
மந்திர வேலைகளுக்குப் பயன்படுத்துவார்கள். அதாவது
1.காட்சிகளாகக் காட்டுவதும்
2.பல தீய வினைகளைச் செய்வதும்
3.பல பொருள்களை வரவழைப்பதும் போன்று
எத்தனையோ வேலைகளைச் செய்து மற்றவரையும்
ஏமாற்றுவார்கள்.
உதாரணமாக ஒரு மனித உடலில் உருவான உணர்வினை
ஒரு தாவர இனத்திற்குள் பதிவாக்கி விட்டால் மீண்டும் இந்த உணர்வினை எண்ணத்தினால் செயலாக்கினால்
அந்த இலை... “அப்படியே நகன்று வரும்...!”
ஒரு தேங்காயை வைத்து மனித உணர்வின் தன்மையைப்
பதிவாக்கிய பின் இந்த உணர்வின் தன்மை அதிலே ஏற்றி அதைச் சுழலச் செய்ய வேண்டும் என்று
எண்ணினால் “தேங்காயே சுழலும்...!”
1.நாம் அனைவரும் இதைக் கண்டு வியந்து
2.அவரிடம் அபரிமிதமான சக்தி இருக்கிறது
என்றும்
3.அவர் சொல்லைக் கேட்டால் தெய்வத்தின்
அருளைப் பெறுவோம்
4.நம் செல்வத்தைப் பெருக்குவோம் என்ற இப்படிப்பட்ட
ஆசைகளில் தான்
5.நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத மக்கள்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதை இல்லை என்று யாரும் மறுக்க முடியாது...!
1.கற்றவரும் சரி... கல்லாதவரும் சரி...
2.தெய்வமே இல்லை... கடவுளே இல்லை என்று
சொல்வோரும் சரி...
3.தன்னைக் காக்க இத்தகைய மந்திரங்களைத்
துணையாகக் கொண்டு
4.”தான் தப்பிக்க வேண்டுமே...!” என்ற இந்த
உணர்வு கொண்டு தான் அலைகின்றனர்.
கடவுள் இல்லை...! என்பதும் கடவுள் இருக்கிறார்...!
என்பதும் தனது நம்பிக்கை எதன் மேல் பற்று கொண்டதோ அதுவே... நமது உடலுக்குள் “கடவுளாகவும்
தெய்வமாகவும் இயக்குகின்றது...!” என்பதை நாம் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.